வரும் 12-ஆம் தேதி கோவையில் நடக்க இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் அடியேனும் பேசுகிறேன். இப்போதெல்லாம் கூட்டங்களில் எல்லோரையும் பாராட்டியே பேசுகிறீர்களே, வயதாகி விட்டதா என்று பலரும் கொஞ்சம் கிண்டல் தொனியுடன் கேட்கிறார்கள். திட்டினால் திட்டுகிறார் என்றும், பாராட்டினால் பாராட்டுகிறார் என்றும் புகார் சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. விஷயம் ஒன்றுமில்லை; பிடிக்காத புத்தகங்களைப் பற்றிப் பேசுவதில்லை. அவ்வளவுதான். உண்மையில் விசாரணை பட விழாவில் ஒரு சிறிய அரங்கில் 1000 சினிமா ரசிகர்கள் குழுமியிருந்தார்கள். விசாரணை படத்தைப் பார்த்து விட்டு ஏதோ சாமி வந்தவர்களைப் போல் இருந்தார்கள். அங்கே போய் அந்தப் படம் போலி என்று பேசுவதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும்? அடித்து விடுவார்கள் என்றே நினைத்தேன். லீனா மணிமேகலையிடம் பாதுகாப்பும் கேட்டேன். அவரோ என்னிடம் பாதுகாப்பு கேட்டார். ஆனால் அப்படி எதுவும் அசம்பாவிதம் நடக்கவில்லை. இங்கே வி.மு. இருக்கிறார். எதாவது நடந்தால் அவரிடம் பாதுகாப்பு கேட்கலாம் என்று இருக்கிறேன். இல்லாவிட்டால் சரவணன் சந்திரன். ஏதோ குத்துச்சண்டை வீரராம். கேள்விப்பட்டேன். எனவே பயமில்லை.
கோவையில் உயிர்மையின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா
நாள் 12.03.2016, மாலை 5 மணி
இடம்: ஹோட்டல் விஜய் பாரடைஸ்
NSR சாலை, சாய் பாபா காலனி, கோயம்புத்தூர்
***
ஊழியின் தினங்கள் – மனுஷ்ய புத்திரன்
வலம் – விநாயக முருகன்
ரோலக்ஸ் வாட்ச் – சரவணன் சந்திரன்
என்பது போலொரு தேஜாவூ – ஸ்ரீபதி பத்மநாபா
சிறப்புரை
பாமரன்
ந.முருகேச பாண்டியன்
மனுஷ்ய புத்திரன்
நா.முத்துக்குமார்
’நீயா நானா’ அந்தோணி
இந்து மேனன் (மலையாள் எழுத்தாளர்)
குமரகுருபரன்
கே.வினோத்குமார், தொழிலதிபர்
வினோத் ஆனந்த்
வழக்கறிஞர் எம்.சரவணன்
ஜார்ஜ் ஆன்டனி
ஆர்.சி.தியாகராஜன், ஆர்.ஆர்.பில்டர்ஸ்