ஒரு கடிதம்

அன்புள்ள சாரு அவர்களுக்கு , 
 உங்களை என் இலக்கியத் தந்தையாக ,ஒரு ஆசானாகப் பார்க்கிறேன். சென்ற ஆண்டுதான் உங்கள் புத்தங்கள் என் கைகளைத் தொட்டது. ஒரு வருடமாக உங்கள் புத்தகங்கள் அதிக அளவில் படித்து முடித்தேன் ,ஒரு மின்னஞ்சலும் உங்களுக்கு அனுப்பினேன். நீங்கள் உங்கள் தொலைப்பேசி எண் கொடுத்து அழைக்க அனுமதி கொடுத்தீர்கள். என் மனதில் அளவுகடந்த சந்தோசம் அன்று. என் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று அது.   இன்றும் அந்நிகழ்வை என் நண்பர்களிடம் பெருமையாகச் சொல்வேன் . என் உலகத்தை  விரிவடையச் செய்த உங்கள் எழுத்துக்கு நன்றி என்று ஒரு வார்த்தை போதாது .  முதலில் உங்களுக்கு என்னுடைய அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் (Advance Wishes for Tomorrow). பல்லாண்டுகள் பலதேசம் சுற்றி உங்கள் எழுத்து என்னும் இலக்கிய மழை எங்கள் மீது பொழிய வேண்டும் என்று நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் .இந்த ஓராண்டுக்குள் உங்கள் எழுத்து மூலம் நான் அறிந்த படித்த இலக்கிய  மேதைகள் பல. சிலவற்றை  இங்குக் குறிப்பிடுகிறேன் : Kathy Acker, Allen Ginsberg, Slyvia Plath, Orhan Pamuk, George Batallie and Roland Barthes.அதிலும் வெகுஜன கலாச்சாரம் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்தவுடன் Roland Barthes Mythologies வாங்கி படித்தேன். என்னவென்று சொல்வது உலகின் மிக முக்கிய விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசான் நீங்கள் எனக்கு.முக்கியமாக Alejandro Jodorowskyயின் The Holy Mountain படம் பார்க்க வைத்த உங்களுக்கு என் நன்றியை எப்படி தெரிவிப்பேன். ஒரு மனிதனை ஆத்மரீதியாக மாற்றும் மாயம் உங்களிடம் இருக்கிறது என்ற தான் சொல்ல வேண்டும். Classics படித்துக்கொண்டு அது தான் இலக்கியம் என்று பேசும் மனிதர்கள் நடுவில் சமகால இலக்கியத்தின் முக்கியம் உணர்த்தும் உங்கள் எழுத்து தான் இப்போது  அதிகம் தேவைப்படுகிறது . தமிழிலும் மிகமுக்கியமான எஸ்.சம்பத்தின் இடைவெளி ,எம். வி வின் காதுகள் போன்ற படைப்புகளும்  உங்கள் மூலமாகத் தான் அறிந்தேன் . இசையில் Ibrahim Hama Dicko, Camila Cabello என்று நீளும் பட்டியலை ரசித்தேன் . There is saying “When the student is ready, the teacher will appear.”  அது போல் என்னுள் எனக்காகத் தோன்றிய  குரு நீங்கள் .  உங்கள் இணையதளத்தை சில மாதங்களாகப் படித்துவருகிறேன் அதற்குச் சந்தா கட்ட வேண்டும் என்று முடிவு கொண்டுளேன். அது இலவசமாகப் படிக்கும் எழுத்து அல்ல. சந்தா கட்டாமல்  படித்ததிற்கு  மன்னிப்பும் வருத்தமும்  தெரிவித்துக் கொள்கிறேன் .  வரும் மாதங்களில் முடிந்தவரை தினமும் படித்து சந்தா கட்ட முயற்சி  கொள்வேன் . உங்களின்  G-PAY number உறுதி செய்தால் இன்றே அனுப்பிவிடுவேன் . உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. I will always pray for good health of you and your family Sir ! And once againg wishing you heartful Happy Happy Birthday !
(பல நாட்களுக்குப்  பிறகு இன்றுதான் தமிழ் எழுதுகிறேன் தவறேதும் இருந்தால் மன்னித்துவிடவும் )
இப்படிக்கு உங்கள் அன்பான வாசகன்

கார்த்திக்