என்னிடம் யாரும் மோடி பற்றி ஆதரவாகப் பேசக் கூடாது என்று நான் வேண்டுகோள் விடுத்திருக்கி்றேன். என்ன இது அராஜகம் என்று நீங்கள் நினைக்கலாம். என்னுடைய நிலைமையில் நீங்கள் இருந்தால் நீங்களும் இதைத்தான் சொல்வீர்கள். காலையில் நாகேஸ்வர ராவ் பூங்கா செல்கிறேனா? அங்கே போனதும் ஒருவர், பிராமணர் – வயது எண்பதுக்கு மேல் இருக்கும் – என்னை மோடியின் தற்கொலைப் படை என்று நினைத்துக் கொண்டு – நான் ஒரு பிராமண அடிவருடி என்பதால் அப்படி நினைத்திருக்கலாம், அதற்குள் இப்போது போக வேண்டாம் – திமுகவைத் திட்டித் தீர்ப்பார். பிறகு மோடியின் பெருமைகளைப் பற்றி பத்து நிமிடம். எல்லாவற்றுக்கும் நான் ஆமாஞ்சாமிதான். சுயநலம்தான் காரணம். அவரோடு விவாதித்தால் எனக்கு நெஞ்சு வலி வரும். மட்டும் அல்லாமல் எண்பது வயது வரை ஆரோக்கியமாக வாழ்வதே ஒரு சாதனை. அந்த சாதனையை மதித்தும் விவாதம் செய்வதில்லை. மேலும் என் மாமனார் திருத்தேரி கோபாலய்யங்கார் எனக்கு இதில் மிக நன்றாக ட்ரெயினிங் கொடுத்திருக்கிறார். என்னைப் பார்த்தாலே போதும், திமுகவைத் திட்டி அரை மணி நேரம் லெக்சர். ஜெயலலிதாவைப் பாராட்டி பத்து நிமிடம். எல்லாவற்றுக்கும் நான் ஆமாஞ்சாமிதான். நாகேஸ்வர ராவ் பூங்காவில் எனக்கு செம ட்ரெய்னிங் கிடைக்கும். பொதுவாக நான் ராகவன், ராமசேஷன் ஆகிய இருவரிடம் மட்டுமே விவாதம் செய்வேன், அவர்கள் படித்தவர்கள் என்பதால். ஆனாலும் சோஷியாலஜியில் ராகவனின் அறிவு அளவு கடந்து பாயும்போது ஆமாஞ்சாமி போட்டு விடுவேன். நமக்கும் சோஷியாலஜிக்கும் காத தூரம். 35 ஆண்டுகளுக்கு முன் தண்டி தண்டியாகப் படித்த Max Weber, Emile Durkheim, Levi Strauss, Luis Althusser போன்றவர்கள், இந்திய வரலாற்றின் subaltern பக்கங்களை பத்து தொகுதிகளில் தொகுத்த ரணஜித் குஹா மற்றும் காயத்ரி ஸ்பைவாக் போன்றவர்கள் எல்லாம் இங்கே நாகேஸ்வர ராவ் பூங்காவுக்கு வந்தால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளிந்து விடுவார்கள். அப்படித்தான் சமீபத்தில் ஒரு நாகேஸ்வர ராவ் பூங்கா சோஷியாலஜிஸ்ட் சொன்னார், சேரின்னா என்ன? சேர்ந்து வாழ்றது தானே? அப்போ சேரின்னு சொல்றதுல என்ன தப்பு? ஏன், பாப்பனச் சேரின்னு கூடத்தான் ஊர் இருக்கு? காயத்ரி ஸ்பைவாக் அவர்களே, நிங்கள் தெரிதாவிடம் படித்ததையெல்லாம் துறந்து விட்டு இங்கே எங்களுடைய நாகேஸ்வர ராவ் பார்க் பக்கம் வாருங்கள் ப்ளீஸ்.
இப்படியெல்லாம் நாகேஸ்வர ராவ் பூங்காவில் தினந்தோறும் சீரழிந்து கொண்டிருப்பதால்தான் அதற்குப் பிறகாவது நல்ல மனநலத்தோடு வாழலாம் என்ற ஆசையில் யாரும் என்னிடம் மோடி பற்றிப் பாராட்டிப் பேசக் கூடாது என்று நிபந்தனை விதித்திருக்கிறேன். அதேபோல் நானும் மோடி ஆதரவாளர்களிடம் அவர் பற்றித் திட்டிப் பேச மாட்டேன். கோவையில் சில சமயம் மோடி பற்றிப் பேச்சு திரும்பும் போல் இருந்த போதெல்லாம் அதை உடனடியாகத் தடுத்து விட்டேன். சாரு வாசகர் வட்டத்தில் பலர் மோடி எதிர்ப்பாளர்களாக இருந்தாலும் மனோ, கருப்பசாமி போன்றவர்கள் தீவிர மோடி ஆதரவாளர்கள். எனவே நம் நேரத்தை அதில் விரயம் செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டேன். இந்த நிலையில் முந்தாநாள் என் நண்பர் ரங்கநாதன் ஒரு பிஜேபி சார்பு பேச்சாளர் பற்றிக் குறிப்பிட்டு அவர் பேச்சை யுட்யூபில் கேளுங்கள் என்றாராம். அந்தப் பேச்சாளர் பற்றிய யூட்யூப் இணைப்பை ரங்கநாதன் எனக்கு அவ்வப்போது அனுப்பியதுண்டு. ஒருமுறை பார்த்து விட்டு காறித் துப்பினேன். பிஜேபி என்பதற்காக அல்ல. அதில் உள்ள இஸ்லாமிய விரோதப் பேச்சுக்காக. அவரால் தமிழ்நாட்டில் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பு உண்டு. கிறிஸ்தவ போதகர் லாசரஸும் அப்படிப்பட்ட ஆள்தான். அவரும் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பவர்தான்.
ரங்கநாதனின் அந்த சிபாரிசைக் கேட்டதும் நண்பர்கள் செம கடுப்பாகி விட்டார்கள். இது எதைப் போன்றது என்றால், ஆஞ்சநேயர் கோவிலில் வந்து கிறித்தவ மதமாற்ற நோட்டீஸ் கொடுப்பதைப் போன்றது. இப்படியும் மடிப்பாக்கத்தில் சமீபத்தில் நடந்தது. ஆனால் இதை என்னுடைய வாசகர் வட்டத்தில் வந்து என் நண்பராக இருப்பவர் செய்யலாமா? அவர் குறிப்பிட்ட பிஜேபி சார்பு பேச்சாளர் பற்றி என் நண்பர்கள் அத்தனை பேருமே தங்கள் அருவருப்பை வெளிப்படுத்தினார்கள். நம்முடைய அரசியல் கருத்துக்களை எந்த இடத்தில் வந்து வெளிப்படுத்துவது என்ற காமன்சென்ஸ் வேண்டாமா? நான் இதே ரங்கநாதனாக இருந்து, என்னுடைய பிஜேபி சார்பு பேச்சாளனைப் பற்றி சாரு வாசகர் வட்டத்தில் பேசத் துடித்தேன் என்றால் என்ன செய்வேன் தெரியுமா? இப்படி எல்லோருக்கும் இன்னாரைக் கேளுங்கள் என்று ஆலோசனை சொல்லி அடி வாங்க மாட்டேன். இன்னார் பேச்சைக் கேட்டிருக்கிறீர்களா என்று நூல் விட்டுப் பார்ப்பேன். எடுத்த எடுப்பில் அந்த லூசுப் பயலா என்று எல்லோரும் ஒருசேர ஆரம்பிப்பார்களா, உடனே மூடிக் கொள்வேன். அந்த சாதுர்யம் கூட இல்லாமல் இன்னார் பேச்சைக் கேளுங்கள், பிரமாதமாகப் பேசுகிறார் என்று சொன்னால் இப்படித்தான் எல்லார் வாயிலும் விழுந்து எழ வேண்டும். நான் ஒருத்தன் தான் ரங்கநாதன் உங்களுக்கு ஆமாஞ்சாமி போடுவேன், எல்லோரும் போடுவார்களா?
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai