நடிகர் அஜித்துக்கு ஒரு பகிரங்கக் கடிதம்…

மை டியர் அஜித், மார்ஜினல் மேன் எடிட்டிங் வேலையில் மூழ்கியிருப்பதால் எனக்குக் கொலை மிரட்டல் விட்ட உங்கள் ரசிகர் மேல் போலீஸில் புகார் கொடுக்க முடியவில்லை.  உங்கள் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு பல எண்களிலிருந்து ஆபாச வசைகள் வந்தன.  மெட்ராஸ் செண்ட்ரல் தளத்தில் என் பேச்சுக்குக் கீழே உள்ள பின்னூட்டங்களில் தங்கள் அடையாளத்துடன் தங்கள் தொலைபேசி எண்ணுடன் என்னை ஆபாசமாகப் பேசியிருக்கிறார்கள்.  ”உன் மகள் —————(ஜனன உறுப்புக்கான தமிழ்க் கொச்சை) காய்ச்சிய இரும்புக் கம்பியைச் சொருக … Read more

விவேகம் – 6

அஜீத்தின் ரசிகர்கள் விவேகம் படத்தை விமர்சிப்பவர்களைக் கொலைவெறியோடு தாக்குகிறார்கள்.  இதுவரை வாழ்வில் நான் இத்தனை பெரிய எதிர்ப்பை நேரடியாக எதிர்கொண்டதில்லை.  வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது.  அடையாளம் கண்டு அடித்து விடுவார்களோ என்று.  ஆனாலும் விமர்சனத்தை நிறுத்த மாட்டேன்.  இந்தப் பதிவை எழுதுவதன் காரணம், என்னைப் பற்றி எனக்கே நேற்று தான் ஒரு விஷயம் தெரிந்தது.  எழுத்தில் இருக்கும் கடுமை பேச்சில் இல்லை.  இருந்திருந்தால் விவேகத்தை குப்பை என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.  இறைவி பற்றிய விமர்சனத்தில் – … Read more

விவேகம் சர்ச்சை – 6 (இயக்குனர் அருண் வைத்தியநாதனின் பதில்)

நான் பெரிதும் மதிக்கும் சாரு அவர்களுக்கு, விமர்சனமே செய்யக்கூடாது என்றோ, சினிமா விமர்சனம் செய்பவர்களை ஜெயிலில் போட வேண்டும் என்று கதறும் அளவுக்கோ சின்னபுத்திக்காரன் நானில்லை. விமர்சனமென்பது எந்த ஒரு கலைக்குமே வேண்டும் – சினிமாவிற்கு கண்டிப்பாய் வேண்டும். அது குத்திக் குதறி, வன்மத்தை கக்கும் ஒரு விஷ அருவியாய் வெளியே விழக்கூடாது. எவ்வளவு மோசமான விஷயத்தையும், செய்தவரே நாணுமளவுக்கு, அவர்களே அடுத்த முறை அதை செய்யத் தயங்கும் அளவுக்கு, ஒரு கண்ணாடி போல் செயல்பட வேண்டும். … Read more

விவேகம் சர்ச்சை – 5

விவேகம் பிரச்சினை பெரிய பிரச்சினையாகப் போகும் போல் இருக்கிறது. படம் கபாலியை விட பெரிய வசூல் என்று தெரிகிறது. அப்படியென்றால் மூடிக் கொண்டு போக வேண்டியதுதானே? ஏன் அந்தப் படத்தை விமர்சிப்பவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுகிறார்கள்? இதில் ஒருவர் சினிமா என்பது குழந்தை பெறுவது போல. பிறந்த குழந்தையை யாராவது திட்டுவார்களா என்கிறார். அப்படியானால் தமிழில் வெளிவந்துள்ள எல்லா படங்களுமே குழந்தைதான். எதையுமே விமர்சிக்கக் கூடாது. எழுத்தாளர்கள் எழுதும் எல்லா கதைகளுமே குழந்தைதான். எந்தக் கதையையும் யாரும் … Read more

விவேகம் – கொலை மிரட்டல்

இன்று (26.8.2017) 1.22 மணிக்கு எனக்குத் தெரியாத நம்பரிலிருந்து ஒருவர் போன் செய்து என் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு ஆபாசமாகத் திட்டினார். விவேகம் படத்துக்கு நீ யார்ரா பு…. என்று ஆரம்பித்துத் தொடர்ந்தது வசை. கட் பண்ணி விட்டு அந்த எண்ணை ப்ளாக் செய்தேன். உடனே இரண்டு நிமிடத்தில் இன்னொரு எண்ணிலிருந்து போன் செய்து கொலை மிரட்டல் விட்டார். கச்சேரி ரோடு போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செய்ய எனக்கு நேரம் இல்லை. அருண் வைத்தியநாதன் … Read more