அராத்து புத்தக வெளியீட்டு விழா

மதிப்பிற்குரிய சாரு அவர்களுக்கு,
ஜெயமோகனுடன் தங்களின் உரையாடலை மிகவும் ரசித்தேன்.  ரஜினியும் கமலும் ஒரே மேடையில் தோன்றியதற்கும் மேலான அனுபவம் அது.  முந்தியது வெங்காயம் உரிப்பது போலான அனுபவம்.  முடிந்தவுடன் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமிருக்காது.  ஆனால் தங்களது சந்திப்பு சிப்பியில் இருந்து முத்தை எடுப்பதற்கொப்பானது.  முடிந்த பின்னும் இன்னும் மனதில் மின்னிக்கொண்டிருக்கிறது. நாட்டின் ஆகப்பெரிய யோக்கியப் பிரபலங்கள் பேச தைரியமில்லாத விஷயங்களை நீங்கள் இருவரும் மிகச்சாதாரணமாக நையாண்டி செய்த விதம் மிக மிக அருமை.  தமிழ்நாட்டின் இன்றைய மிக முக்கியமான தேவை இதுவாகும் என்பது என் தாழ்மையான கருத்து.  ஒரு படைப்பை எந்த அளவுகோளின்படி உன்னதமானதாக அறியலாம் என்பதை மிக எளிமையாக  விளக்கிய விதம் அருமை.  இதை ஏற்பாடு செய்தமைக்கு அராத்துக்கு ஆயிரம் நன்றிகள்.  மென்மேலும் இது போன்ற சந்திப்புகள் நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன்.
ஜெகன்
பாஸ்டன்