ஜோடிப்புறாவை எங்கே காணோம்?

இரவு பகலாக இந்த நாவலை எழுதினேன். இத்தனை தீவிரமாக, இத்தனை வேகமாக ஒரு நாவலை என் வாழ்வில் எழுதியதில்லை. ஐந்து தினங்களில் எழுதி முடித்தேன். மொத்தம் 20000 வார்த்தைகள். அன்பு நாவலின் அடுத்த பாகம் என்று கொள்ளலாம். இதன் பிடிஎஃப் வடிவம் தயாரானதும் யார் யாருக்கெல்லாம் தேவையோ அவர்களுக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன். என் நாவல்களின் மொழிபெயர்ப்புக்குப் பணம் தேவைப்படுகிறது. பெட்டியோ, அன்பு நாவல்களின் மொழிபெயர்ப்பு முடிந்து விட்டது. ராஸ லீலா பாகம் ஒன்று, பாகம் இரண்டு … Read more

ஒரு வேண்டுகோளும் ஒரு பிரார்த்தனையும்…

மாயமான் வேட்டை என்ற என் சிறுகதைத் தொகுதி ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் மூலம் வெளியாகியிருக்கிறது. எப்போதும் போல் பேராதரவு கொடுத்து வாங்குவீர்கள் என நம்புகிறேன். என் ஆசை எப்படியும் அறுபது பிரதிகளாவது விற்று விட வேண்டும் என்பதுதான். அப்படி அறுபது பிரதிகள் விற்று விட்டால் திருப்பதி வேங்கடவனுக்கு முடி காணிக்கை செலுத்தலாம் என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன். புத்தக விழாவில் நான் என் புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் கவனித்தேன். நூறு பேர் புத்தகம் வாங்கினார்கள் என்றால் … Read more

நலமா?

அன்புள்ள சாருவுக்கு, தாங்கள் நலமா? ஜலதோஷம் குணமாகிவிட்டதா? நேற்றிரவு தங்களின் ஒரு குறுநாவலுக்கு எழுதிய முன்னுரை கட்டுரையை வாசித்தேன். தாங்கள் குறிப்பிட்டது போல “நாற்பது ஆண்டு வாசிப்பின் சாரம்” என்பதின் கனத்தை என்னால் உணர முடிந்தது. தங்களுக்கு இக்கட்டுரையை எழுதி முடிக்க ஆறு மணி நேரம் ஆனதாக குறிப்பிட்டிருந்தீர்கள். வாசித்து புரிதலை அடைய எனக்கு மூன்று மணி நேரம் எடுத்தது, அவ்வளவு அடர்த்தியான கட்டுரை இது. சிம்யூலேஷன் ஹைப்பர்-ரியாலிட்டியாக தோன்றுவதும், அதன் விளைவுகள் இலக்கியத்தில் ஒரு விதமான பாதிப்பையும், தமிழ்த் … Read more

ஒரு குறுநாவலுக்கு எழுதிய முன்னுரை

இப்போது ஒரு குறுநாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். இரண்டொரு நாட்களில் முடித்து நமது தளத்தில் பதிவேற்றுவேன். அதகளமாக இருக்கும். அன்பு நாவலின் தொடர்ச்சி என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் கதை நீங்கள் சற்றும் எதிர்பாராததாக இருக்கும். அந்தக் குறுநாவலுக்கு ஒரு முன்னுரை எழுதினேன். 1100 வார்த்தைகள்தான். ஆனால் இதை எழுத எனக்கு ஒரு ஆறு மணி நேரம் எடுத்தது. நாற்பது ஆண்டு வாசிப்பின் சாரம் இது. குறுநாவலின் பெயரைச் சொன்னால் அதைப் பதிவேற்றம் செய்வதற்குத் தடங்கல் வரும். யாரும் … Read more

கேடு தரும் டாஸ்மாக் உணவகங்கள்

இப்போது எழுதப் போகும் விஷயத்தைப் பற்றி பல முறை எழுதியிருந்தாலும் என்னோடு உடன் வரும் நண்பர்கள் மறந்து விடுவதால் மீண்டும் எழுதுகிறேன்.  உனக்கு எங்கே போயிற்று புத்தி என்று நீங்கள் என்னைக் கேட்டால், எனக்கு இந்த விஷயத்தில் புத்தி இல்லை என்ற பதில்தான் வரும்.  இவ்விஷயத்தில் நான் அதிகவனமாகவே இருந்தாலும் ஓரிரு முறை மறந்து விடுகிறேன்.  மறந்தால் என் வாழ்வில் பதினைந்து நாள் காலி. இறையருள் பாதி, பாதி என்னுடைய அதி தீவிர உடல் பராமரிப்பு மற்றும் … Read more