த அவ்ட்ஸைடர்: சில எதிர்வினைகள்

சாரு,  தருமபுரியிலிருந்து ஸ்ரீதர். “இன்னும் சத்தமாகக் குரை” பகுதியைப் படித்தேன். உங்களது ஆதங்கம் நியாயமானது. அதற்கான பதில் – படிக்கிறோம். எப்போதும் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவுரங்ஸேப்  போல ஒரு செறிவைக் கொண்டது சீலேயின் சரித்திரம். நீங்கள் சொன்னதுபோல் நமக்கான வரலாறு அதிகார மையங்களால் தந்திரமாகக் கட்டமை க்கப்பட்டது. நிதர்சனமான உண்மையான சரித்திரங்கள் சமூகங்களுக்கு என்றுமே காட்டப்படுவதில்லை. பெருந்திரளான மக்கள் கூட்டங்களுக்கு மத்தியில் மிகச் சொற்ப எண்ணிக்கையிலான மனச்சான்றுடைய எழுத்தாளர்கள், கலைஞர்களே அவை குறித்து பதிவாக்குகின்றனர். அவையும் … Read more

த அவ்ட்ஸைடர் – 17 (Más fuerte Perra – இன்னும் சத்தமாகக் குரை பெண்நாயே!)

உடலை ஒடுக்குதல் என்பது சர்வாதிகாரத்தின் பண்புகளில் ஒன்று. அதனால்தான் ஹிட்லர் ஓரினச் சேர்க்கையாளர்கள் அனைவரையும் வதைமுகாமுக்கு அனுப்பினார்.  அதைப் போலவேதான் சீலேயின் ஓரினச் சேர்க்கையாளர்களும் பிஸாகுவாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.  இது கிட்டத்தட்ட ரஷ்யாவில் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை சைபீரியாவின் பனிப்பாலைகளுக்கு அனுப்பியதற்கு நிகர்.    லியனார்தோ ஃபெர்னாந்தஸ் என்பவர் சீலேயின் ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றி ஆய்வு செய்தவர்.  இபான்யேஸ் தெல் காம்ப்போவின் (Ibáñez del Campo) ஆட்சியில் – அதாவது, 1920களின் இறுதியில் – ஓரினச் சேர்க்கையாளர்கள் … Read more

சாரு நிவேதிதாவின் எழுத்தும் குற்ற உணர்ச்சியும்: அராத்து

சாரு நிவேதிதா எழுத்தின் தனித்தன்மை என்ன என சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். தமிழில் அநேகமாக குற்றவுணர்ச்சியில் இருந்து விடுவிக்கும் எழுத்து சாரு நிவேதிதாவினுடையது. பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் குற்றவுணர்ச்சி கொள்ள வைக்கும் அல்லது குற்றவுணர்ச்சியை அதிகரிக்க வைக்கும். கழிவிரக்கம் , ஏங்கி ஏங்கி நொந்து போதல் , மருகுதல் , தோல்வியை சிலாகித்தல் , கையாலாகாத்தனத்தை ஹீரோயிஸமாக்குதல் , ஏழ்மையை , ஆண்டாண்டுகாலமாக இருந்து வரும் தாய் , மகள் போன்ற குடும்ப உறவுகளை காவியமாக்குதல் … Read more

த அவ்ட்ஸைடர் – 15 (பிஸாகுவா)

1925 ஜூன் 25 அன்று லா கொருன்யாவில் நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து இந்த நூறு ஆண்டுகளில் கார்லோஸ் கார்ரிதோவின் (Carlos Garrido) கதை அங்கே ஒரு புராணக் கதை போல் – நம் ஊர் மதுரை வீரன் கதை போல் ஆகி விட்டது.  ஜூன் 25 படுகொலைகள் கார்லோஸின் வன்முறைப் பேச்சினால் தூண்டப்படவில்லை என்று கருதும் மற்றொரு விவரமும் நமக்குக் கிடைக்கிறது.  தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை தொழிற்சாலை அதிகாரி ஒருவன் அடித்துக் கொன்று … Read more

குருவைக் கண்டடைதல்

இந்த விஷயத்தைப் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் தன் உடல் நலம் குறித்து அக்கறை கொள்வோர் பலரும் காலையில் நடைப் பயிற்சிதான் செய்கிறார்கள்.  அப்படி நடைப் பயிற்சி செய்தாலும் அறுபது வயதில் பைபாஸ் அறுவை சிகிச்சை அல்லது ஸ்டெண்ட் வைத்துக் கொள்வது போன்றவற்றிலிருந்து தப்பிக்க முடிவதில்லை.  நான் உட்பட.  எனக்கு பதினாறு வயதில் காச நோய் வந்தது.  ஒரு நூற்றியிருபது ஸ்ட்ரெப்டொமைசின் ஊசி போட்டார்கள்.  சரியாயிற்று.  அதன் பிறகு ஐம்பத்தைந்து வயது வரை ஜுரம், தலைவலி, … Read more