அந்திமழை என்ற இணைய இதழில் வாரம் தோறும் நிலவு தேயாத தேசம் என்ற தலைப்பில் துருக்கி பயணக் கட்டுரையை எழுதி வருவதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் நான் விசாரித்தவரை என் நெருங்கிய நண்பர்கள் யாரும் அதைப் படிப்பதில்லை என்று அறிந்தேன். காரணம், வாராவாரம் காத்திருக்க முடியவில்லை. முழுசாகப் படிக்க வேண்டும். புத்தகமாக வந்ததும் படித்துக் கொள்ளலாம்.
நண்பர்களே, நீங்கள் பல விஷயங்களை இழக்கிறீர்கள். அந்தக் கட்டுரையில் நான் பல இணைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறேன். அதெல்லாம் புத்தகத்தில் இராது. புகைப்படங்களும் தாளில் கருப்பு கருப்பாகவே வரும். நாம் என்ன ஆங்கில நூல்களைப் போல் 2000, 3000 ரூ விலை வைத்து கலர் கலரான புகைப்படங்களோடா புத்தகம் போடுகிறோம்? என் கட்டுரை இணையத்துக்காகவே எழுதப் படுகிறது. பலப் பல காணொளிகளின் இணைப்பையும் தருகிறேன். உதாரணமாக, சமீபத்தில் இறுதிச் சுற்று வந்தது. நான் படமாகப் பார்க்கவில்லை; வசனப் புத்தகம் வந்ததும் படித்துக் கொள்கிறேன் என்று சொல்கிறாற்போல. என் கட்டுரை படிப்பதோடு கூட பார்ப்பதற்கும் ஆனது. உதாரணமாகப் பின்வரும் கட்டுரை. இந்த வாரக் கட்டுரை இது. இதில் வரும் காணொளிகளை இணைத்திருக்கிறேன். பாருங்கள். இதெல்லாம் நிச்சயமாகப் புத்தகத்தில் இருக்காது.
http://andhimazhai.com/news/view/charu106.html