பதினைந்து அபூர்வமான எழுத்தாளர்கள்!

மணியிடம் ஒரு விஷயத்தை ஆர்வத்துடன் சொல்லி முடிப்பேன்.  அவரும் படு சுவாரசியமாகக் கேட்பார்.  முடித்து விட்டு, எப்படி என்பேன்.  ஆஹா ஆஹா என்று ஆஹாகாரம் செய்து விட்டு, லேசாக, இந்த விஷயத்தை ஒன்பதாவது தடவையாகச் சொல்கிறாய் என்பார்.  அடப்பாவி, அதை முதலிலேயே சொல்வதற்கென்ன என்றால் உன் ஆர்வத்தைப் பார்த்தவுடன் சொல்லத் தோன்றவில்லை என்று பதில் வரும். அது போல் உங்களிடமும் இதை ஒன்பது முறை சொல்லியிருக்கலாம்.  இப்போது பத்தாவது தடவை.  ஆனால் படு ஆர்வமாகச் சொல்லத் தொடங்குகிறேன்.  … Read more

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா – ஆத்மார்த்தி

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா ஆத்மார்த்தி மே 3, 2017 என் இந்தக் கட்டுரையை என்னிடமிருந்தே தொடங்குவதுதான் எனக்கு நானே செய்துகொள்ளக் கூடிய நியாயமாக இருக்க முடியும். என்னளவில் நான் இன்னும் சிலபல ஜென்மங்களுக்கு வெறுக்க விரும்புகிற ஒருவனைப் பற்றிய கட்டுரை இது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். எனக்கு சாரு நிவேதிதாவைப் பிடிக்கவே பிடிக்காது. அதுவும் கையில் கிடைத்தால் நாக்கு எரிகிறாற் போல நாலு கேள்விகளையாவது கேட்டுவிடவேண்டும் என்பதை நோக்கமாக அல்ல, உறக்க நடுவாந்திரம் எழுப்பி … Read more

கடுமையான மழை பொழிந்து கொண்டிருக்கிறது…

நீங்கள் ஒரு பத்திரிகை ஆசிரியராக இருந்து பார்த்தால்தான் என் அருமை தெரியும். எல்லா கதை கட்டுரைகளும் போய்ச் சேர்வதற்கு முன்னால் முதல் ஆளாக அனுப்பி விடுவேன். ஆசிரியர்களுக்கு என்னால் எந்த டென்ஷனும் இருக்காது. நேற்று இரண்டு பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் அனுப்ப வேண்டும். ஒன்று, உலக சினிமா. இன்னொன்று, ஃப்ரெஞ்ச் தத்துவம். இரண்டொரு நாட்களில் கார்த்திக்கின் திருமணம் இருப்பதால் சில நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து விஷயத்தைச் சொல்ல வேண்டும். அதில் கொஞ்சம் பிஸியாக இருந்து விட்டேன். இதற்கே இன்னும் … Read more