ஜெர்மன் செந்தில் என்று ஒரு நண்பரைப் பற்றி ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கோணல் பக்கங்களில் அதிகம் எழுதியிருப்பேன். அவர் ஒரு வாட்ஸப் மெஸேஜ் அனுப்பியிருந்தார்.
”20 ஆண்டுகளுக்கு முன்னர் சாதுக்களோடு பேசிக் கொண்டு இருந்த போது எனக்கு ஒரு மகான் சொன்னது: ஆழமான வாசிப்பு மனதை அமைதிப்படுத்தும். அன்பை வெளிப்படுத்தும். தன்னைப் பண்டிதன் என நிறுவாது. அதிலிருந்து விலகியே செல்லும். ஒரு இரவில் நிறைய சொன்னார். இப்போது உங்கள் கட்டுரையில் அதே குரல்.
ஒரு ப்ராணிக் மாணவனாக உங்களிடமிருந்து வெளிவரும் அமைதியை உணர முடிகின்றது.”
நன்றி செந்தில்…