3. ஒரு சிறிய கூழாங்கல் போதும்…

ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள்.  அழகாக இருக்கிறாள்.  உங்கள் நண்பனின் நண்பனின் தங்கையின் நண்பனின் தோழி.  சந்தர்ப்பவசமாகச் சந்திக்க நேர்கிறது.  பார்த்ததும் எடுத்த எடுப்பில் அவளிடம் “நாம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்கிறீர்கள்.  பிஞ்ச செருப்பால் அடிக்க மாட்டாளா?  அதே மாதிரியான ஒரு கேள்வியை இன்று – ஒரு ஐந்து நிமிடத்துக்கு முன்னால் என் நண்பர் ஒருவர் கேட்டிருக்கிறார்.

டியர் சாரு அப்பா,

ஹௌ ஆர் யூ.  உருட்டி பொரட்டி ஒரு‌நாவல் எழுதி இருக்கிறேன்.  நீங்க படிச்சுட்டு இரண்டு திட்டு தந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன். 

***

பெயரும் ஊரும் வேண்டாம்.  யாரையும் திட்டுவதற்கோ அசிங்கப்படுத்துவதற்கோ யாருக்கும் உரிமையில்லை.  ஆனால் ஆதங்கப்படலாம் இல்லையா?  நான் இப்போது ஆதங்கப்படுகிறேன்.  வருத்தப்படுகிறேன்.  என்னை அப்பா என்று அழைத்தால் போதுமா?  ஏன் இப்படி ஒரு இனமே பிணந்தின்னிக் கழுகுகளாக அலைகிறீர்கள்?   இது நெக்ரோஃபீலியா இல்லாமல் வேறு என்ன?  ஏண்டா தம்பி, உன் அப்பனுக்கு நீ செய்யும் கைம்மாறு, சீச்சி… கைம்மாறும் வேண்டாம், ஒரு விளக்கமாறும் வேண்டாம்.  அப்பனை ஒரு சக மனிதனாக நினைக்க வேண்டாமா கண்ணு?  நீ ஒரு சிறுகதைத் தொகுதி எழுதினாய்.  நல்ல கதைகள்.  ஆனால் ஒரே பிழைகள்.  பக்கத்துக்குப் பத்து பிழை.  இலக்கணப் பிழை.  அர்த்தப் பிழை.  எடிட் செய்யாவிட்டால் அப்படியே தூக்கிக் குப்பையில் போட வேண்டியதுதான்.  இரண்டு முழு மாதங்கள் அமர்ந்து திருத்தம் செய்து கொடுத்தேன்.  நட்புக்காக அல்ல.  நல்ல கதைகள் இத்தனை பிழைகளோடு வருவதா என்ற ஆதங்கம்.  நேற்று கூட ஒரு நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன்.  தமிழ்.  முதல் பக்கத்திலேயே எடிட் செய்து கொடுத்த இன்னாருக்கு நன்றி என்று போட்டிருந்தது.  எடிட் செய்தவர் என் மதிப்புக்குரியவர்.  நாவலாசிரியரும் நண்பர்.  நாவலும் நன்றாகவே இருந்தது.  ஆனாலும் புத்தகத்தில் பிழைகள் தாங்க முடியவில்லை.  ஒற்றுப் பிழைகள் இல்லை.  எடிட் செய்தது ஆயிற்றே?  அது கூட சரி செய்யவில்லை என்றால் என்ன அர்த்தம்? அர்த்தப் பிழைகள்.  இலக்கணப் பிழைகள்.  நாற்பது பக்கம் வரை வந்தேன்.  ஒரு இடத்தில் அவருக்கு என்று இருந்தது.  எவருக்கு என்று தெரியவில்லை.  அந்தப் பத்தியிலும் முந்தின பத்தியிலும் இரண்டே இரண்டு பாத்திரங்கள்தான்.  அந்த இரண்டில் இந்த அவர் எவர் என்று தெளிவாக இல்லை.  இப்படிப்பட்ட குழப்பங்களைக் கொண்ட ஒரு ஆங்கிலப் புத்தகம் கூட என் வாழ்வில் நான் படித்ததில்லை.  ஆனால் தமிழில் எந்த நூலைத் தொட்டாலும் இதுதான் நிலை.  ஆக, எழுத்துத் தமிழ் செத்துக் கொண்டிருக்கிறது.  இப்படிப்பட்ட நிலையில்தான் தவிர்க்க முடியாமல் எடிட் செய்ய உட்கார்ந்து விடுகிறேன்.  முந்தைய சாரு என்றால், அந்தப் புத்தகத்தையும் எடிட் செய்ய ஆரம்பித்திருப்பேன்.  அது எனக்கு அடிக்‌ஷன்.  ஆனால் அந்த சாரு இப்போது இல்லை.  என் நேரத்தை நான் மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.  எப்போதுமே அந்த கவனத்தில்தான் இருக்கிறேன். இல்லாவிட்டால் அந்தப் புத்தகத்திலும் பிழை திருத்தம் செய்ய ஆரம்பித்திருப்பேன்.   இப்போது என்ன செய்தேன்?  புத்தகத்தை மூடி வைத்து விட்டு என் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். 

என்னுடைய முழு இரண்டு மாதங்களை அந்தத் தம்பிக்கு அளித்திருக்கிறேன்.  வெளிநாட்டில் வாழ்பவர்.  என் தளத்தை வாசிப்பதே இல்லை என்று நினைக்கிறேன்.  இதுவரை என் எழுத்துக்கு ஒரு பைசா கட்டணம் கொடுத்தது கிடையாது.  திரும்பவும் சொல்கிறேன்.   எனக்குப் பணம் முக்கியம் இல்லை.  ஆனால் நீ என்னுடைய நேரத்தைக் கேட்கிறாய், ஏற்கனவே உனக்கு நான் என் வாழ்வின் இரண்டு மாதங்களைக் கொடுத்திருக்கிறேன் என்றால் பதிலுக்கு என் பளுவைக் குறைப்பது பற்றி யோசிக்கவே மாட்டாயா?  இன்றுதான் பூனை உணவு வேண்டும் என்று ஒரு பதிவு எழுதி அதன் ஈரம் கூடக் காயவில்லை.  தம்பி என்னிடம் மீண்டும் வந்து என் நேரத்தைக் கேட்கிறார்.  நட்பு என்பது என்ன ஒருவழிப் பாதையா? எனக்கு நூறு ரூபாய் அனுப்பும் வாசகர்கள் எல்லாம் உண்டு என்கிறேன், அதையெல்லாம் படித்து விட்டு என்னிடம் வந்து “நாவலைப் படித்துப் பார்” என்று இலவச சேவையில் என்னைத் தள்ளினால் நான் என்ன செய்யட்டும்?  ’நாவலைப் படிக்க பணம் கேட்கிறான்’ என்று இதைக் கொச்சையாகப் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.  என்னுடைய இயக்கத்தில் சம்பந்தமே செய்து கொள்ளாமல், துளி ஈடுபாடு கூட காண்பிக்காமல், ஒருவழிப் பாதையாக நான் மட்டுமே தங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று எப்படி சிலர் எதிர்பார்க்கிறார்கள்? தனிமனித உறவுகளில் இத்தனை சுயநலமாக சிந்திக்கும் இவர்களால் எப்படித் தங்கள் உறவுகளைப் பேண முடியும்?  

சென்ற ஆண்டு நான் வெளிநாடு சென்ற போது ஒரு மதிய நேரம் வந்து என்னை என் ஓட்டலிலிருந்து லஞ்சுக்கு அழைத்துக் கொண்டு போனார்.  முடிந்தது கதை.  அந்த ஊர் என்னுடைய இரண்டாவது தாய்நாடு.  அதனால் வருடா வருடம் போய்க் கொண்டுதான் இருக்க வேண்டும்.  அதனால் இனிமேல் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?  என்னோடு லஞ்ச் சாப்பிட வேண்டுமானால் இனிமேல் 100 டாலர் என்னிடம் கொடுத்து விட வேண்டும்.  லஞ்ச் செலவு தனி.

திரும்பவும் சொல்கிறேன்.  நான் என்ன வீடு கட்டவா கேட்கிறேன்?  இதோ இன்னும் சில மாதங்களில் என்னுடைய Lust Stories of K. Perumal and Some Footnotes நாவல் ஆங்கிலத்தில் வெளிவர இருக்கிறது.  அதற்கு லண்டனிலும் மும்பையிலும் தில்லியிலும் கொல்கொத்தாவிலும் பெங்களூரிலும் Reading Sessions வைக்க இருக்கிறேன்.  இதற்காக பத்து லட்சம் ரூபாய் செலவு ஆகும்.  பரவாயில்லை.  கையேந்தித்தான் ஆக வேண்டும். 

தியாகராஜரைப் படித்த போது அவர் ஒரு மகா கவி என்று புரிந்தது.  கேட்டபோது அவர் ஒரு மொஸார்ட் என்று தெரிந்தது.  ஆனால் உலக அளவில் தியாகராஜரைத் தெரியுமா?  மொஸார்ட்டைத் தெரியாத ஆள் இன்று உலகத்தில் கிடையாது.  தியாகராஜர்?  மைலாப்பூரிலும் மியூசிக் அகாடமியிலும்தான்.  ஒரே ஒரு அமெரிக்கர்தான் ஒரு அற்புதமான நூலை எழுதியிருக்கிறார்.  சென்னையிலிருந்து ஓரண்டு பேர் எழுதியிருக்கிறார்கள்.  அத்தோடு சரி.  மொஸார்ட் காலத்தில் இங்கே ஒரு மொஸார்ட் வாழ்ந்திருக்கிறார்.  நமக்கு அது பற்றித் தெரியவே தெரியாது.  தெலுங்கு நம் பாஷை இல்லை.  தியாகராஜரும் யாரோ ஒரு பிரமாணர்.  ஏதோ கர்னாடக சங்கீதம்.  பிராமின்ஸ் விஷயம்.  நமக்கு என்ன?  ஒரு மொஸார்ட்டே இங்கே பெயர் தெரியாமல் போய் விட்டார் ஐயா.  நானெல்லாம் எம்மாத்திரம்? 

உலகப் பொதுமொழியான சங்கீத விஷயமே இப்படி என்றால் மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகின்ற சமகாலத் தமிழ் இலக்கியம்?  இங்கே பிறந்து சாதனைகள் செய்த தி. ஜானகிராமன், சம்பத், எம்.வி. வெங்கட்ராம், செல்லப்பா, க.நா.சு., புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சமீபத்தில் மறைந்த ஆ. மாதவன் எல்லாம் வெறும் பெயர்கள்.  தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி இவர்களை யாருக்குத் தெரியும்?  இவர்களே உலக இலக்கிய வரைபடத்தில் தீண்டத்தகாதவர்கள்.  அப்படியிருக்கும்போது இவர்களுக்குள்ளேயே தீண்டத்தகாதவனான நான் எங்கே போவது?  அப்படிப்பட்ட என்னுடைய நாவல் ஆங்கிலத்தில் வருகிறது.  அதற்கு நான் இத்தனை ஊர்களில் வாசிப்பு நிகழ்ச்சி வைக்கப் போகிறேன். 

யோசித்துப் பாருங்கள்.  நீங்கள் உலகத்தில் உள்ள எந்த எழுத்தாளனின் பெயரை வேண்டுமானாலும் சொல்லுங்கள்.  குகி வான் தியாங்கோ என்று ஒரு பெயர்.  இங்கே நாகர்கோவிலில் வசிக்கும் ஒரு பொடியனின் குடிசையில் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கும்.  ஆனால் தமிழ் எழுத்தாளனின் பெயர் தமிழ்நாட்டைத் தாண்டி எங்காவது லண்டனில், நியூயார்க்கில் தெரியுமா?  அட, நம்முடைய ஹைதராபாதில் தெரியுமா ஐயா?  என்றைக்காவது ஒரு தமிழ் எழுத்தாளனின் ஆங்கில மொழிபெயர்ப்பு நாவலுக்கு நியூயார்க் டைம்ஸில் ரெவ்யூ வந்திருக்கிறதா?  இங்கே ஹிண்டுவைத் திறந்து பாருங்கள்.  அட அடா.   இதையெல்லாம் மாற்ற உங்களிடமிருந்து ஒரு சிறு துரும்பைத்தான் கேட்கிறேன். 

பாலம் கட்டிக் கொண்டிருக்கிறேன்.  உங்களுடைய ஒரு கூழாங்கல் போதும்.   

இதற்கெல்லாம் ஒன்றும் கவலைப்படாமல் நான் நாவல் எழுதி விட்டேன், படித்துப் பாருங்கள் என்றால் என்ன அர்த்தம் தம்பி?

***

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai