கும்மோணம் ஃபில்டர் காஃபி கிடைக்குமா என்றேன் கைடிடம். ஓ தாராளமாக என்று சொல்லி அழைத்துப் போனார். நல்ல காஃபி குடித்தது மைலாப்பூரில்தான். ஆர்வமாகப் போனேன். காஃபி என்று சொல்லி வழக்கம் போல் ஐஸ்க்ரீம். ஐஸ்க்ரீமுக்கு அடியில் கழனித்தண்ணி மாதிரி காஃபி. உவ்வே. ஆனால் பரிசாரகப் பெண்கள் அனைவரும் S எழுத்தைத் திருப்பிப் போட்டது போல் இருந்தார்கள். அதிலும் டிரஸ் வாங்கவும் காசு இல்லாத வறுமை போல. ஆனால் நாங்கள் இவர்களை கிதார் பெண்கள் என்போம் என்றார் கைட் ரிக்கார்தோ. கிதார் வடிவத்தில் இருக்கிறார்களாம். ஆனாலும் S தான் இன்னும் சரியான உதாரணம் என்றார். எல்லாம் கொலோம்பியப் பெண்கள். கொலோம்பியப் பெண்கள்தான் S வடிவத்தில் இருப்பார்களாம். எழுத்தாளன் என்றதும் ஓடி வந்து போட்டோ எடுத்துக் கொண்டாள். பத்திரிகையில் என் போட்டோவைப் போட்டு எழுதினால் எனக்கு ஆயிரம் டாலர் கொடுக்க வேண்டும் என்றாள் எஸ்பஞோலில். நிச்சயமாக என்றேன். கிளம்பும் போது ஜோக்காகச் சொன்னேன் என்று சொல்லி முத்தமிட்டாள்.
பின் குறிப்பு:
என்னை விட முக்கால் அடி உயரமாக இருந்தாள் என்பதால் நான் குதிகாலை உயர்த்தியபடி நின்றேன். புகைப்படத்தில் தெரியும்…