காலையில் எட்டரை மணிக்கு மாடியிலிருந்து கீழே வந்தேன். ராகவன் மூன்று நாட்களாக என்னோடு பேசுவதற்கு முயற்சி செய்கிறார். என்னால் போனை எடுக்கவே முடியவில்லை. ஏன் என்று இந்தப் பதிவைப் படித்தால் உங்களுக்குப் புரியும். காலையில் வாக்கிங் சமயத்தில் என்னை ஃபோனில் பிடிக்க முடியாது. மாலையில் செய்வார். அப்போதுதான் நான் அவசர அவசரமாக டைப் பண்ணிக் கொண்டிருப்பேன். எடுக்க இயலாது. ஏனென்றால், வேண்டாம், இதைப் படித்து முடிப்பதற்குள் உங்களுக்குப் புரிந்து விடும். ராமசேஷனும் மூன்று நாட்களாக என்னோடு பேச முயற்சி செய்கிறார். முடியவில்லை. ஐந்து நிமிடம் பேசப் போகிறோம், ஐந்து நிமிடமா இல்லை என்று உங்களுக்குத் தோன்றலாம். படியுங்கள், புரியும்.
எட்டரைக்கு இறங்கினேன். எப்போதும் இரவு உணவு ஒரு ஆப்பிளும், நூறு மில்லி பசும்பாலும்தான். பாலில் ஏழெட்டு பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடிப்பது நீண்ட நாள் வழக்கம். பெரிய பூண்டை இரண்டு மூன்று துண்டுகளாக நறுக்கி பாலில் போட்டு, கொஞ்சம் மஞ்சள் தூளும் இரண்டு மூன்று குங்குமப்பூவும் போட்டுக் காய்ச்ச வேண்டும். நீங்களும் இதைச் செய்தால் கொழுப்பு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் அண்டாது. வெறும் ஆப்பிளும் பாலும் என்பதால் காலை எட்டரைக்கே கொலைப்பசி பசிக்கும். மேலே கிளம்பும்போதே டிகாக்ஷன் போட்டு வைத்து விட்டுப் போவேன் என்பதால் வந்த கையோடு பாலைக் காய்ச்சி டிகாக்ஷனைப் போட்டு காஃபி குடித்தேன். பூனைகளுக்கு மீனை அவித்துக் கொடுத்தேன். சாப்பிட மறுத்து விட்டன. சொல்லி வைத்தாற்போல் ஐந்து பூனைகளும் முகர்ந்து பார்த்து விட்டு நகர்ந்து விட்டன. இவை ட்யூனா (சூரை) மட்டுமே சாப்பிடும். வீட்டில் இருந்தது ரோகு. ரோகு மட்டுமே வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தவரை நேர்த்தியாக ரோகை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. ஒருநாள் சூரை கொடுத்ததும் அன்றிலிருந்து சூரையையே பிடித்துக் கொண்டன. வேறு மீனை முகர்ந்து கூடப் பார்ப்பதில்லை. காரணம், சூரையில் கவிச்சி அதிகம். அதனால் ஐந்தும் நேற்றிலிருந்து கொலைப் பட்டினி. கொஞ்சம் ஈரமான பூனை உணவைப் (Wet cat food) போட்டேன். உயிர் போகாமல் இருப்பதற்காகக் கொஞ்சம் சாப்பிட்டு வைத்தன.
நேற்று ராமசுப்ரமணியன் பிரெட் பாக்கெட்டும் காஃபித்தூள் ஒரு கிலோவும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். முன்பெல்லாம் கால் கிலோவுக்கு மேல் எக்காரணம் கொண்டும் வாங்க மாட்டேன். எனக்குக் காஃபித் தூள் புதிதாக இருக்க வேண்டும். ஒரு வாரம் ஆனாலும் மக்கிப் போனதுபோல் தோன்றும். ஏனென்றால், நானெல்லாம் எந்த ஜாதி என்றால், காஃபிக் கொட்டையை புதிதாக வறுத்து காஃபி மேக்கர் என்ற மெஷின் மூலம் அரைத்துத் தூள் எடுத்து வடிகட்டி டிகாக்ஷன் எடுத்து காஃபி போட்டு குடிக்கிற ஆள். அப்படிப்பட்ட ஆசாமிகள் இந்தப் பூவுலகில் இப்போதும் இருக்கின்றனரா? அப்படியெல்லாம் குடித்தால் சக மனிதர்கள் எனக்கு விஷம் வைத்து விடவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் அந்த அளவுக்குப் போகாமல் கால் கால் கிலோவாக வாங்கிப் பயன்படுத்துவது வழக்கம். அந்த அளவு ஜாலிக்கெல்லாம் இப்போது காலம் இல்லை என்பதாலும் மக்கள் வெறி கொண்டு பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதாலும் ஒரு கிலோவாகவே வாங்கி விடுங்கள் என்று ராமிடம் சொல்லியிருந்தேன்.
நேற்றே இந்த பிரெட்டைக் காலி பண்ணியிருக்க வேண்டும். ராம் எட்டரைக்கே கொண்டு வந்து கொடுத்தார். ஆனால் மஞ்சள் முழுக்கு நடக்கவில்லை. அவந்திகா ஒன்பதேகாலுக்குத்தான் எழுந்து வந்தாள், நீ ஏன் என்னை எழுப்பவில்லை என்ற புகாருடன். (அதாவது, எட்டரைக்கே எழுப்பியிருக்க வேண்டுமாம்.) “சரி, நாளையிலிருந்து எழுப்பி விடுகிறேன்” என்றேன். ஏற்கனவே புகாருடன் எழுந்தவளை சீக்கிரம் மஞ்சள் முழுக்கு செய் என்று சொல்ல முடியாது. அதனால் வீட்டுக்கு வெளியே வைத்திருந்த பிரெட்டையும் காஃபித்தூளையும் நான் வீட்டுக்குள் எடுத்துக் கொண்டு வரத் துணியவில்லை. யோசித்தேன். ஒரு சின்ன வாளியில் தண்ணீரையும் மஞ்சளையும் கலந்து கூட வைத்து விட்டேன். பசி அப்படி. ஆனால் நான் மஞ்சள் நீராட்டு செய்தால் அதில் ஏதாவது ஒரு குறை இருக்கும். மற்ற விஷயங்களில் குறை வைக்கலாம். கொரோனா விஷயத்தில் விளையாட முடியாது. ”ஏம்மா, ராம் மட்டும் இதை எடுத்து வரவில்லையா?” என்று கேட்டு கீட்டு வைத்தோமானால் தொலைந்தோம். ”அவர் வயது என்ன? உன் வயது என்ன?” இதுதான் ஆயுதம். அதிர்ஷ்டவசமாக என் நண்பர்களின் வயது எல்லாம் என்னை விட இருபது முப்பது கம்மி. சிலருக்கு நாற்பது கூட கம்மி. மட்டுமில்லாமல், இந்தக் கொரோனா எல்லாம் சீனக் கம்னாட்டிகளால் இந்த பூலோகத்துக்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே எனக்கு சகலவிதமான கொரோனா அறிகுறிகளும் இருந்தன. மூச்சு விடுவதில் சிரமம், அடிக்கடி தும்மல், அவ்வப்போது மூக்கு ஒழுகல், இன்ன பிற. ”அதனால் மூடிக்கிட்டு இரு” என்பது அவந்திகாவின் அறிவுரை. சரி, அவளே பார்த்து மஞ்சள் நீராட்டு நடத்தட்டும் என்று நேற்று கோதுமை உப்புமா செய்து விட்டேன். ஏற்கனவே இரண்டு முறை அதைச் செய்து பார்த்திருந்தேன். அதன் செயல்முறையையும் காயத்ரியிடம் கேட்டு வைத்திருந்தேன்.
முதலில் கடுகு டப்பா, பெருங்காய டப்பா, உளுத்தம் பருப்பு டப்பா, கடலைப் பருப்பு டப்பா சகலத்தையும் எடுத்து வைத்துக் கொண்டேன். மிளகாய் டப்பாவை எடுத்து மூன்றே மூன்று குண்டு மிளகாயை எடுத்து அதன் காம்பைக் கிள்ளிப் போட்டு விட்டு வைத்துக் கொண்டேன். நான் மட்டுமே சாப்பிட்டால் பச்சை மிளகாய்தான். ஆனால் அவந்திகாவுக்கு பச்சை மிளகாய் எமன். உடனே ஆம்புலன்ஸ்தான். அதனால் காய்ந்த மிளகாய். அதிலும் காஷ்மீரத்து நீள மிளகாய் இல்லை. நம்மூர் குண்டு மிளகாய்.
இது எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அப்போதைக்கப்போது எடுத்தால் கடுகு எண்ணெயில் கருகி விடும். சமையலின் மிகப் பெரிய பாடமே கடுகு தாளிக்கும் போது மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதுதான். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமையல்கார அம்மாள் இருந்தார். நன்றாக சமைப்பார். தாளிக்கும் போது கோட்டை விட்டு விடுவார். ஏனென்றால், எப்போதுமே ஸ்டவ்வை முழுசாக எரிய விட்டுத்தான் சமைப்பார். கடுகு கருகி விடும். முழுச் சமையலும் கசக்கும். சொல்லி சொல்லிப் பார்த்து நிறுத்தி விட்டேன். கறிவேப்பிலையை ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுத்து கழுவி வைத்துக் கொண்டேன்.
இப்போது ரெண்டு வெங்காயம், ஒரு தக்காளி இரண்டையும் வெட்டி வைத்தேன். கேரட்டும் போடலாம். வீட்டில் கேரட் இல்லை. சென்ற முறை செய்த போது கேரட் போட்டேன். இப்போது வாணலியை ஸ்டவ்வில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் எல்லாவற்றையும் போட்டேன். கடுகு வெடித்த பிறகு பெருங்காயம்? பொறுங்கள். இப்போதே பெருங்காயத்தைப் போட்டால் மணம் போய் விடும். (காயத்ரி பாடம்). பிறகு அதில் வெங்காயத்தையும் பிறகு தக்காளியையும் போட்டு வதக்கி, பிறகு ரெண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றினேன். கொதித்ததும் ஒரு டம்ளர் கோதுமை ரவையை சுற்றி வரப் போட்டு – போடும் போது கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும், இல்லாவிட்டால் கட்டி கட்டியாக இருக்கும் – நன்றாக இரண்டு முறை கிளறி விட்டு விட்டு மூடி வைத்தேன். இது எல்லாவற்றுக்கும் ஸ்டவ் ‘ஸிம்’மில் இருக்க வேண்டும். (கவனியுங்கள் அராத்து, இப்போதுதான் முதல் முதலாக ஆங்கில வார்த்தை வருகிறது. ‘ஸிம்’முக்குத் தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.) ஒரு ஐந்து நிமிடம் கழித்து எடுத்தால் கோதுமை ரவா உப்புமா தயார். அதன் மேலே கொஞ்சமாய் கொத்துமல்லிக் கீரையை நறுக்கிப் போட்டு, முதல் நாள் வைத்த சாம்பாரைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டேன். இது நேற்று கதை.
நேற்றே பிரெட் அவந்திகா கையினால் மஞ்சள் நீராட்டு முடிந்து ஃப்ரிஜ்ஜில் இருந்தது. நேற்று திருவல்லிக்கேணி முரளி வேறு திருவல்லிக்கேணியிலிருந்து ஒரு கிலோ வெண்ணெய் வாங்கி வந்து கொடுத்தார். அவர் ஜக்கி வாசுதேவின் தீவிர பக்தர். என்னுடைய தீவிர வாசகர். இப்படி பலர் இருக்கிறார்கள். கேட்டால் ரெண்டு பேர் பேசுவதும் ஒன்றுதான் என்கிறார்கள். பேசாமல் ஒரு காவியைக் கட்டிக் கொண்டால் உலகம் பூரா வலம் வரலாம். ஆனால் நமக்கு cult உருவாக்குவதில் நம்பிக்கை இல்லை. ப்ரெட்டை டோஸ்ட் பண்ணி, வெண்ணெய் தடவி, சாஸ் தொட்டுக் கொண்டு சாப்பிட்டேன். அவந்திகாவும் கேட்டாள். அவளுக்கும் கொடுத்தேன்.
கொரோனா காலத்திலும் சரி, கொரோனா இல்லாவிட்டாலும் சரி, உணவு எப்போது கிடைக்கும் எங்கே கிடைக்கும் என்ற அறிகுறியே தெரியாத நிலையில்தான் எப்போதுமே வாழ்கிறேன். பெருமாள் சாப்பிடுவதற்குக் காசைக் கொடுத்திருக்கிறார். ஆட்டோ பிடித்து ஆர்.ஏ. புரம் சங்கீதாவுக்குப் போய் பெங்களூர் தோசை சாப்பிட முடியுமா? தனியாகப் போவது அலுப்பு. ராகவன் சனி ஞாயிறு மட்டும்தான் சாப்பிடுவார். மற்ற நாட்களில் ஓட்டலில் சாப்பிட வீட்டில் அனுமதி இல்லை. (நான் சமைச்சது வேஸ்ட் ஆறதே?) ராமசேஷனுக்கு அலுவலகத்துக்கு ஓட வேண்டும். பாரதி மெஸ்ஸில் எனக்குப் பிடித்த மாதிரி இல்லை. மற்றொரு முக்கியக் காரணம், பாரதி மெஸ் காஃபி மகா கொடுமை. காஃபி நன்றாக இல்லாத இடங்களில் நான் கை நனைப்பதில்லை. அதனால் வீட்டுக்கு வந்து மாவு இருந்தால் தோசை போட்டு சாப்பிடுவேன். இந்த லட்சணத்தில் பேலியோவாவது மண்ணாங்கட்டியாவது. மதிய உணவு மத்தியானம் மூன்று மணிக்குக் கிடைக்கும். அதுவும் நானே சாதம் வடித்து, கறிகாய் திருத்தி, சகலமும் செய்து வைத்தும் அப்போதுதான் தயாராகும். அவந்திகாவும் ஒன்றும் சும்மா இருக்க மாட்டாள். தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, வீடு பெருக்கித் துடைப்பது, துணிகளை வாஷிங் மெஷினில் போடுவது, இப்படி அவளுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும். சமையல் உள்ளுக்குள் அவள் வரவே மதியம் ஒன்றரை இரண்டு ஆகி விடும். எனக்கு இந்தப் பேலியோகாரர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும்.
இப்போது அவந்திகாவுக்குக் கொரோனாவினால் கடுமையாக வேலை கூடி விட்டது. நான் பாத்திரம் தேய்க்கப் போனேன். மேல் வீட்டு கலெக்டரின் பணியாள் ஜான் என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு மீன் கடைக்குப் போனார். நான்கு கிலோ சூரையும் அரை கிலோ வவ்வாலும் வாங்கி வரச் சொன்னேன். அரை மணி நேரத்தில் வந்து விட்டார். காலை நேரம் என்பதால் கூட்டம் இல்லையாம். 1600 ரூபாய் ஆயிற்று. நொச்சிக்குப்பம் வலையில் 800 ரூபாய்க்குள் இருக்கும். பாத்திரம் தேய்த்து முடித்து விட்டு மீன்களை சுத்தப்படுத்த ஆரம்பித்தேன். அவந்திகாவுக்கு ஆப்பிளும் நாலைந்து மாதுளம் பழங்களும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார் எங்கள் குடியிருப்பின் மேனேஜர். சொன்னேன் இல்லையா, யாருக்கும் பழம் வாங்கத் தெரியாது என்று. எட்டு ஆப்பிளில் நாலு அழுகினது. மாதுளை எங்குமே கிடைக்கவில்லையாம். அள்ளிக் கொண்டு போயிருப்பார்கள். ராமும் அப்படித்தான் சொன்னார். அவந்திகா எல்லா பழங்களையும் பால்கனியில் வைத்துக் கொண்டு அமர்ந்தாள். எல்லாவற்றுக்கும் மஞ்சள் நீராட்டு செய்ய வேண்டும். பழங்களின் தோலில் கொரோனா இருந்தால் என்ன செய்வது? அதற்கும் முன்னால் ஜானும் மேனேஜரும் கொடுத்த மீதிப் பண நோட்டுகளையெல்லாம் சோப்புப் போட்டு கழுவி கொடியில் க்ளிப் போட்டுக் காய வைத்தாள். நான் சொன்னேன், யாரும் பழங்களையெல்லாம் கழுவுவதில்லையாம் என்று. அதனால்தான் மெட்றாஸில் ரொம்பப் பேருக்குக் கொரோனா வந்து விட்டது என்றாள். கோயம்பேடு மார்க்கெட்தான் கொரோனா தலைமையகம். அங்கிருந்துதான் பழங்கள் வருகின்றன.
மீன் கழுவி முடித்த போது பனிரண்டு மணி. அதற்கப்புறம் கொஞ்சம் மீனை எடுத்து வேக வைத்து ஐந்துக்கும் கொடுத்தேன். அவக் அவக் என்று சாப்பிட்டன. கொலைப் பசி. அப்புறம் கீழே போய் அந்தப் பூனகளுக்கும் cat food கொடுத்தேன். மணி ஒன்று. பிறகு, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, இஞ்சி எல்லாம் நறுக்கி வைத்து விட்டு, அரிசி களைந்து வைத்து விட்டுக் குளிக்கப் போனேன். சாப்பிட்டு முடித்த போது மணி மூணு.
அப்பாடா என்று எழுத உட்கார்ந்த போது இன்று எழுதக் கிடைத்தது ஆறு மணி நேரம் என்று கணக்கிட்டது மனம். அப்போது பார்த்து அவந்திகா இந்த நாலு ஆப்பிளை நறுக்கிக் கொடுப்பா, கெட்டுடும் போல் இருக்கு, ஜூஸ் போடறேன் என்றாள். இனிமேல் செகண்ட் ஷிப்ட்லதான் வேலை செய்வேன்மா, எதுக்கும் என்னைக் கூப்பிடாதே என்று சொன்னேன். அவளே ஆப்பிளை நறுக்க ஆரம்பித்தாள்.
***
என் பள்ளி பற்றிச் சொல்லியிருக்கிறேன். ரொம்ப ஜனநாயகபூர்வமான பள்ளி. தண்ணி போட்டு விட்டு பள்ளிக்கு வருவதிலிருந்து வாத்தியாரையே அடிப்பது வரை போகும். ஆனால் பசங்களுக்கு ஊட்டி பள்ளியைக் கண்டால் கொஞ்சம் ஆகாது.
”அவங்களும் நம்ம பசங்கதாம்ப்பா, எப்படிப் பார்த்தாலும் எல்லாம் இலக்கியம்தானே?”
“அடப் போங்க சாரு. நீங்க கனிஞ்சிட்டீங்க…”
அதோடு நான் காலி. இந்தப் பூச்சியை ஆரம்பித்ததிலிருந்து தினந்தோறும் மாணவர்கள் விலகிக் கொண்டே இருக்கிறார்கள். தினந்தோறும் சேர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் உள்வட்டம் மட்டும் அலுங்காமல் குலுங்காமல் அப்படியே இருக்கிறது. அந்த உள்வட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் பேசிக் கொண்ட உரையாடலை கீழே தருகிறேன். ஒருத்தர் ஆண். இன்னொருத்தர் பெண். நான் இங்கே ஜீவகாருண்யம் பேசிக் கொண்டிருக்கிறேன். அங்கே என்ன மாதிரி உரையாடல் (chat) ஓடிக் கொண்டிருக்கிறது என்று பாருங்கள். இரண்டு பேரும் உங்களுக்கு நன்கு தெரிந்த நபர்கள்தான். யார் என்று கண்டு பிடிப்பவர்களுக்கு ஏதாவது ஒரு பரிசு தரலாம். கொரோனா முடிந்து என் செலவில் ப்ரூ ரூமில் ஒரு சந்திப்பு. ஆனால் இருவர் பெயரையும் சொல்ல வேண்டும்.
ஒரு விடியோ – தலைப்பு டாக் மீட், பேட் சூப் – டாப் 10 மோசமான சீன உணவுகள் . இதை முதலில் அனுப்புகிறார். அதற்குக் கீழே பதில். இப்படி ஆரம்பிக்கிறது இந்த சாட்.
😳🦐🦂🐗🐺🦎
பெண்: ஓ, இதுதான் உங்க லிஸ்ட் ஆஃப் ஈட்டபிள்ஸ். ஆனா முதலில் ஹ்யூமன் ஃபேஸ் இருக்கே?
ஆண்: அதான் முதலில். இந்த மோடுமுட்டி மனிதத் தலைகளை உயிரோடு சூப்பில் போட்டுத் தின்ன வேண்டும். அப்போது அவர்கள் கண்களில் மட்டும் உயிர் இருக்க வேண்டும்.
பெண்: மற்றது ஓகே. முதலில் வருவதை நான் ட்ரை பண்ண மாட்டேன். அப்புறம் எனக்குப் பேச ஆள் இருக்காது. ஹ்யூமன் மீட் தான் ரொம்ப டேஸ்ட்டின்னு கேள்விப்பட்டிருக்கேன்.
🙂
ஆண்: ஓஹ்
பெண்: அடப் பாவி. ஹனிபால் லெக்டர் கூடவா நான் இவ்ளோ நாள் பேசிட்டு இருந்தேன்?
ஆண்: இல்ல, வீண் வதந்தியை எல்லாம் நம்பாதீங்க.
ஹ்யூமன் மீட் ஒண்ணும் டேஸ்ட்டி இல்ல, மோஸ்ட் கண்டாமினேடட் மீட்.
பெண்: என்னங்க நீங்க, உயிரோட இருக்கும் போது பிடிக்கிற ஃப்ளெஷ் வேக வச்சா நல்லா இருக்காதுன்னு சொல்றீங்க, இது bias.
ஆண்: மனிதக் கறியைச் சொன்னேன். அதை என்னா செஞ்சாலும் வேஸ்ட்.
பெண்: அதையேதான் நானும் சொல்றேன்.
ஆண்: மனிதக் கறியைச் சாப்பிடும் கலாச்சாரத்தில் இருந்தால் ஒண்ணை மட்டும் சாப்பிடுவேன். அதைச் சொன்னா, வக்கிரமான ஆள்னு சொல்லிடுவீங்க. அதனால சொல்ல மாட்டேன். 🙂
ஆனா நீங்க கெஸ் பண்ணிடுவீங்க.
பெண்: தெரியும், தெரியும். சதைப் பிடிப்பான பாகம்தானே? போன்லெஸ்.
ஆண்: ஆக்சுவலி எனக்கு போன் கறிதான் பிடிக்கும்.
நீங்க பூப்ஸ் என்று நினைத்து இருப்பீங்க, அது இல்ல.
பூப்ஸ் பூப்ஸா இருந்தாதான் ரசிக்கலாம். சாப்பிட அல்ல.
நான் சொன்னது ஹ்யூமன் தலைக்கறி. அது மட்டும்தான் கொஞ்சம் கண்டாமினேட் ஆகாம இருக்கும்.
பெண்: எது, தலையா? எனக்கு அதுதான் புளுத்துப் போனது. இல்லைங்க. நான் இன்னும் கேவலமா நினைச்சேன்.
ஆண்: தியரட்டிக்கலா அப்படி. மண்டு மண்டைதான் டேஸ்டா இருக்கும். பம்ஸ் நினைச்சீங்களா? 🙂
பெண்: pussy / dickஐ நினைச்சேன்.
ஆண்: ஹலோ, புஸ்ஸியை உயிரோடதாங்க சாப்பிட முடியும். சமைச்சி சாப்டா அது மரண மொக்கை!
பெண்: மட்டன்ல பார்த்தா பால்ஸ் ரொம்ப டேஸ்ட்டி. இதுதான் நான் – வெஜ் பேச்சோ?
ஆண்: டிக் ஓக்கே …இறந்தாலும் ஆயிரம் பொன் போன்றது. ஆனா புஸ்ஸிக்கு உயிர் இருக்கும் வரைதான் மரியாதை.
செத்துப்போச்சின்னா… வெறும் நனைஞ்சு போன அப்பளம் மாதிரி தான். 🙂
பெண்: totally agreed. முதல்லயே நினைச்சேன். ஆனா ஆம்பளைங்களுக்கு மட்டும் பெருமை தர வேணாமேன்னு பார்த்தேன்.
ஆண்: தட் ஈஸ் தி ஓப்பன் மைண்ட். 🙂
பெண்: ஒரு பெண்ணா பொறந்துட்டு எங்க ஐட்டமும் பெஸ்ட்டுன்னு முட்டுக் குடுக்கணும் இல்ல?
ஆண்: ஹா ஹா… டெக்னிக்கலி தெரியலை… ஆனா சாத்தியம் இருந்தா எரக்டட் பீனிஸ் பார்-பே-க்யூ போட்டா டெலிகஸி ஆயிடும், வித் பால்ஸ்.
பெண்: அது unfair. எரெக்ட் ஆன அப்புறம் எப்டி ஜஸ்ட் லைக் தட் வெட்றது? அது சாத்தியமே இல்ல. ஜோலி முடிக்கும் போது தூங்கிடும். அதனால பார்-பெ-க்யூ பண்ண முடியாது. எரெக்டா இருக்கிறத வெட்டினா சைனாக்காரன் நாயை உயிரோட எண்ணெய் சட்டில வறுத்ததுக்கு சமம். ஜீவ காருண்யம் வேண்டும். (அடடா, பூச்சி அம்மணியிடம் என்னமா வேல செஞ்சுருக்கு- சாரு)
இது catch 22 situation.
ஆண்: ஜீவ காருண்யம் விலங்குகளுக்குத்தான், மனிதனுக்கு அல்ல!
பெண்: அப்போ சரி!
(ஓ, இதனால்தான் அந்தக் காலத்தில் பெண்களை அடிமைப்படுத்தி வைத்து இருந்தார்களா! – சாரு.)
***
முடிந்தால் சந்தா/நன்கொடை அனுப்புங்கள். நேற்று கூட இந்தத் தளத்துக்கான ஆண்டுக் கட்டணம் 5000 ரூபாயைக் கட்டினார் ஒரு நெருங்கிய நண்பர். இதையே தனித்தனியாக நான் அனுப்பும் வேண்டுகோளாகக் கருதி செயல்படுத்துங்கள். இப்படியே நலிந்த நிலையில் சென்றால், கிண்டில் பக்கம் செல்ல வேண்டியிருக்கும். அது வேண்டாம் என்று பார்க்கிறேன்.
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai