2013-இல் எழுதிய ஒரு கடிதம் இது:
சாரு அவர்களுக்கு,
உங்களுடைய ஹலோ கூட சொல்ல மாட்டேன் பதிவில், இரண்டு துணுக்குகளைச் சொல்லி இருந்தீர்கள்.
ஒன்று, சார்த்தரைப் பற்றி. மற்றது பர்ரௌஸைப் பற்றி.
இரண்டு துணுக்குகளிலும் நிறைய தகவல்/கருத்துப் பிழைகள்.
பர்ரௌஸைப் பற்றிய விஷயம் முதலில் பர்ரௌஸ். அவர் தன் மனைவியைக் கொன்றது தஞ்ஜியரில் அல்ல. அது நடந்தது மெஹிகோவில். அந்த துர்சம்பவம் நடந்த சமயம் அவர் அமெரிக்க அரசாங்கத்தின் சிறையில் இருந்து தப்பிப்பதற்காக மெஹிகோ ஓடி ஒளிந்து கொண்டு இருந்தார். அவரது குற்றத்தை நீக்கச் சொல்லி அமெரிக்க அரசாங்கம் வேண்டிக் கொள்ளவும் இல்லை. அதைப் பற்றிய தகவல்கள் வருமாறு (விக்கிப்பீடியா உதவியால்):
“Burroughs fled to Mexico to escape possible detention in Louisiana’s Angola state prison. Vollmer and their children followed him. Burroughs planned to stay in Mexico for at least five years, the length of his charge’s statute of limitations. Burroughs also attended classes at the Mexico City College in 1950 studying Spanish, as well as “Mexican picture writing” (codices) and the Mayan language with R. H. Barlow.
In 1951, Burroughs shot and killed Vollmer in a drunken game of “William Tell” at a party above the American-owned Bounty Bar in Mexico City. He spent 13 days in jail before his brother came to Mexico City and bribed Mexican lawyers and officials to release Burroughs on bail while he awaited trial for the killing, which was ruled culpable homicide. Vollmer’s daughter, Julie Adams, went to live with her grandmother, and William S. Burroughs, Jr., went to St. Louis to live with his grandparents. Burroughs reported every Monday morning to the jail in Mexico City while his prominent Mexican attorney worked to resolve the case. According to James Grauerholz, two witnesses had agreed to testify that the gun had gone off accidentally while he was checking to see if it was loaded, and the ballistics experts were bribed to support this story.] Nevertheless, the trial was continuously delayed and Burroughs began to write what would eventually become the short novel Queer while awaiting his trial. However, when his attorney fled Mexico after his own legal problems involving a car accident and altercation with the son of a government official, Burroughs decided, according to Ted Morgan, to “skip” and return to the United States. He was convicted in absentia of homicide and was given a two-year sentence which was suspended. Although Burroughs was writing before the shooting of Joan Vollmer, this event marked him and, biographers argue, his work for the rest of his life.”
ஆக, பர்ரௌஸைப் பற்றிய துணுக்கு பெரும் தகவல் பிழைகள் நிரம்பியது. கருத்துப் பிழை என்றால், அமெரிக்க அரசாங்கம் அவரைக் காப்பாற்ற ஒன்றும் செய்யவில்லை. அவர் அமெரிக்க அரசாங்கத்தின் சிறையில் இருந்து தப்ப மெஹிகோ ஓடி ஒளிந்து கொண்டார் என்பதே உண்மை.
சரி, அடுத்தது சார்த்ர் பற்றிய விவரம். உண்மையில், Charles De Gaulle, சொன்னது, ” You don’t arrest Voltaire”. சரி, அந்த மேற்கோளை சரி செய்து விடுங்கள். நீங்கள் குறிப்பிட்டபடி பார்த்தால், சார்த்தர் ஒரு பெரும் கலகக்காரன் என்று விபரம் தெரியாதவர்கள் எண்ணக் கூடும். அது என்ன அப்படிப்பட்ட உண்மையா?
சார்த்தர் தன் வாழ்க்கையில் ஒரு பெரும் கலகக்காரர் இல்லை. ஜெர்மானிய நாஜி ஆக்கிரமிப்பின் பொது, சார்த்தர் ரொம்ப சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தார். போர் முடிந்ததும், அவர் கம்யூனிஸ்ட் ஆனார். ஸ்டாலினின் கொடுமைகளை ஆதரித்துப் பேசினார். In fact, from Bernard Levy’s biography about Sartre (which was largely complimentary), here is a telling quote:
“Returning in the early fifties from his first visit to the Soviet Union, where Stalinist minders had given the tour, Sartre proclaimed, Walter Duranty-style, that the citizen of the USSR had the “entire freedom to criticize,” indeed, that he “criticized more and in a much more effective manner” than the French worker. He eventually admitted he knew this was a lie.”
ஆக,
சார்த்தர் ஒரு கலகக்காரர் எல்லாம் இல்லை. தன்னுடை அந்திமக் காலத்தில் அவர் கண்
தெரியாமல் இருந்த போது கொடுத்த பேட்டியில், அவர், “நான் இருத்தலியலைப் பற்றி எழுதியதின்
முக்கிய காரணம், அந்த சமயத்தில் அது பற்றிய விவாதங்கள்தான் பிரபலமாக இருந்தன”
என்று சொன்னார். தன் சொந்த வாழ்க்கையில், “I never experienced
angst” என்றும் கூறினார்.
உங்களுக்கும்
சினிமாவிற்கு வசனம் எழுத ஆசை இருக்கிறது, நடிக்க ஆசை இருக்கிறது. நான் சினிமாக்காரன்
காலில் விழுவதில்லை என்ற பிம்பத்தை உருவாக்க நீங்கள் முயல்வதும், சினிமா வசனம் எழுதுபவர்கள்
எல்லோரும் சினிமாக்காரன் காலில் விழுபவர்கள் என்று சொல்வதும், அபத்தமாக இருக்கிறது.
மிஷ்கினின் படத்தை நீங்கள், ஆகா ஓகோ என்று புகழ்ந்தது எல்லோருக்கும் தெரியும்.
சினிமா வசனகர்த்தாவின் தரம் சினிமா வசனத்தில் தெரியும். எழுத்தாளனை எழுத்தைக் கொண்டு அறியலாம். நீங்கள் குறிப்பிட்ட பர்ரௌஸும் சரி, சார்த்தரும் சரி, பணத்திற்காக எழுதியவர்கள்தாம்.
ராஜா
ராஜா,
என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதியிருப்பதால் அன்புள்ள என்றோ டியர் என்றோ பாசாங்கு வார்த்தைகளை உபயோகிக்காமல் நேரடியாக சாரு என்று அழைத்திருப்பதற்கு நன்றி. ஆனால் அவர்கள் கூட தேவையில்லை. உங்கள் நோக்கம் என் கோவணத்தை அவிழ்த்துக் கை தட்டிச் சிரிப்பது. அதற்கு ஏன் அவர்கள்? தேவையில்லை. ஆனால் உங்கள் நோக்கத்தில் நீங்கள் தோற்று விட்டீகள். ஏனென்றால், நான் உணர்ச்சிகளே இல்லாத ஜடம். என் தந்தை இறந்த செய்தி கேட்டதும் “ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். மதியம் ஆகும். தாமதமானால் பாடியை எடுத்து விடுங்கள்” என்று என் தம்பியிடம் சொன்னேன். பத்து ஆண்டுகள் உயிருக்கு உயிராய் பழகிய பெண் விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த போது “ஆஹா, என் பாக்கியம்” என்று சொல்லி டாட்டா காண்பித்தேன். ஆத்மார்த்தமாகப் பழகிய நண்பன் குட் பை சொன்ன போதும் அது என்னைச் சிறிதும் பாதிக்கவில்லை. ஒருவர் என்னைத் தொலைக்காட்சியில் அடா போடா என்று பேசியபோதும் அப்படியே. என்னை நீங்கள் அவமானப்படுத்த முடியாது. ஆனால், கோவணம் கட்டிய முனிவரின் கோவணத்தை அவிழ்த்து விட்டுச் சிரிக்க நினைக்கும் போக்கிரியை விதி தண்டிக்கும்.
உங்களை எண்ணியும் உங்கள் அம்மா, அப்பா, குழந்தைகள், அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகள், மனைவி, ஏன் உங்கள் அதிகாரி எல்லோரையும் எண்ணி வருந்தினேன். ஒரு எழுத்தாளனையே அவமதிக்க நினைக்கும் நீங்கள் அவர்களையெல்லாம் என்ன பாடு படுத்துவீர்கள்? புரியவில்லையா? உங்கள் கடிதத்தின் கடைசியில் ”உங்களுக்கும் சினிமாவிற்கு வசனம் எழுத ஆசை இருக்கிறது, நடிக்க ஆசை இருக்கிறது” என்று எழுதியிருக்கிறீர்களே அதைத்தான் சொல்கிறேன். ஒருவரின் ஆசை என்ன என்று அவருக்கே சரியாகத் தெரியாது. அப்படியிருக்கும் போது அவருடைய ஆசை பற்றிக் கூற நீர் யார் ஐயா? இதேபோல் நீர் உம்முடைய அம்மா, அப்பா, தங்கை, அக்கா, தம்பி, அண்ணன், குழந்தை என்று எல்லோருடைய ஆசையையும் சொல்லிச் சொல்லி எப்படி அவர்களையெல்லாம் வதைப்பீர் என்று நினைத்துத்தான் கவலைப்படுகிறேன். நீர் என்ன பெரிய உளவியல் நிபுணரா? அல்லது, கடவுளா? என் ஆசை பற்றி என் மனைவிக்கே தெரியாத போது நீர் எப்படிக் கண்டு பிடித்தீர்? ஆனால் ஒரு விஷயம். என் ஆசை என்ன என்று எனது ஒவ்வொரு கட்டுரையிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இத்தினியூண்டு மூளை இருந்தால் கூட அதைத் தெரிந்து கொண்டு விடலாம். பர்ரோஸ், சார்த்தர் பற்றியெல்லாம் என் விபரப் பிழைகளைக் கண்டு பிடிக்கும் உமது மூளைக்கு நான் ஒவ்வொரு கட்டுரையிலும் குறிப்பிடும் ஒரு விஷயம் எப்படித் தெரியாமல் போயிற்று? விக்கிபீடியாவில் சாரு நிவேதிதாவின் ஆசை என்று போட்டு இல்லையா?
புக்கர் பரிசு பெறுவதுதான் என் ஆசை. புக்கர் இல்லாவிட்டால் DSC. DSC இல்லாவிட்டால் IMPAC. IMPAC இல்லாவிட்டால் இன்னொன்று. இப்படி 30 சர்வதேசப் பரிசுகள் உள்ளன. என் மொழிபெயர்ப்பாளர்கள் தாமதம் செய்து கொண்டிருப்பதால்தான் இப்பரிசுகளும் எனக்குக் கிடைக்காமல் உள்ளன. எனவே நீர் நினைப்பது போல் சினிமாவில் நடிப்பதோ வசனம் எழுதுவதோ என் ஆசை அல்ல. ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன். நான் ஒரு பெண் என்று வைத்துக் கொள்வோம். அப்படியே நான் உமது மனைவி என்றும் வைத்துக் கொள்வோம். (முன் ஜென்மத்தில் மிகப் பெரிய பாவத்தைச் செய்துதான் தமிழ் எழுத்தாளனாகப் பிறந்திருக்கிறேன். அதை விடப் பெரிய பாவத்தைச் செய்து உமது மனைவியாகி விட்டேன் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வாதத்துக்காகத்தானே, நெருப்பு என்றால் சுட்டு விடுமா? If I were your wife… நீர் ஒரு சிறிய விவாதத்தில் என்னிடம் – அதாவது, உம் மனைவியாகிய என்னிடம் – ”உனக்குப் பக்கத்து வீட்டுக்காரனோடு படுக்கத்தானேடி ஆசை, பத்து பேரோடு க்ரூப் செக்ஸ் வைத்துக் கொள்ளத்தானேடி ஆசை?” என்று கேட்டால், நான் – அதாவது, உம்முடைய மனைவி – உம்மைத் துடைப்பக்கட்டையாலோ அல்லது என் காலில் போட்டிருக்கும் செருப்பைக் கழற்றியோதானே அடிப்பேன்? அதே மாதிரிதான் என் ஆசை பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்.
வசனம் எழுதுவதா என் ஆசை? சச்சின் டெண்டூல்கருக்கு நாயர் கடையில் டீ போடும் ஆசை வருமா? என்ன பேச்சு பேசுகிறீர் நீர்? என்னுடைய ஆசை புக்கர் பரிசு ஐயா. நான் போட்டி போடுவது ஸல்மான் ருஷ்டியோடும் ஓரான் பாமுக்கோடும். தமிழ் எழுத்தாளர்களோடு அல்ல; இதை நீர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
மழையில் முளைக்கும் ஈசல்களைப் போல் திடீர் திடீரென்று என் எழுத்தைப் படித்து விட்டு எதையாவது நாக்கில் நரம்பில்லாமல் கடிதம் எழுதி விடுகிறீர்கள். நான் நூறு முறை இது பற்றி எழுதி விட்டேன். இப்போதும் உம் மரமண்டைக்காக எழுதுகிறேன். (உம் கடிதத்தைக் கூட spam-இல் போட்டிருப்பேன். ஆனால் அதில் இரண்டு முக்கியமான விஷயங்கள் இருந்ததால் வேலை மெனக்கெட்டு பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்). மகாநதி வந்து எத்தனை ஆண்டுகள் இருக்கும்? 20 ஆண்டுகள். முகப்பேர் பக்கத்தில் ஏதோ ஒரு பாடாவதி தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்து இரவோடு இரவாக அதற்கு மதிப்புரை எழுதி, ஆழ்வார்ப்பேட்டைக்கு பஸ் பிடித்து வந்து கணையாழி அலுவலகத்தில் கஸ்தூரி ரங்கனை நேரில் சந்தித்துக் கட்டுரையைக் கொடுத்தேன். இஷ்யூ முடித்து விட்டேனே என்றார். பரவாயில்லை சார், கட்டுரையைப் படித்து மட்டும் பாருங்கள் என்றேன். என்னை உட்காரச் சொல்லி விட்டுப் படித்தார்.
படித்து விட்டு, ஆஹா என்று சொல்லி எழுந்து நின்று “இந்தக் கட்டுரை இந்த இஷ்யூவிலேயே வந்தாக வேண்டுமே” என்று சொல்லி விட்டு, ஒரு தொடர் கட்டுரையை நீக்கி விட்டு என் கட்டுரையைப் பிரசுரித்தார். அதைப் படித்து விட்டு, கமல் எனக்குக் கடிதம் எழுதினார். அந்த நட்பை நான் தக்க வைத்துக் கொண்டிருந்தால் நான் பாலகுமாரனைப் போல் சீனியர் வசனகர்த்தா ஆகியிருப்பேன். ஆனால் நான் உண்மையை மட்டும்தானே பேசுவேன்? அதைத்தான் என்னைப் பற்றி பார்த்திபன் கௌதம் மேனனிடம் சொன்னார். உண்மையைப் பேசும் நண்பர் என்று. உண்மை என்று absolute ஆக எதுவும் இல்லை. என் மனதுக்குப் பட்ட உண்மை என்று பொருள். குருதிப் புனல் வந்த போது கமலின் நட்புக்காக நான் வாயை மூடிக் கொண்டிருந்திருந்தால் நான் சினிமாவில் வசனம் எழுதியிருக்கலாம். முன்னுக்கு வந்திருக்கலாம்! இல்லையே? சாக்கடைப் புனல் என்று சிறிய புத்தகமே போட்டேன், என் செலவில். அதைப் படித்து விட்டு நேரில் என்னை ஒரு மணி நேரம் திட்டினார் ஒரு நடிகை. எவன் ஐயா என்னை வசனம் எழுதக் கூப்பிடுவான்?
பருத்தி வீரன் வந்தது. பாராட்டினேன். அமீர் நண்பரானார். யோகி வந்தது. போடு போடு என்று போட்டேன். பகை. பாலாவின் படங்களை முதல் படத்திலிருந்து கிழித்துக் கொண்டிருக்கிறேன். பரதேசி விமர்சனத்தைப் படித்து விட்டு அவர் எனக்கு ஹலோ சொல்வாரா என்பதே கூட சந்தேகம். இப்படி சமரசமே செய்யாமல் வாழும் ஒருவன் வசனம் எழுதுவது சாத்தியமா? அப்படி சாத்தியம் இல்லாத ஒரு விஷயத்துக்கு ஆசைப்படும் அளவுக்கு நான் மூடனா? அப்படியே இருந்தாலும் வசனம் எழுதுவது என்ன பெரிய இமாலய விஷயமா? அதில் என்ன பெருமை இருக்கிறது? காசு வரும். அவ்வளவுதானே? வேசைத்தனம் செய்தால் கூடத்தான் காசு வரும். அதைச் செய்வீர்களா? நான் வசனம் எழுத ஆசைப்பட்டால் பரதேசி படத்துக்கு அப்படி ஒரு விமர்சனம் எழுதியிருக்கக் கூடாது. எனக்குப் பணத் தேவை இருக்கிறது. ஆனால் அது எனக்கு என் எழுத்தின் மூலமாக மட்டுமே வர வேண்டும். வசனம் எழுதுவது எழுத்து அல்ல.
நடிப்பதிலும் ஆசை இல்லை. ஒரு ஹாலிவுட் இயக்குனர் – தமிழர் – ஹாலிவுட்டில் அவர் படங்கள் விருதுகளைப் பெற்றிருக்கின்றன – என்னை எவ்வளவோ கெஞ்சிக் கூப்பிட்டார், ஆடுகளத்தில் வ.ஐ.ச. ஜெயபாலன் செய்த ரோலைப் போல் ஒரு ரோல் இருக்கிறது என்று. Exaggerate செய்யவில்லை; நூறு முறை அழைத்தார். பிறகு அவர் போன் வந்தால் எடுப்பதையே விட்டு விட்டேன். நான் இப்போது ஆங்கில இலக்கிய உலகில் நுழைந்து அதில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் படிக்க வேண்டியது ஏராளமாக உள்ளது. இந்த நிலையில் நடிக்கப் போவது அறிவீனம். அதனால்தான் அந்த நண்பரின் அழைப்பை ஏற்க மறுத்தேன். மறுத்ததால் அவர் நட்பையும் இழந்தேன். ஏனென்றால், நடிப்பதால் எனக்கு எந்த லாபமும் இல்லை. பணம் வரும். ஆனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள என் நேரம் போய் விடும். மேலும், பசங்க படத்தில் வாத்தியாராக நடித்தாரே ஜெயப்பிரகாஷ் என்ற ஜேப்பி, அவர் நடிக்க வருவதற்கு முன்னால் ஒரு தயாரிப்பாளர். காசு பண்ண முடியவில்லை. இப்போது நடிப்பில் பண மழை பொழிகிறது. புகழும் எக்கச்சக்கம். ஆனால், ஒரு எழுத்தாளனான எனக்கு அந்தப் பணமும் புகழும் தூசுக்குச் சமானம். புக்கர் பரிசுக்கு long list செய்து என் பெயர் பத்திரிகையில் வர வேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன். நடிகனாக அல்ல. மேலும், நடிப்பு என்பது க்ஷணநேரப் புகழையே தரும். பாண்டியன் என்று ஒரு நடிகர் இருந்தார். ஹீரோவாக எல்லாம் நடித்தார். யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா? இதுபோல் ஆயிரம் நடிகர்கள் வருவார்கள்; போவார்கள். ஆனால் ஒரே ஒரு கம்பன்தான்; ஒரே ஒரு இளங்கோதான். எத்தனையோ சங்கப் புலவர்களின் ஒருசில பாடல்கள்தான் இருக்கின்றன. ஆனால் காலம் உள்ளளவும் இருக்கும் சாகா வரம் பெற்ற பாடல்கள் அவை. நடிப்பு போய் விடும். எழுத்து மட்டுமே நிற்கும். ஏனென்றால், நடிகர்கள் வெறும் entertainers; but we the writers are the monks of the world; lords of the world. நான் எழுதும் எழுத்து Sappho எழுதிய கவிதைகளைப் போல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்கும். அப்பேர்ப்பட்ட சாகாவரம் பெற்ற எழுத்தை உருவாக்கும் நான் நடிக்கப் போவதா? உங்களைக் கடவுள் மன்னிக்கட்டும்.
நூறு முறை சொன்ன உதாரணத்தை மீண்டும் சொல்கிறேன். எம்.கே.டி. பாகவதர்தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். கொலைக் கேஸில் ஜெயிலுக்குப் போய் வந்தார். புகழும் போனது. பணமும் போனது. கண் பார்வையும் போய் விட்டது. ஒரு காலத்தில் அவர் பேச்சைக் கேட்க மரக்கிளைகளிலும் விளக்குக் கம்பங்களிலும் நிற்பார்கள் மக்கள். அப்படி நின்று மின் அதிர்ச்சியில் செத்திருக்கிறார்கள். அவர் வந்தால் சமையலை அப்படியே போட்டு விட்டு ஓடுவார்களாம் பெண்கள். அப்பேர்ப்பட்டவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கண் பார்வை இல்லாமல் உட்கார்ந்திருந்த போது, அவரை குருட்டுப் பிச்சைக்காரன் என்று நினைத்து ஒருவர் காசு போட்டிருக்கிறார். என்ன ஒரு நிலைமை பாருங்கள்! நடிப்பினால் வரும் புகழ் அப்படிப்பட்டதுதான். அப்படிப்பட்ட தொழில் மீதா நான் ஆசைப்படுவேன்?
மற்றபடி நீர் குறிப்பிடும் பர்ரோஸ் விஷயத்தை வாசகர்கள் குறித்துக் கொள்ள வேண்டும். நான் அதை விக்கிபீடியாவில் சரி பார்த்திருக்க வேண்டும். இனிமேல் இப்படிப்பட்ட பிழைகள் ஏற்படாமல் தவிர்க்க முயல்கிறேன்.
ஆனால் சார்த்தர் விஷயம், நீர் சொல்வது என் வாதத்தை மேலும் வலுப்படுத்துவதாக அல்லவா உள்ளது? Professor என்பது பெரிய வார்த்தையா? வால்டேர் என்பது பெரிய வார்த்தையா? மேலும், நான் எழுதியவை துணுக்குகள் என்று எழுதியிருக்கிறீர். தமிழ்நாட்டுப் பன்றியானது மலத்தையே உணவாகத் தின்பதால் பாயசத்தையும் மலம் என்றுதான் நினைக்கும். உமக்கு நான் எழுதியது துணுக்காகத் தெரிந்ததும் அப்படித்தான். பத்திரிகையில் துணுக்கு படிப்பவர்களெல்லாம் என் எழுத்தைப் படித்து ஏன் தாலியை அறுக்கிறீர்கள் ஐயா?
மேலும், நான் எந்த இடத்திலும் சார்த்தரை கலகக்காரர் என்று சொல்லவில்லை. கலகக்காரர் என்று நினைத்திருந்தால் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்று நாவலுக்குப் பெயர் வைத்திருப்பேனா? சார்த்தரைக் கிண்டல் செய்வதுதான் அந்த நாவல். எனவே இனிமேல் எதையும் புரிந்து கொள்ளாமல் இப்படி முட்டாள்தனமாக எனக்குக் கடிதம் எழுதாதீர்.
இனிமேல் உம்மிருந்து கடிதம் வந்தால் அது என்னைத் திட்டும் ஆபாசக் கடிதமாகத்தான் இருக்கும். எனவே அதை spam இல் போட்டு விடுவேன்.
சாரு
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai