10. இசை பற்றிய சில குறிப்புகள்: திருக்கல்யாணம்

காலையிலிருந்து சீதா – ராமனின் திருக்கல்யாண வைபவத்தை விலாவாரியாக எழுதிக் கொண்டிருக்கிறேன். வெறுமனே எழுத முடியாது.  தியாகராஜரின் உத்ஸவ ஸம்பிரதாயக் கீர்த்தனையான ஹெச்சரிககாவை பற்பல இசைக் கலைஞர்களும் பாடியிருப்பதைக் கேட்டேன்.  பாம்பே ஜெயஸ்ரீ, எம்.எஸ். மேலும் சிலரைக் கேட்டு சிறிதும் திருப்தி இல்லை.  அரியக்குடியைக் கேட்கும் போது மட்டுமே கீர்த்தனையிலும் சங்கீதத்திலும் மனம் லயித்தது.  வேறு யாரேனும் அரியக்குடியின் தரத்தில் பாடியிருந்தால் எனக்கு தயவுசெய்து தெரிவியுங்கள்.  (தம்பி வினித், சஞ்சய், டி.எம். கிருஷ்ணா என்று அனுப்பி வைத்து என்னை டென்ஷன் பண்ணாதே.)  எல்லாவற்றுக்கும் என் குருநாதரையே தொந்தரவு செய்யவும் தயக்கமாக இருக்கிறது. 

தியாகராஜரின் சங்கீதம் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  சங்கீதத்தில் ஈடுபாடுள்ளவர்கள் கேட்டும் இருக்கிறோம்.  ஆனால் அவரது சாகித்தியங்கள் ஒவ்வொன்றும் வைரம், வைடூரியம், மாணிக்கமாய் ஜொலிக்கின்றன.  ஷேக்ஸ்பியர் மீது எனக்கு அளப்பரிய வியப்பு உண்டு.  அத்தகைய வியப்பு தியாகய்யர் மீது ஏற்படுகிறது.  பலவிதமான உப பிரதிகளை (Sub-texts) உள்ளடக்கியதாக இருக்கின்றன கீர்த்தனங்கள் ஒவ்வொன்றும்.  ஒவ்வொன்றைப் பற்றியுமே பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டு போகலாம் போலிருக்கிறது.  730 கீர்த்தனைகளும் சேர்த்து ஒரு மகாசமுத்திரம் போல் காட்சியளிக்கிறது.

ஹே ராமச்சந்திரா! நற்பண்புகளின் உறைவிடமே!  கரும்புவில்லோன் (மன்மதன்) தந்தையே! இந்திரனைக் காப்பாற்றியவனே!

எச்சரிக்கையாக வாராய்!

பொன்மயமான கிரீடத்தின் ஒளி சுடரவும்

சிறந்த குண்டலச் சோடு அசையவும்

பெருமைக்குரிய இரு காற்சிலம்புகளின் இணை கலீரெனவும்

சனகாதியர் யாவரும் கண்டு களிக்கவும்

எச்சரிக்கையாக வாராய்!

நன்முத்துச்சரங்கள் அசைந்தாடவும்

பிரம்மனும் இந்திரனும் இருவரிசையில் துதிக்கவும்

மென்மையான வீணையைக் கேட்டபடி

மாணிக்கப் படிகளில் மெதுவாக இறங்கி

குதூகலம் பொங்க

எச்சரிக்கையாக வாராய்!

உன்னைக் காண வரும் உன் சகோதரியின் (பார்வதி) கையில் உள்ள கிளியின் உள்ளம் மகிழ உன் மகிமைகளைப் பேச,

வானோர் மலர் தூவ

உயர் தியாகராஜன் கண்டு கொள்ள,

எழில் குலுங்க

எச்சரிக்கையாக வாராய்!   

charu.nivedita.india@gmail.com

கீர்த்தனை தமிழாக்கம்: எஸ். ராமனாதன், டி.எஸ். பார்த்தசாரதி மற்றும் தியாகராஜ வைபவம் இணையதளம் மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு அடியேன் செய்தது.   

***

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai