இப்போது இருக்கும் வீட்டிலேயே இன்னும் ஐந்தாறு ஆண்டுகள் இருக்கலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தோம். வீட்டு உரிமையாளரும் அப்படித்தான் எண்ணியிருந்தார். வீட்டு உரிமையாளர் மிகவும் நல்லவர். ஆனால் பக்கத்து வீட்டு ரவுடியால் வீடு மாற்றும்படியான சூழல். நண்பர்கள் உதவி செய்ய வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஹமீதும் செல்வியும்தான் தெருத் தெருவாக அலைந்து எனக்காக மைலாப்பூரில் வீடு பார்த்துக் கொடுத்தார். இப்போது அவர் பெரிய இடத்தில் இருக்கிறார். அவருடைய நட்பு வட்டத்திலும் நான் இல்லை.
மைலாப்பூர், மந்தவெளி, ஆர் ஏ புரம் என்ற ராஜா அண்ணாமலைபுரம், அபிராமபுரம் பகுதிகளில் வீடு கிடைத்தால் நலம். என்னிடம் உள்ள 5000 புத்தகங்களை முன்னிட்டு கொஞ்சம் பெரிய வீடாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. சுமார் 1500 சதுர அடி. 25 ஆண்டுகளில் இந்த முறைதான் முதல் தடவையாக நாய் இல்லாமல் வீடு பார்க்கிறேன். நாய் இருந்தால் எல்லோரும் என்னையே நாய் மாதிரி பார்த்தார்கள். இப்போது பிரச்சினை இல்லை. ஆனாலும் ஒரு பிரச்சினை. நான் மட்டும் என் வீட்டில் நான் – வெஜ். அதிலும் மீன் மட்டும்தான். வீட்டில் குடிக்க மாட்டேன். என்னைப் பார்க்க நண்பர்களோ உறவினர்களோ வர மாட்டார்கள். நானும் அவந்திகாவும் மட்டும்தான். மற்றும் புத்தகங்கள்.
முடிந்தால் சொல்லுங்கள். charu.nivedita.india@gmail.com