பூனைகளும் நானும் என்ற கட்டுரைக்கு சரியான எதிர்வினை இல்லை. என் நண்பரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இது ஒரு நாவல் மெட்டீரியல் மற்றும் சினிமா என்றார். அராத்துவும் அதையே சொன்னார். எனக்கும் அதேதான் தோன்றியது. மற்றபடி மாதாமாதம் நான்கு பேர் பூனை உணவு அனுப்புவார்கள். அதே நான்கு பேர் இந்த மாதமும் அனுப்பினார்கள். சமயங்களில் தோன்றும், ’இந்த வேலையெல்லாம் நமக்கு எதற்கு? எந்தப் பூனை எப்படிப் போனால் நமக்கு என்ன?’ என்று. ஆனால் இந்தத் தன்மானச் சிந்தனையெல்லாம் பூனைகளின் பசியையும் அழுகையும் கேட்டால் பறந்து போகும். முடிந்தவர்கள் பூனை உணவு அனுப்ப முடியுமா என்று பாருங்கள். இனிமேல் இது பற்றி எழுத மாட்டேன். ஆனால் சில அதிசயங்களும் அவ்வப்போது நடக்கத்தான் செய்கின்றன. அமெரிக்காவில் வசிக்கும் ஒரு வாசக நண்பர் இங்கே ஊருக்கு வந்த போது அங்கிருந்தே ஒரு பெரிய பை நிறைய பூனை உணவு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். அவர் என் வீட்டுக்கு வந்த போது நான் கூட வீட்டில் இருக்க முடியவில்லை.
charu.nivedita.india@gmail.com
***
இளம் தமிழ் எழுத்தாளர்களின் தமிழ் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஒட்டு மொத்தமாகவே தமிழ்நாட்டில் எழுத்துத் தமிழ் செத்து விட்டது. பத்தாயிரத்தில் ஒருவருக்குக் கூட சரியாகத் தமிழ் எழுதத் தெரியவில்லை. அதிலும் எழுத்தாளர்களின் நிலைதான் மிக மிக மிக மிகக் கவலைக்கிடம். இந்த உயிராபத்துப் பிரச்சினையிலிருந்து தப்பி இப்போது பிழையற்ற தமிழை எழுதுபவர் சாதனா ஒருவரே. ஏனென்றால், முன்பு அவருடைய பிரதி “இனிமேல் இவருடைய தமிழ் தேறவே வாய்ப்பில்லை” என்று நான் நினைக்கக் கூடிய நிலையில் இருந்தது. ஆனால் பிரதியின் உள்ளடக்கம் உலகத் தரம் என்பதால் சில கதைகளைத் திருத்தம் செய்து – நான் எங்கெங்கே திருத்தம் செய்திருக்கிறேன், எப்படித் திருத்தம் செய்திருக்கிறேன் என்பதை சிவப்பு மையில் குறிப்பிட்டு அவருக்கு அனுப்பினேன். அந்த என்னுடைய திருத்தப்பட்ட பிரதி எல்லா எழுத்தாளர்களுக்குமே பாடமாக இருக்கும். என்ன சொல்ல வந்தேன் என்றால், சமீபத்தில் படித்த சாதனாவின் கதையில் – உள்ளடக்கம் அத்தனை பிரமாதம் என்று சொல்ல முடியவில்லை என்றாலும் – கதையில் பிழைகளே இல்லை. ஒன்றிரண்டுதான் இருந்தன. உடனே அவரைப் பாராட்டி எழுதினேன்.
தாங்கவே முடியாத அளவுக்குப் பிழைகளோடு எழுதுபவர்களில் முதன்மையானவராக இருப்பவர் என் அன்புக்குரிய அராத்து. ஒரு வாக்கியத்தில் மூன்று பிழை. ஆனால் அப்படிப்பட்டவரே சமீபத்தில் என்னை இன்ப அதிர்ச்சியில் தள்ளினார். அவர் எழுதிய சமீபத்திய பிரதியை அனுப்பியிருந்தார். பார்த்தால் ஒரு பிழை இல்லை. எனக்கு அனுப்ப வேண்டுமே என்று கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு பார்த்தாராம். ஆக, அவருக்குப் பிழையின்றி எழுதத் தெரிகிறது. ஆனால் வாய்ஸ் டைப்பிங் மூலம் காரியத்தை நடாத்துவதால் கன்னாபின்னாவென்று பிழைகள். இந்த ஒற்றுப் பிழை ஒற்றுப் பிழை என்று சொல்கிறேனா? யாரும் ஒற்று எழுத்தே போடுவதில்லை என்கிறேனா? போட்டுத்தள்ளு என்று எங்கெல்லாம் ஒற்று வரக் கூடாதோ அங்கே மட்டும் ஒற்றைப் போடுகிறார்கள். ஆனால் எங்கே வர வேண்டுமோ அங்கே ஒற்று இல்லாமல் தொம்மையாகக் கிடக்கிறது பிரதி. இதில் முதலில் வருபவர் வேறு ஒரு நண்பர். பெயர் சொல்ல எனக்கு உரிமை உண்டா என்று தெரியவில்லை. அராத்துவிடம் மட்டுமே கேட்காமல் உரிமை எடுத்துக் கொள்கிறேன். இன்னொரு நண்பர், பக்கத்துக்கு பத்து ஒற்றுப் பிழைகள். பதினைந்து நிறுத்தற்குறிப் பிழைகள். ஆகா… நான் பெரிய பாக்கியசாலி.
கண்மணிகளே, நான் தி.ஜானகிராமனிலோ அசோகமித்திரனிலோ எம்.வி.வெங்கட்ராமிலோ, ஆதவனிலோ, புதுமைப்பித்தனிலோ, கு.ப.ராஜகோபாலனிலோ, கரிச்சான் குஞ்சுவிலோ, தி.ஜ. ரங்கநாதனிலோ, லா.ச.ரா.விலோ ஒரு பிழை – ஒரே ஒரு பிழை கூடப் பார்த்ததில்லை. ஆமாம், நீங்களெல்லாம் எங்கேதான் தமிழ் படித்தீர்கள்? எனக்குமே இலக்கணம் தெரியாது. ஆனால் என்னிடம் ஏன் பிழை இல்லை? இதைக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்கள், ப்ளீஸ்.
ஒற்றுப் பிழைகளோடு தமிழ் வாசிப்பது கற்கள் கிடக்கும் சோறு தின்பது போல் உள்ளது. அதிலும் ஒற்று இல்லாவிட்டாலும் போகிறது; ஒற்று போடுகிறேன் என்று பெரும்பாலானப் பெண்கள் என்று எழுதினால் நான் என்னதான் செய்யட்டும்? வேறு யாராகவாவது இருந்தால் உடனடியாக ப்ளாக் பண்ணி விடுவேன். எழுதியிருப்பதோ என் வாரிசு! இப்படி நான் கட்டுரைதான் எழுத முடியும். எனக்கும் இலக்கணம் தெரியாது என்று சொன்னேனா? பெரும்பாலானப் பெண்கள் என்று சாமி சத்தியமாக வராது. ஓ, மெல்லினத்தோடு (ன) வல்லினம் (பெ) சேரும் போது ஒற்று வராதோ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். இல்லையே? காமக் கிழத்தி. வருகிறதே. அப்படியானால் பெரும்பாலான பெண்களில் ஏன் ப் வராது? ராமசேஷனைப் பிடித்தேன். நான் அவர் மீது கொஞ்சம் வருத்தத்தில் இருந்தேன். பிரியாணி உண்டால் கொலஸ்ட்ரால் ஏறுகிறது; தயிர் சாதம் சாப்பிட்டால் அப்படி ஆவதில்லை; தயிர் சாதம் நல்ல உணவு என்று ஒரு இனவாத மூடன் (அந்த மூடன் ஒரு பிராமணன்) சொன்னதை ஆதரித்து முகநூலில் பதிவு போட்டிருந்ததால் ராமசேஷன் மீது கொஞ்சம் வருத்தத்தில் இருந்தேனா? இருந்தாலும் நமக்குக் காரியம் ஆக வேண்டுமே? அதுவும் பொதுக் காரியம். இதிலெல்லாம் வெட்கம் மானம் சூடு சொரணை எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது ராமசேஷனை நாடினேன். அவர் சொன்னார், ஆன என்று ஒரு குணரீதியான விவரணம் வரும் போது ஒற்று வராது. அழகானப் பெண் என்பது தவறு.
கொஞ்சம் தயை கூர்ந்து தமிழைக் காப்பாற்றுங்கள்.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai