ஒளியின் பெருஞ்சலனம் – 6
கட்டுரையைப் படிக்க: தினமலர் இணையதளம்
கட்டுரையைப் படிக்க: தினமலர் இணையதளம்
தமிழில் நாடகத்தின் நிலை எப்படி இருக்கிறது என்று நினைத்தால் சகிக்கவொண்ணாத் துயரம் கவிகிறது. முதலில் இங்கே நாடகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கிறது. இந்த நிலையில் முதல்முதலாக நவீன நாடகத்தை ஒரு கலையாக அறிமுகப்படுத்தியவர் ந. முத்துசாமி. ந. முத்துசாமியையும் நவீன நாடகத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் உடனடியாகச் செய்ய வேண்டியது அவரது நாடகங்களைப் படிப்பதாகும். மேலும் படிக்க: தினமணி இணையதளம்
கடந்த சனிக்கிழமை முதல் வகுப்பு எடுத்த பிறகு இன்று இரண்டாவது வகுப்பு. காலை 11.15க்கு ஆரம்பித்தது வகுப்பு. Empire of the Sun மற்றும் The Artist ஆகிய இரண்டு படங்களை முன்வைத்து மாணவர்களுக்கு சினிமா பற்றி கற்பித்துக் கொண்டிருந்தேன். கூடவே இலக்கியமும் இசையும் வாழ்க்கையும். ரொம்ப உற்சாகமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் மாணவர்கள். ஒரு கட்டத்தில் கல்லூரியின்/ வகுப்பின் ஒருங்கிணைப்பாளர் என்னிடம் வந்து மாணவர்கள் லஞ்சுக்குப் போக வேண்டும், அடுத்த வகுப்பு இரண்டு மணிக்கு இருக்கிறது என்றதும்தான் … Read more
ராமன் ராகவ் திரைப்படம் திரையிடல் & கலந்துரையாடல், 21-08-2016, ஞாயிறு மாலை 6.00 மணிக்கு. இடம்: பிரசாத் லேப், சாலிகிராமம், ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் உள்ள சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சிறப்பு அழைப்பாளர்: இயக்குனர் அனுராக் காஷ்யப். நண்பர்களே இயக்குனரை அனுராக் காஷ்யப் தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் நிகழ்விற்காக சென்னை வருகிறார். சனிக்கிழமை விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. ஞாயிறு மாலை, அனுராக் காஷ்யபின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான … Read more
கோவை புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஆகஸ்ட் 28 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண்- 173, 174) மற்றும் உயிர்மை (அரங்கு எண்- 80) அரங்குகளில் கிடைக்கும். நேரம்: காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்: கொடிஸியா வளாகம், கோவை – ஸ்ரீராம்
முகநூலில் பார்த்த பதிவு. ஜி. கார்ல் மார்க்ஸ்: முந்தைய பதிவில் ‘சராசரி’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தேன். அந்த வார்த்தையை யாரையும் காயப்படுத்தும் நோக்கிலோ அல்லது அவமதிக்கும் நோக்கிலோ சொல்லவில்லை. இதன் பின்னுள்ளது ஒரு சலிப்பு. நமது பொதுபுத்தி, அறிவுஜீவித்தனத்துக்கு எதிராக கொண்டிருக்கிற மூர்க்கத்தின் மீதான எரிச்சல் அது. ஒரு உதாரணத்துடன் இதைப் பார்ப்போம். உங்களுக்கு தினமும் காலையில் எழுந்தவுடன் பத்து கிலோமீட்டர் தூரம் ஓடுகிற பழக்கம் இருக்கிறது. நல்ல பழக்கம்தான் அது. அதற்காக உசைன் போல்ட்டைப் பார்த்து, … Read more