ஒரு பெரிய விவாதத்துக்கு உரிய விஷயத்தை என் நண்பர் கேஷவ் தட்டி விட்டார் முகநூலில். கிருஷ்ணாவின் பழைய கச்சேரி ஒன்றைப் பகிர்ந்திருந்தேன். அதில் அவர் ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது ஒரு சூப்பர் டூப்பர் இடதுசாரி என்றும், ஆனாலும் அவர் இசை என் நெஞ்சைத் தொடுகிறது என்றும் எழுதியிருந்தார் கேஷவ். தொடட்டும். அது எனக்குப் பிரச்சினை இல்லை. சங்கராபரணம் என்ற படத்தில் வரும் பாடல்களைக் கேட்டு வடக்கே ஓடியவன் நான், இப்போதுதான் தெற்கே திரும்பியிருக்கிறேன். ஆள் ஆளாளுக்கு அவரவர் ரசனை. ஆனால் படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது பெருமாக் கோவில் என்பார்கள் இல்லையா, நீங்கள் எதை வேண்டுமானாலும் பாடிக்கொள்ளுங்கள், பரிசு வாங்கிக் கொள்ளுங்கள். ஸ்ரீராமனை தர்சித்தேன் என்னை நம்பு என்று பாடினவரின் பாட்டை வைத்துக் கொண்டு பாடி பரிசு வாங்கிக் கொண்டு எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது என்று ஜல்லி அடிக்கக் கூடாது இல்லையா என்பதே என் கேள்வி. ஏன் கார்ல் மார்க்ஸை வைத்து பஜனை பண்ண வேண்டியதுதானேய்யா?
முகநூலில் நான் எழுதியிருந்த பதிவு:
கலையிலிருந்து வாழ்க்கையைப் பிரிக்க முடியாது என்பதே தியாக பிரம்மத்தின் வாழ்விலிருந்து நான் அறிந்து கொண்டது. கம்யூனிஸத்தை வைத்துக் கொண்டு புரட்சி பண்ணலாம். ராமரை நேரில் தரிசித்தவர்களின் சங்கீதத்தை கார்ல் மார்க்ஸ் சித்தாந்தத்தை வைத்து அளக்க முடியாது. தொழிலுக்கு வேண்டுமானால் பயன்படும். ஆத்ம அனுபவத்தைப் பெற முடியாது.
வோலட்டி வெங்கடேஸ்வரலு, முசிறி சுப்ரமணிய ஐயர், எஸ். ராமனாதன், முடிகொண்டான் வெங்கட்ராம ஐயர், கே.வி.என்., ஜி.என்.பி, எம்.எல்.வி., மதுரை மணி, அரியக்குடி, செம்மங்குடி, செம்பை, ஆர். வேதவல்லி போன்றவர்களைக் கேளுங்கள். எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது என்று சொல்பவர்கள் தியாகராஜரைத் தொட்டுப் பாடுவது கடைந்தெடுத்த… வேண்டாம் சங்கீத விஷயங்களில் எதிர்மறைப் பேச்சு வேண்டாம்…
- கலையிலிருந்து வாழ்க்கையைப் பிரிக்க முடியாது என்பதே தியாக பிரம்மத்தின் வாழ்விலிருந்து நான் அறிந்து கொண்டது. கம்யூனிஸத்தை வைத்துக் கொண்டு புரட்சி பண்ணலாம். ராமரை நேரில் தரிசித்தவர்களின் சங்கீதத்தை கார்ல் மார்க்ஸ் சித்தாந்தத்தை வைத்து அளக்க முடியாது. தொழிலுக்கு வேண்டுமானால் பயன்படும். ஆத்ம அனுபவத்தைப் பெற முடியாது.
- Like
- · Reply
- · 6 m
- Charu Niveditaகேஷவ், நீங்கள் என் ப்ளாகில் எழுதுவதைப் படிப்பீர்கள் என்று நம்புகிறேன். வோலட்டி வெங்கடேஸ்வரலு, முசிறி சுப்ரமணிய ஐயர், எஸ். ராமனாதன், முடிகொண்டான் வெங்கட்ராம ஐயர், கே.வி.என்., ஜி.என்.பி, எம்.எல்.வி., மதுரை மணி, அரியக்குடி, செம்மங்குடி, செம்பை, ஆர். வேதவல்லி போன்றவர்களைக் கேளுங்கள். எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது என்று சொல்பவர்கள் தியாகராஜரைத் தொட்டுப் பாடுவது கடைந்தெடுத்த… வேண்டாம் சங்கீத விஷயங்களில் எதிர்மறைப் பேச்சு வேண்டாம்…