யுவன் சந்திரசேகரின் சிறுகதை

நற்றிணை பதிப்பகம் யுகன் நற்றிணை பதிப்பகத்தின் சார்பில் நம் நற்றிணை என்று ஒரு அழகான இலக்கியப் பத்திரிகையைக் கொண்டு வந்திருக்கிறார். சமீப காலமாய் நான் தமிழில் எதுவும் படிப்பதில்லை. (ரொம்பக் காலமாகவே அப்படித்தான் என்று தோன்றுகிறது. ஒரு தமிழ் எழுத்தாளன் தமிழில் படித்தே ஆக வேண்டுமா என்ற கேள்வியும் எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது. முன்னோடிகள் அனைவரையும் அவர்கள் எழுதிய எல்லாவற்றையும் ஒன்று விடாமல் படித்தாயிற்று. அது போதும் என்று தோன்றுகிறது. உலக இலக்கியம்தான் இப்போதைக்குப் படிக்க ரசமாக … Read more

ஜனாதிபதியான ஒரு வழிப்பறிக் கொள்ளையனும் ஒரு கவிஞனும்…

1985-இல் வெளிவந்த என்னுடைய லத்தீன் அமெரிக்க சினிமா என்ற நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்காக எடிட் செய்து கொண்டிருந்த போது கீழ் வரும் தகவலைக் கண்டேன்.  அப்போதெல்லாம் இண்டர்நெட், கணினி இல்லாத காலம் என்று சொல்லத் தேவையில்லை.  அப்படியெல்லாம் வரும் என்று கூட யூகிக்க முடியாத காலம்.  எப்போதும் தில்லி செண்ட்ரல் செக்ரடேரியட் நூலகத்தில்தான் இருப்பேன்.  அமெரிக்காவிலிருந்து வந்து கொண்டிருந்த சிறுபத்திரிகைகளிலிருந்துதான் இந்த விபரங்களைப் பெற்றிருப்பேன் என்று தோன்றுகிறது.  அல்லது, கூபாவிலிருந்து வந்து கொண்டிருந்த granma பத்திரிகையிலிருந்து இருக்கலாம். … Read more

நன்றி

ArtReview Asia Autumn 2017 வெளிவந்துள்ளது.  இதன் அட்டையில் என் கட்டுரை பற்றிய குறிப்பு இருக்கிறது.  அட்டைப்படக் கட்டுரை.  இந்த அளவுக்கு என்னை சர்வதேச அளவில் தெரிய வருவதற்காக உழைத்த தோழி காயத்ரி ஆர்.  அவர் தான் தொடர்ந்து பல பணிகளுக்கு இடையில் என் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தருகிறார்.  என்னோடு பணியாற்றுவது மிகவும் கடினம் என்று எல்லா நண்பர்களும் கூறுகின்றனர்.   காலை ஆறு மணிக்கு போன் பண்ணுவது அதில் ஒன்று.  எல்லா சிரமத்தையும் பொறுத்துக் … Read more

கடவுளும் பக்தர்களும்

எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன், படிக்காதவர்களை விட (நான் படிப்பு என்று சொல்வது பள்ளிப்படிப்பை அல்ல) படித்தவர்கள்தான் அதிக ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள், அதிக மூடர்களாக இருக்கிறார் என்று. நேற்றைய பிக்பாஸில் என்ன நடந்துள்ளது என்று பீராய்ந்தேன். அதாவது, புத்தகத்தில் பக்கங்களைப் புரட்டி விட்டுப் புரட்டி விட்டுப் படிப்பது போல அஞ்சு பத்து நிமிஷத்தை ஓட விட்டுப் பார்ப்பது. நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் இன்னும் ஆறு நாட்கள் என்ற அறிவிப்பும் அதில் கமல் படமும் தெரிகிறது. அங்கே உள்ள … Read more