2. இன்று pet shop செல்ல வேண்டும்…

கடந்த மார்ச்சிலிருந்து வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை.  ஏப்ரல் மாதமோ என்னவோ ஒருநாள் காய்கறிக் கடைக்கு செல்ல வேண்டி வந்தது.  திருவிழாக் கூட்டம். என்னதான் residency on earth எவ்வளவு காலம் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என நான் நம்பினாலும் இந்த மண்ணில் இன்னும் கொஞ்சம் வேலை பாக்கியிருக்கிறது என்பதால் ஆபத்தை விலைக்கு வாங்க விருப்பம் இல்லை. அதனால் கடைக்குச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்து விட்டாள் அவந்திகா.  எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு மேனேஜரும் பணியாளர்களும் சமயங்களில் அமேஸான் வர்த்தகமும் உதவுகிறார்கள்.  இன்னும் ஸ்விக்கி மூலம் உணவு வரவழைப்பதில்லை.  அதற்கு இன்னும் அவந்திகா அனுமதி தரவில்லை.  நான் தனியாக வாழ்ந்தால் என்ன செய்திருப்பேன், ஸ்விக்கி உணவுக்கு அனுமதித்திருப்பேனா என்று யோசிக்க முடியவில்லை. அது போன்ற if சூழ்நிலைகளை இப்போதைய நிலையை வைத்து யோசிப்பது கடினம். 

ஜனவரி 30 கோவாவில் நடக்கவுள்ள அராத்து நாவல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் நான் போகவில்லை. அராத்து புத்தக வெளியீடு நான் இல்லாமல் நடப்பது சமீப ஆண்டுகளில் இதுவே முதல் முறை. அவந்திகாவிடம் கேட்கக் கூட முடியாது.  கேட்பது பற்றி நினைப்பது கூட சாத்தியம் இல்லை.  கொரோனா தடுப்பு மருந்து வந்து விட்டால் உன் சுதந்திரத்துக்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன் என்று சொல்லி விட்டாள்.  பார்ப்போம், எப்போது வருகிறது என்று.  மேலும், நான் செய்து கொண்டிருக்கும் வேலையும் முடிய வேண்டுமே?  அதை முடிக்காமல் வெளியே கிளம்புவதில் எனக்கு இஷ்டம் இல்லை.   

இந்த நிலையில் இன்று பூனை உணவுக்காக பெட் ஷாப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.  மேனேஜர் இரண்டு தினங்களாக விடுப்பு.  கடந்த பதினைந்து நாட்களாக பூனை உணவு கையிருப்பில் இல்லை.  அவ்வப்போது மேனேஜர்தான் போய் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.  முன்பெல்லாம் மூன்று நான்கு நண்பர்கள் பூனை உணவு ஆர்டர் செய்து அனுப்புவார்களே, இப்போது என்ன ஒருவர்தான் அனுப்புகிறார் என்று அவந்திகா கேட்டாள்.  அவரும் நானும்தான் இந்த செலவை சமாளிக்கிறோம்.  மொத்தம் இருபது பூனைகள், சுமாராக முப்பது காகங்கள்.  இருவர் சமாளிப்பது கஷ்டம்தான்.  அந்த நண்பரிடம் சொன்னால் அமேஸான் மூலம் மறுநாளே  வந்து விடும்.  அவரிடம் சென்ற வாரம் சொல்லி வரவழைத்தேன்.  அது நேற்றே தீர்ந்து விட்டது.  அதனால் மீண்டும் அவரிடம் சொல்ல முடியாது.  இன்று கடைக்குப் போகத்தான் வேண்டும். 

யாருக்கேனும் பூனை உணவு அனுப்பி வைப்பதில் இஷ்டம் இருந்தால் எனக்கு எழுதுங்கள்.  விலாசம் அனுப்புகிறேன்.  கொஞ்சம் இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். 

charu.nivedita.india@gmail.com  

***

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai