முகநூலில் சுட்டது…

முகநூலில் உமா ஷக்தி எழுதியது இது.  நன்றி உமா…

என்னுடைய கணினியில் உள்ள அத்தனை புக்மார்க்குகளையும் சில நாட்களுக்கு முன் delete செய்துவிட்டேன் ஆனால் சாரு ஆன் லைனை மட்டும் என்னால் அவ்வளவு எளிதாக எடுத்துவிட முடிவதில்லை. காரணம் சாருவின் எழுத்தைப் படித்தால் எவ்வித மனக்குழப்பத்தில் டிப்ரஷனில் இருந்தாலும் சட்டென்று ரிலாக்ஸ் ஆகிவிடும்.

சாருவை இணையத்தில் படிக்கும் போது அவரே எதிரில் வந்து நின்று பேசுவது போல இருக்கும். அத்தனை அழகான செறுக்கற்ற மொழிநடை…..அதுவும் அவர் ஆதங்கமான பதிவுகளில் அங்கதம் புகுந்து விளையாடும்…அவர் மனக் கஷ்டத்தில் எழுதியிருந்தாலும் இந்த வரியைப் படித்துவிட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை…

//மது அருந்துவதை நிறுத்தியதால்தான் என் உயிர் இப்போது என் வசம் இருக்கிறது. இல்லாவிட்டால் இந்நேரம் எனக்கு ஜெயமோகன் அஞ்சலிக் கட்டுரை எழுதியிருப்பார்.//

இந்த வரிகளை சாருவைத் தவிர வேறு யாராலும் எழுத முடியாது.

//நான் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தை எழுதப் பழக வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். // நிச்சயம் சாரு…நீங்கள் நீண்ட காலம் நலமுடன் அதை செம்மையாக எழுதி முடிப்பீர்கள். உங்கள் வாசகர் வட்டம் உங்களுக்கு உறுதுணையாக இருந்து சாதிக்கச் செய்வார்கள். Dont worry Charu Nivedita we are always with you. Take care