ஃபெப்ருவரி 27: புத்தக வெளியீட்டு விழா – 2

புத்தக வெளியீட்டு விழா அரங்கத்துக்கு 52000 ரூபாய் ஆனது.  நான் வெளிநாடு செல்வதற்காகக் குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்திருந்த குருவித் தொகையிலிருந்து எடுத்து கொடுத்து விட்டேன்.  ஒரு நண்பர் வெளியீட்டு விழாவுக்காக 20000 ரூ அனுப்பியிருந்தார்.  அதில் 15000 ரூபாயை எடுத்து சொந்த செலவு செய்து விட்டேன்.  அதாவது, ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் 15000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி விட்டேன்.  எனக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்க ஆறேழு நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் மூலம் அந்த நூல்களை வாங்கிக் கொண்டிருக்கலாம்.  ஆனால் அமேஸான் இத்யாதி மூலம் வாங்க இரண்டு மூன்று மாதங்கள் ஆகும்.  மேலும் கிடைப்பதற்கு அரிதான அந்த நூல்கள் கண்ணெதிரே இருந்தன.  அதை எழுதியவர்களும் பக்கத்திலேயே நின்று கொண்டு கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தனர்.  ஆர்வத்தை அடக்க முடியவில்லை.

இப்போது விழா ஏற்பாடுகளுக்கு 50000 ரூபாய் தேவை.  (இதற்குத்தான் விழா வேண்டாம் என்று சொன்னேன்.  நண்பர்கள் கேட்கவில்லை!) இந்தச் செலவை ஆளுக்குக் கொஞ்சமாக (ஆயிரம் ரூபாய் என்றாலும் பரவாயில்லை) ஏற்க நினைக்கும் நண்பர்கள் உதவலாம்.  கீழே வங்கி விபரம் தருகிறேன்.

Account holder’s Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account number: 911010057338057

Branch: Radhakrishnan Salai, Mylapore

IFSC UTIB0000006

MICR CODE: 600211002

***

ICICI account No. 602601 505045

Account holder’s name: K. ARIVAZHAGAN

T. Nagar branch.  chennai

IFSC Code Number: ICIC0006026