எதார்த்தவாதி வெகுஜன விரோதி என்பது முதுமொழி. எல்லாரையும் போல் எல்லாவற்றையும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்க எழுத்தாளன் எதற்கு? அதை விட கவர்மெண்டில் குமாஸ்தாவாகவே இருந்திருக்கலாமே? பாரதியும் வெகுஜன விரோதிதான். அவன் காலத்தில் அவன் வாங்காத ஏச்சா, பேச்சா? இந்த ஏச்சுப் பேச்சுக்கெல்லாம் பயந்து கொண்டு எல்லாவற்றையும் பாராட்டிக் கொண்டிருந்தால் நான் எழுத்தாளன் அல்ல. தேசத் துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டும் கூட ஓரான் பாமுக் என்ன சொன்னார்? அதுதான் எழுத்தாளனின் வேலை. உங்களுக்கு முதுகு சொறிந்து விடவும் மஸாஜ் செய்து விடவும் நீங்கள் பாங்காக் பட்டாயா என்று போகலாம். என்னைத் தேடிப் போகக் கூடாது. அல்லது, பாந்தமாக, சொகுசாக, உங்களுக்குப் பிரியமானதை மட்டும் எழுத பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பக்கம் செல்லுங்கள்.
இன்னொரு விஷயம், நீங்கள் ஏன் எதிர்மறையாகவே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? இப்படி பலரும் என்னிடம் கேட்கிறார்கள். நல்ல விஷயங்களை நான் பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதுகிறேன். ஆனால் அதைப் படிக்காமல் இங்கேயே வந்து நோண்டிக் கொண்டு, எதிர்மறை எதிர்மறை என்று கதறிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?
http://newsable.asianetnews.tv/south/have-you-been-to-chennais-book-unfair