புத்தக வெளியீட்டு விழா நடந்த ராஜா அண்ணாமலை மன்றத்தின் கொள்ளளவு 800. அவ்வளவு பேரும் வந்து விடுவார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்த்தேன். அதில் எனக்கு சந்தேகமே எழவில்லை. சென்ற ஆண்டைப் போல் நோட்டீஸ் அடிக்கவில்லை; 70000 ரூ செலவு செய்து நகரம் பூராவும் விளம்பர போர்டுகள் வைக்கவில்லை (காசு இல்லை). தினசரிகளில் சென்ற ஆண்டைப் போல் விளம்பரம் கொடுக்கவில்லை. இந்துவிலும் தினமணியிலும் மட்டும் இன்றைய நிகழ்ச்சியில் வந்திருந்தது. ஆனாலும் 800 பேரை எதிர்பார்த்தேன். அதற்கு இரண்டே காரணங்கள்தான். ஒன்று, உயிர்மையிலிருந்து சென்னையில் வசிக்கும் உயிர்மை சந்தாதாரர்களின் விலாசப் பட்டியல் வாங்கி அவர்களுக்கெல்லாம் அழைப்பிதழை தபால் மூலம் அனுப்பினோம். (செல்வகுமார்தான் இதைச் செய்தார். விழா வேலைகளில் இரண்டு மாதங்களாக தீவிரமாக ஈடுபட்ட அவர் விழாவுக்கு வர முடியாதது துரதிர்ஷ்டம். அவர் ஈடுபட்டிருக்கும் தொழில் அப்படி.) ஜனரஞ்சக சஞ்சிகைகளில் முழுப்பக்கம் விளம்பரம் அல்லது செய்தி வந்தாலும் ரெண்டு பேர் கூட விழாவுக்கு வர மாட்டார்கள். இலக்கிய வாசகர்கள் மட்டுமே இலக்கிய விழாக்களுக்கு வருவார்கள். இது முதல் விதி. ஆனால் யாருக்கு வருவார்கள் என்பதும் முக்கியம். வைரமுத்துவின் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவுக்கு இலக்கிய வாசகர் வர மாட்டார்.
இரண்டாவது விஷயம், என்னுடைய மின்னஞ்சல் முகவரிப் பட்டியலில் உள்ள 2000 பேருக்கு தனித்தனியாக மின்னஞ்சல் செய்தோம். இதைச் செய்தது முத்துக்குமார் என்ற மாணவர். இந்த இரண்டு காரியங்களால்தான் 800 பேர் வந்தனர். இளையராஜா விழா இல்லையெனில் இன்னும் 50 பேர் வந்திருப்பார்கள். பார்த்திபன், ராதாமோகன், தயாரிப்பாளர் ராம்ஜி, நீயா நானா ஆண்டனி, நா. முத்துக்குமார் போன்ற நண்பர்கள் ராஜா விழாவுக்குச் சென்று விட்டனர். ராஜா விழா நடந்தும் இவ்வளவு பெருந்திரளாக வந்திருந்த நண்பர்களுக்கும் இதற்காகப் பாடுபட்ட வாசகர் வட்ட நண்பர்கள் டாக்டர் ஸ்ரீராம், செல்வகுமார், முத்துக்குமார், இம்மானுவெல், அருள், குமரேசன், மதுரை பூர்ணசந்திரன், மதுரை அருணாசலம், மதுரை மனாசே, தில்லியிலிருந்து வந்திருந்த தரணீஷ்வர், கணேஷ் அன்பு, காஞ்சீபுரம் வினோத்குமார், சத்யம் டிவி அர்விந்த் மற்றும் பல நண்பர்களுக்கு நன்றி.
விழா காணொளி, பகுதி 1:
பகுதி 2:
பகுதி 3:
எனது உரை மட்டும் தனியாக:
புகைப்படத்தில் அசோகமித்திரன், ஓவியர் சீனிவாசன்.