சீலே

உலகின் மற்ற நாடுகளை விட தென்னமெரிக்க நாடுகளில்தான் எழுத்தாளர்கள் அதிக அளவில் கொண்டாடப்படுகிறார்கள்.  இதில் ஃப்ரான்ஸ் மட்டுமே விதிவிலக்கு என்று சொல்லலாம்.   மேலும், அந்தத் தென்னமெரிக்க நாடுகளிலேயே எழுத்தாளர்களைக் கொண்டாடுவதில் முன்னணியில் நிற்கும் நாடு சீலே.   சீலேயின் மகத்தான கவியாகக் கருதப்படுபவர்  Vicente Huidobro (1893 – 1948).  நம்முடைய பாரதி நவீன தமிழுக்கு என்ன செய்தாரோ அதையேதான் சீலேயின் கவிதைக்குச் செய்தார் விஸெந்த்தே.  மிகப் பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த விஸெந்த்தேயின் இளம் வயது முழுவதும் ஐரோப்பாவில் கழிந்தது.  ஆரம்பகாலப் படிப்பும் ஃப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலமாக இருந்தது.  கல்லூரிப் படிப்புக்குத்தான் அவர் சீலே வந்தார்.  விஸெந்த்தேயின் தாயார் மரியா லூயிஸா ஃபெர்னாந்தெஸும்  ஸ்பானிஷில் ஒரு பிரபலமான கவியாக விளங்கியவர்.  அவர் மோன்னா லிஸ்ஸா என்ற பெயரில் எழுதினார்.  அவரது மாளிகை போன்ற வீட்டில் அக்காலத்திய எழுத்தாளர்களெல்லாம் தினந்தோறும் கூடிப் பேசுவது வழக்கம்.  கல்லூரிப் படிப்பு முடிந்ததும் மீண்டும் ஐரோப்பா முழுவதும் சுற்றிய விஸெந்த்தே கடைசியில் பாரிஸில் வசிக்க ஆரம்பித்தார். அப்போது அங்கே வசித்த எல்லா கலைஞர்களோடும் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது.  உதாரணமாக பாப்லோ பிக்காஸோ,  Max ErnstPaul Éluard.  விஸெந்த்தேவை பிக்காஸோ ஓவியமாக வரைந்திருக்கிறார்.  அந்த ஓவியம்தான் விஸெந்த்தேவின் ஒரு புத்தகத்தின் அட்டையாக வைக்கப்பட்டிருக்கிறது.  Guillaume ApollinaireTristan TzaraJean CocteauAndré BretonLouis Aragon  போன்ற மிக முக்கியமான ஃப்ரெஞ்ச் கவிகளுக்கு இணையானவராகக் கருதப்பட்ட விஸெந்த்தே அவர்கள் எழுதிய பத்திரிகைகளில் எழுதினார்.  அவர்களின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.  இதெல்லாம் 1920களின் ஆரம்பம்.   அப்போதெல்லாம் கவிஞர்கள் பெரும் ஆக்டிவிஸ்டுகளாக இருந்தார்கள்.  அவர்களின் கவிதைகளும் இலக்கியச் செயல்பாடுகளும் ஸ்தாபனத்துக்கு எதிராகவே இருந்தன.  உதாரணமாக விஸெந்த்தே அப்போது உருவாகிக் கொண்டிருந்த தாதாயிஸப் பத்திரிகைகளில் தீவிரமாக எழுதினார்.  சகல விதமான பாரம்பரிய நம்பிக்கைகளையும் உடைத்தார்.  ஸ்பெய்னிலிருந்து நாடு கடத்தப்பட்டு பாரிஸில் வாழ்ந்த மிகெல் தெ உனாமுனோவோடு (Miguel de Unamuno) சேர்ந்து செயல்பட்டார்.  (உனாமுனோவை ஞாபகம் இருக்கிறதா?  என்னுடைய ”Book of Fuzoos: பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும்” என்ற சிறுகதையில் மிகெல் தெ உனாமுனோ ஒரு கதாபாத்திரமாக வருவார்!)  நவீன கட்டிடக் கலையின் தந்தை என்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும்  Le Corbusierஓடு சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்.   1921-இல் இவர் ஆசிரியராக இருந்த க்ரியேஷன் என்ற பத்திரிகையில் ஜார்ஜ் ப்ராக், பிக்காஸொ போன்றவர்களின் ஓவியங்கள் வெளியாகியிருக்கின்றன.  மேலே இவரை ஆக்டிவிஸ்ட் என்று குறிப்பிட்டேன் அல்லவா?  1923-இல் இவர் பிரிட்டிஷ்காரர்களின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதினார்.  அந்தக் கட்டுரையைப் பாராட்டி மகாத்மா காந்தி இவருக்கு ஒரு அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதியிருக்கிறார்.  சென்னைக்கு வந்த போதும் காந்திதான் பாரதியின் முக்கியத்துவத்தை ஒரே சந்திப்பில் அடையாளம் கண்டு கொண்டு (இத்தனைக்கும் பாரதியின் கவிதைகளைப் படிக்காமலேயே) ராஜாஜி போன்ற நிரட்சரகுட்சிகளிடம் ”இவர் உங்கள் மொழியின் பொக்கிஷம்; இவரைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்.  இந்திய அரசியலிலேயே இலக்கியப் பரிச்சயம் உள்ள ஒரே ஒருவர் காந்திதான் என்பதற்கு இதெல்லாம் ஆதாரங்கள்.  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எழுதிய அடுத்த ஆண்டே விஸெந்த்தே சில பிரிட்டிஷ்காரர்களால் கடத்தப்பட்டு மூன்று நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டார்.  அதே காலகட்டத்தில் ஜோதிடம், ரஸவாதம், கபாலா போன்ற occustist விஷயங்களையும் கற்றார். 

சிந்தனாரீதியாக மட்டுமல்லாமல் வடிவத்திலும் பாரம்பரிய ஒழுங்கைச் சிதைத்தார் விஸெந்தே.  அதற்கு உதாரணமாக, அவர் எழுதிய சித்திரக் கவிதைகளைச் சொல்லலாம்.  கீழே உள்ள அவரது Triangulo Armonico என்ற கவிதை வடிவத்தைப் பாருங்கள்.    

1925-இல் சீலே திரும்பிய விஸெந்த்தே ஆக்‌ஷன் என்ற பெயரில் ஒரு அரசியல் பத்திரிகையைத் துவக்கினார்.  அதற்காக அவர் பலமுறை தாக்கப்பட்டார்.  அரசு எந்திரத்தால் பத்திரிகை நிறுத்தப்பட்டது.  அவர் வீட்டு வாசலில் வெடிகுண்டு வைக்கப்பட்டது.  ஆக்‌ஷன் நின்றவுடனேயே சீர்திருத்தம் என்று மற்றொரு பத்திரிகையை ஆரம்பித்தார் விஸெந்த்தே.  அப்போது ப்ரொக்ரஸிவ் பார்ட்டியின் வேட்பாளராக விஸெந்த்தேயை அதிபர் தேர்தலில் நிறுத்தினார்கள். 

இப்போது புரிகிறதா தமிழ்நாட்டுக்கும் சீலேவுக்குமான வித்தியாசம்?  தமிழ்நாட்டில் மேற்கண்டதெல்லாம் ஒரு சினிமா நடிகருக்குத்தான் நடக்கும்.  அங்கே அது எழுத்தாளருக்கு.  பெரூவில் மரியோ பர்கஸ் யோசாவும் அதிபர் தேர்தலில் நின்றதை (ஃபுஜிமோரிக்கு எதிராக) நினைவு கூரலாம்.   

இப்படியாக நீண்டுகொண்டே போகிறது விஸெந்த்தேயின் வாழ்க்கை.  இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், விஸெந்த்தேயின் சாகச வாழ்க்கையின் காரணமாக சீலேயில் யாராவது கவிதை எழுதினால் போதும், ”எங்கே பாரிஸ் கிளம்பவில்லையா?  ஏன் இங்கேயே சந்த்தியாகோவைச் சுற்றிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். 

அப்படித்தான் தன் பதினேழாவது வயதில் முதல் கவிதைத் தொகுப்பின் மூலம் பிரபலம் அடைந்தான் ஒரு கல்லூரி மாணவன்.  இருபதாவது வயதில் அவனுடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு வெளியாகி சீலே முழுவதும் ஒரு பாப் பாடகனைப் போல் பிரபலம் அடைந்தான் அவன்.  ஆனாலும் சாப்பிடக் கூட காசு இல்லை.  அவன் கவிதைகளைப் படித்த வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் அவனைத் தன் அலுவலகத்துக்கு அழைத்தார்.  நிறைய பேசுவார்.  முதல் நாளே சொல்லி விட்டார்.  ”உன்னை ஏதாவது ஒரு நாட்டுக்குத் தூதராக அனுப்பி விடுகிறேன்.  கவலையே படாதே.”  அங்கெல்லாம் கவிஞன் என்றால், எழுத்தாளன் என்றால் உலகைச் சுற்றிக் கொண்டிருப்பவன் என்று பொருள்.  அதிலும் நம் விஸெந்த்தே எப்பேர்ப்பட்ட ஆள்!  ”விஸெந்த்தேயின் புத்தகத்துக்கு பாப்லோ பிக்காஸோ விஸெந்த்தேயின் உருவத்தைப் படம் வரைந்து தருகிறார்.   நீ ஏன் தம்பி இந்தப் பாழாய்ப் போன சந்த்தியாகோவையே சுற்றிச் சுற்றி வர வேண்டும்?  நான் உன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகிறேன்.  கவலையே வேண்டாம்.”   வெளியுறவுத்துறை அதிகாரி இந்த உறுதிமொழி கொடுக்காத நாளே இல்லை.  ஆனால் அவரோடு பேசிக் கொண்டிருந்து விட்டு வெளியே வந்தால் நம் இளம் கவிஞனுக்குப் பசிக்கும்.  சாப்பிடக் காசு இருக்காது.  அதுதான் எதார்த்தம்.  அந்த இளம் கவி விஸெந்த்தேயைப் போல் பணக்காரன் இல்லை. 

ஒருநாள் சந்த்தியாகோவின் பெரும் கோடீஸ்வரர் ஒருத்தர் இந்த இளம் கவியைப் பார்க்க ஆசைப்பட்டார்.  கவிஞனும் போனான்.

”வெளிநாடு போகாமல் நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர் கவிஞரே?” 

“நிச்சயம் போய் விடலாம் என்று வெளியுறவுத்துறை அதிகாரி சொல்கிறார் செஞோர்.  நிச்சயம் கிளம்பி விடுவேன்.” 

”அப்படியா?   அந்த ஆள் அப்படியேதான் சொல்லிக் கொண்டு இருப்பான்.  நீ இப்போதே என்னுடன் கிளம்பு.”

கவிஞனை அழைத்துக் கொண்டு வெளியுறவுத் துறை மந்திரியைப் பார்த்தார்.  ”செஞோர், விஸெந்த்தேவுக்கு அடுத்தபடியாக இந்தப் பையன் தான்.  இவனை நாம் இப்போதே எங்காவது வெளிநாட்டுக்குத் தூதராக அனுப்பியாக வேண்டும்.”

அப்போது அந்தக் கவிஞனின் வயது 23.  மந்திரி கவிஞனிடம் கேட்டார்.  “கவிஞரே, உமக்கு எந்த நாட்டுக்குப் போக வேண்டும்?”

மந்திரியின் கண்கள் அவருக்கு எதிரே மேஜையில் இருந்த உலக உருண்டையில் இருந்தது.  கவிஞனுக்கு திடீரென்று ஒன்றும் புரியவில்லை.  தன் முன்னே இருந்த உலக உருண்டையை உருட்டினான்.  ரங்கூன் என்ற பெயர் வித்தியாசமாக இருந்தது.  அதற்கு முன்னே அந்தப் பெயரைக் கேள்விப்பட்டதில்லை.  எந்த நாடு என்றும் தெரியாது.  ஆனால் பெயர் வினோதமாக இருக்கிறது.  ரங்கூன் என்றான். 

”ஓ, கிழக்கை நோக்கிச் செல்கிறீரா?  நல்லது” என்று சொல்லி விட்டு தன் செயலாளரை அழைத்து “இவர் நம்முடைய பிரபலமான கவிஞர்.  இவர்தான் இனி ரங்கூனில் சீலேயின் தூதர்.  ஒரு நியமன உத்தரவைப் போட்டு விடுங்கள்” என்கிறார்.  அந்தச் செயலர்தான் கவிஞனை இரண்டு ஆண்டுகளாகச் சந்தித்துக் கொண்டிருந்தவர். 

அன்றைய தினம் மது விருந்தில் நண்பர்கள் “எந்த நாட்டுக்குப் போகிறாய்?” என்று கேட்கும் போது கவிஞனுக்கு நாட்டின் பெயரும் ஊரின் பெயரும் மறந்து விடுகிறது.  ஒரே ஒருமுறை கேட்ட பெயர்.  ஆனால் மந்திரி கிழக்கு என்று சொன்னது ஞாபகம் வருகிறது.  ஆ, கிழக்கே போகிறேன், கிழக்கே போகிறேன் என்கிறான் கவிஞன்.

தன் இருபத்து நான்காவது வயதில் ரங்கூனை நோக்கிப் புறப்பட்டார், பின்னாளில் உலகமெல்லாம் புகழப்பட்ட பாப்லோ நெரூதா…

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai