ஒரு முக்கியமான நேர்காணல்

நியூஸ் 7 சேனலுக்காக உமா மகேஸ்வரன் எடுத்த நேர்காணல் இது.  நேர்காணலின் ஆரம்பத்தில் உமா சொன்னார்.  ஒருவரைப் பேட்டி காணச் செல்லும் போது என்ன கேள்விகள் கேட்கலாம், என்ன கேள்விகள் கேட்கக் கூடாது என்ற do’s and don’t’s ஐ யோசித்துத் தயார் செய்து கொள்வார்கள்.  ஆனால் சாரு விஷயத்தில் டொண்ட்ஸே இல்லை.  சுதந்திரமாகச் செல்லலாம் என்று வந்தேன்.  எந்தக் கேள்வியையாவது தவிர்க்க வேண்டுமா என்று கேட்டார்.  எ-ந்-த-க் கேள்வியாக இருந்தாலும் சரி என்றேன்.  அவர் சொன்னதை எனக்குக் கிடைத்த கௌரமாகவே கருதுகிறேன்.  என் எழுத்தின் ஆதாரம் மானுட சுதந்திரம்.  அதை அவர் புரிந்து கொண்டு விட்டார்.  அவர் மட்டுமல்ல; என்னைச் சந்திக்கும் அத்தனை பேருமே அப்படி ஒரு சுதந்திரமான காற்றையே என்னருகில் உணர்கிறார்கள், சுவாசிக்கிறார்கள்.  என்னுடைய இத்தனை வருட எழுத்து இதை எல்லா வாசகர்களுக்கும் கொண்டு சென்றிருக்கிறது என்பதை அறிந்து சந்தோஷம் அடைகிறேன். நியூஸ் 7 சேனலுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் என் மனமார்ந்த நன்றி.

நியூஸ் 7 சேனலுக்காக உமா மகேஸ்வரன் எடுத்த நேர்காணலின் இணைப்புகள்:

கலகக்காரனுடன் ஒரு சந்திப்பு – சாரு நிவேதிதா

பகுதி 1

பகுதி 2


பகுதி 3

பகுதி 4

பகுதி 5