அடியேனைப் பற்றி ஜெயமோகன் – 2008

1. அன்புள்ள ஜெயமோகன், ஜே.ஜே.சிலகுறிப்புகள் பின்நவீனத்துவ வடிவம் கொண்டது என்கிறீர்கள். இப்போது சாரு நிவேதிதா எழுதும் நாவல்கள் போலத்தான் அவையும் இருக்கின்றன என்பதை இப்படி பார்க்கும்போது உணர முடிகிறது. சுயகதையும், உண்மையான மனிதர்களைப்பற்றிய விஷயங்களும், வம்புகளும், கிண்டலும் கலந்த வடிவம்தான் ஸீரோ டிகிரி முதலிய நாவல்களிலும் உள்ளது. ஜே.ஜே.சிலகுறிப்புகளை சாரு நிவேதிதா எப்படி வரவேற்றார்? அதைப்பற்றி அவர் ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அன்புள்ள …. சாருநிவேதிதா ஒரு சுவாரஸியமான பத்தி எழுத்தாளர் [காலம்னிஸ்ட்] மட்டுமே. பத்தி எழுத்தாளர்கள் எப்போதும் … Read more

ஒரு லெஜண்ட் பற்றி மற்றொரு லெஜண்ட்!

நாளை தில்லி செல்கிறேன்.  அங்கிருந்து நாளை மறுநாள் காலை ஆறு மணிக்கு புதுதில்லி ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் ரயிலில் நைனிட்டால் செல்கிறேன்.  அடுத்த மூன்று தினங்களும் ஆஷிஷ் நந்தியுடன் கலந்துரையாடல்.  அமார்த்யா சென் பொருளாதாரத்துக்கு என்றால் ஆஷிஷ் நந்தி சமூகவியல் மற்றும் உளவியல் துறையில்.  நோபல் கிடைத்திருக்க வேண்டும்.  இனிமேலும் கிடைக்கலாம்.  வங்காளம் தான் இப்படி அறிஞர்களையும் கலைஞர்களையும் உருவாக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறது.  தாகூர், ரித்விக் கட்டக், சத்யஜித் ரே, மஹாஷ்வேதா தேவி, எம்.என் ராய், … Read more

எஸ்.வி. சேகர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற காமெடியன்களுக்குப் பதில் சொல்வதா என் வேலை?

ஹலோ சாரு, என் பேர் ———————– உங்க கிட்ட ஒரு தடவ பேசிருக்கேன்.  இன்னிக்கு உங்கக் கட்டுரை நல்லா இருந்தது.  தொடர்ந்து தீவிரமா இந்த மாதிரி உருப்படியான விஷயங்கள எழுதுங்க.  நன்றி… என் வாட்ஸப்பில் இப்படி ஒரு குறுஞ்செய்தி இன்று காலையில் வந்திருந்தது.  இது பற்றிக் கொஞ்சம் சொல்ல இருக்கிறது.   நான் நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.  கடித நபரின் வயதே அத்தனை இருக்குமா தெரியாது.  இதுவரை 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  அதில் ஆறு நூல்களே நாவல்கள்.  … Read more