விழா பதிவுகள் – 17

டியர் சாரு,
கடந்த வாரம் நடந்த தங்களது புத்தக வெளியீட்டில் நானும் கலந்து கொண்டேன். முதன் முதலில் உங்களை நேரில் கண்டதும் அன்றுதான். இன்னும் என்னால் அந்த பிரமிப்பில் இருந்து மீள இயலவில்லை. சிறு வயதில் எங்களது கிராமத்தின் அருகில் நடைபெறும் தேர்திருவிழா கடைத்தெரு போல இருந்தது. அத்தனை excitement. அத்தனை கொண்டாட்டம். பிற வாசகர்களைப் போல் நிரம்பப் படித்தவனில்லை நான். கொஞ்சம் இலக்கியப் பரிச்சயம் உண்டு. உங்களது அட்டகாசமான எழுத்து நடைக்கு நிகர் பிறிதொரு எழுத்து இல்லை என்று கருதுபவன் நான். பல தருணங்களில் எனது நண்பர்களிடம் நான் சிலாகித்துப் பேசுவதுண்டு. நான் இவ்வுலகைப் புரிந்துகொள்வதை பெரிதும் மாற்றி அமைத்த பெருமை சாருவுடைய எழுத்துக்கு உண்டு என்று. அது மிகையும் அல்ல. அன்று விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஆச்சரியப்படும் ஒன்று உண்டென்றால் அது உங்களைத் தொடரும் இளமைப் பட்டாளம் தான். உதாரணம் பிரபு காளிதாஸ். முகப்புததகத்தில் அத்தனை பலமான notions – ஐ தீர்க்கமாய் நிறுவும் பிரபு, என்னைக் கண்ட முதல் சந்திப்பில் பளிச் என முகம் நிறையப் புன்னகையோடு “ஹாய்.. நல்லா இருக்கீங்களா? Sorry.. i’m little busy” என்று சிரித்தது ஆச்சரியம்.  குறிப்பாக உங்கள் வார்த்தையிலேயே சொன்னால், தமிழ்நாட்டில் இருப்பது ஃபிலிஸ்டைன் கலாச்சாரம்.  இப்படிப்பட்ட ஃபிலிஸ்டைன் கலாச்சார சூழலில் முதல் சந்திப்பிலேயே புன்னகையையும் அன்பையும் வழங்கும் ஒரு தலைமுறையை உருவாக்குவது என்பது எத்தனை மகத்தான செயல்! இதுதான் உங்கள் எழுத்தின் வலிமை சாரு.. எல்லோரையும் போல் நீங்கள் வெறுமனே followers – ஐயோ ஜால்ரா கும்பலையொ உருவாக்கவில்லை.. You’re creating a ‘cult’ here.. Hats off Charu. என்னுடன் வந்திருந்த நண்பர் ஒருவர் விழா முடிந்ததும் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. “மத்த எழுத்தாளர்கள் எல்லாம் ஒரு range பார்த்துதான் பழகுவாங்க.. ஆனா சாரு மட்டும்தான் பாஸ், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம youngsters – ஐ உண்மையா encourage பண்ணுவாரு. அவர சுத்தி இருந்த பசங்களைப் பார்த்தீங்க இல்ல. அதான் சாரு” என்றார். வேறென்ன சொல்ல சாரு. We are and we will always be indebted to you charu.. for everything you’re giving us.
With love,
Prithivi
டியர் பிருத்வி,
தங்கள் அன்புக்கு நன்றி.  ஒரே ஒரு விஷயம் சொல்ல இருக்கிறது.  நான் இளைஞர்களுடன் தான் இளைஞர்களுடன் மட்டும்தான் பழக வேண்டும் என்று திட்டமிடுவதே இல்லை.  அப்படி ஒரு எண்ணமே எனக்கு எழுவதில்லை.  எல்லோருடனும் ஒரே மாதிரிதான் பழகுகிறேன்.  வயதானவர்கள் ஓடி விடுகிறார்கள், குழந்தைகளை இவனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற அச்சத்தில்.  இளைஞர்கள் என் தோளோடு தோள் இணைகிறார்கள்.  என் நெருங்கிய நண்பர்களின் தந்தைமார்களே என் வயதை விட கம்மி என்பது என்னைப் பெரிது ஆச்சரியப்படுத்துகிறது.  உதாரணமாக கணேஷ் அன்புவின் அப்பா என்னை விட இளையவர்.
என்னோடு உரையாடுபவர்களின் வாழ்க்கை சீராகவும் செறிவாகவும் கலாபூர்வமாகவும் இருக்கும்.  இளைஞர்கள் அதைப் புரிந்து கொள்கிறார்கள்.  அவ்வளவுதான்.
நன்றி…
சாரு
IMG_4186