2. கிழக்கோத்திகளின் அயோக்கியத்தனம் தாங்க முடியவில்லை. இத்தனை மரண கொடூரமாகவா இருக்கிறார்கள் வயோதிகர்கள்? ஆனால் அப்படி கிழக்கோத்திகளை மட்டும் சொல்ல முடியாது. சாக்ஷி என்ற பெண்ணும் எத்தனை ரவுடித்தனமாக நடந்து கொள்ள முடியுமோ அத்தனை ரவுடித்தனமாக நடந்து கொள்கிறார். மேட்டுக்குடியும் ஆங்கிலப் பேச்சும் இருந்தும் பேட்டை ரவுடிகளை விடக் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். அதிலும் அந்த மோகன் என்பவரின் அடாவடி, அராஜகப் பேச்சுக்களை பிராமணக் கொச்சையில் கேட்கும்போது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாகூரில் என் குப்பத்தில் குழாய்ச் சண்டையின் போது காதில் விழும் சொற்களை ஞாபகப்படுத்துகிறது. என் தூமையக் குடிக்கி, என் சாண்டையைக் குடிக்கி, என் புருசன் சாமானை வந்து ஊம்புடீ, etc. கஸ்தூரி, மோகன், வனிதா, சாக்ஷி போன்றவர்களின் பேச்சுக்கள் நாகூர் குப்பத்துக் குழாய்ச் சண்டை மொழியை ஒத்திருக்கின்றன. சேரன் – ஹிட்லரை ஞாபகப்படுத்துகிறார். சேரன் மட்டுமே பிக் பாஸ் கோஷ்டியிலேயே மிக ஆபத்தானவராகத் தெரிகிறார்.
3. என்னால் மிகச் சுலபமாக தர்ஷன், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோருடன் என்னைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. பெருசுகள் ஆபத்தானவர்கள்.
4. இறுதிச் சுற்றில் தர்ஷன் நிச்சயம் இருப்பார். வெற்றியும் அவருக்குத்தான் கிடைக்கும் என்பது என் யூகம்.