“சாரு புலம்புகிறார்” – 2

சாரு புலம்புகிறார் என்று எதற்கு சொல்லியிருப்பார்கள் என்று இப்போது புரிகிறது.  ஊட்டி திரைப்பட விழாவுக்குச் சென்ற போது அங்கே என்ன நடந்தது என்று எழுதியிருந்தேன்.  அதுதான் அவர்களுக்குப் புலம்பலாகத் தெரிந்திருக்கும்.  இம்மாதிரி புலம்பலை நான் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்பேன்.  ஏனென்றால், அங்கே என்னை அழைத்தவர்கள் நான் பேசும் போது மைக்கே தரவில்லை.  மேடைக்குப் பின் புறம் – கொல்லைப்புறத்தில் – பத்து பேருக்கு முன்னால் பேசச் சொன்னார்கள்.  மைக் இல்லாமல்.  ஆனால் மிஷ்கினுக்கு வேறு விதமான … Read more

“சாரு புலம்புகிறார்” – 1

தமிழர்கள் யாரும் இலக்கியம் படிப்பதில்லை.  அதனால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை.  ஆனால் இலக்கியம் அறியாததன் காரணமாக இவர்களில் முக்காலே மூணு வீசம் பேர் விலங்குகளைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  விலங்கு என்ன செய்கிறது?  இரை தேடுகிறது.  மலஜலம் கழிக்கிறது.  புணர்கிறது.  குட்டி போடுகிறது. நீண்ட நேரம் உறங்குகிறது.  மீண்டும் இரை தேடுகிறது.  இதையே தான் தமிழர்களில் பெரும்பாலோர் செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் மிருகங்கள் சந்தோஷமாக இருக்கின்றன.  ஏனென்றால், அவைகளுக்கு வேறு ஆசைகள் இல்லை.  வீடு கட்ட வேண்டியதில்லை.  … Read more

ரஜினி, கமல், டிரம்ப், தினகரன் : அராத்து

ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்ற செய்தி இன்று செய்தி சேனல்களை ஆக்கிரமித்து உள்ளது. இந்த ஆண்டு முடியப்போகிறது என்பதாலும் , நியூ இயர் பார்டிக்கு இன்னும் நேரம் இருப்பதாலும் கண் சொருகி யோசித்ததால் இந்த கட்டுரை. உலகம் முழுக்கவே அரசியலில் சத்தமில்லாமல் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து வருவதை கவனித்துப்பார்த்தால் புரியும். அரசர் ஆட்சி , காலனிய ஆட்சிகளைத் தொடர்ந்து , கொள்கை ரீதியாக பல அரசுகள் அமைந்தன . மக்கள் புரட்சி நடந்து சில அரசுகள் … Read more

ரஜினி – கமல் – தினகரன் – டிரம்ப் : அராத்து

முகநூலில் அராத்துவின் பின்வரும் சிறிய கட்டுரையைப் பார்த்தேன்.  இதில் உள்ள எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, சந்திப் பிழை, தேவையற்ற ஆங்கில வார்த்தைப் பிரயோகம் ஆகியவற்றைத் தவிர்த்து, இதில் உள்ள அத்தனை விஷயங்களையும் அப்படியே நானும் எழுதியதாகக் கொள்ளவும்.  இந்த ஆட்களைப் பற்றி நானும் இதே மாதிரிதான் நினைத்தேன்.  நேற்று நியூஸ் 7-இல் அழைத்த போதும் இதையேதான் சொன்னேன்.  வைரமுத்துவுக்கு ஞானபீடம் கொடுக்க இருப்பதாக ஜெ. எழுதியிருந்தார்.  கொடுத்தால் தற்கொலை செய்து கொள்ளலாம்; தைரியம் வராவிட்டால் தினகரன் … Read more