ஒன்று

சாரு,   புத்தகக் காட்சியில் உங்களிடம் பேச முடிந்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். உங்கள் எழுத்துக்கள் மூலமே உங்களை அறிந்த எனக்கு இது ஒரு வகையில் அதிர்ச்சியும் கூட. மன்னிக்கவும், இவ்வளவு சாதுவாக நீங்கள் பேசுவீர்கள் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. உங்களுக்கு முன் நானெல்லாம் ஒரு பூச்சி. எனினும் நான் பேசியதையும் கவனமாகக் கேட்டு பதில் கூறியது எல்லாம் கனவில் நடந்தது போல இருக்கிறது.    இரண்டாம் நாளும் வேறு ஒரு புத்தகத்தில் கையெழுத்து கேட்கும் … Read more

ஒளி எனும் மொழி – நூல் வெளியீட்டு விழா

நாள்: 25-01-2015, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு. இடம்: புக் பாய்ன்ட் அரங்கம், அண்ணா சாலை, ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை காவல் நிலையம் அருகில். நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் பேசாமொழி பதிப்பகம் சார்பாக இந்த ஆண்டு ஒளிப்பதிவு துறை தொடர்பான ஒளி எனும் மொழி என்கிற நூல் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு பற்றியும், அதன் தொழில்நுட்பம், அழகியல், காட்சியமைப்புகள் பற்றியும் எல்லாருக்கும் புரியும் வகையில், ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகக் காட்சியில் முதல் … Read more

வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் (1)

புதிய தலைமுறையில் நான் எழுதி வரும் வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் தொடரின் முதல் அத்தியாயம்: வணக்கம். இந்தப் புதிய பத்தியில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  பொதுவாக பத்தி எழுத்துக்கும் ஆய்வுக் கட்டுரைக்கும் உள்ள வித்தியாசம், பத்தி எழுத்தில் உள்ள சுவாரசியம்.  இதில் இந்திய அளவில் பெரிதும் கொண்டாடப்பட்டவர் குஷ்வந்த் சிங்.  தமிழில் சுஜாதா.  எனவே இந்தப் பத்தி சுவாரசியமாக இருக்கும் என்பதை உறுதி அளிக்கிறேன்.   இது எதைப் பற்றியது என்று கேட்டால், சூரியனுக்குக் கீழுள்ள அத்தனை … Read more

மாதொரு பாகன் சர்ச்சை / Deccan Chronicle & Asian Age

தில்லி, மும்பை, கல்கத்தா, லண்டன் ஆகிய நகரங்களிலிருந்து வெளிவரும் ஏஷியன் ஏஜ் நாளிதழில் பெருமாள் முருகன் சர்ச்சை குறித்த என் கட்டுரை இன்று (22.1.2015) வந்துள்ளது. http://www.asianage.com/columnists/death-taste-258 அதே கட்டுரை தென்னிந்தியாவிலிருந்து வெளிவரும் டெக்கான் க்ரானிகிள் நாளிதழிலும் இன்று வெளிவந்துள்ளது.

தஸ்லீமா நஸ்ரினும் உண்மையும்…

தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி அவர் பெயரைப் பயன்படுத்துவதற்காக என்னை மன்னிக்க வேண்டும்.  சிவங்கரியையும் விடவும் தட்டையாக எழுதுபவர் தஸ்லீமா நஸ்ரின்.  ஆனால் ஆங்கிலத்தில் எழுதுவதால் உலகப்புகழ் பெற்று விட்டார்.  அவருடைய லஜ்ஜாவை நான் குப்பை என்று சொன்னதற்காக தஸ்லீமா, “சாரு நிவேதிதா லஜ்ஜாவை குப்பை என்று சொன்னால் உண்மையும் குப்பை தான்” என்று ட்வீட் போட்டிருக்கிறார்.  நல்லது.  இப்போதுதான் மாதொரு பாகன் பிரச்சினை பற்றி எழுதி விட்டு வெளியே வந்தேன்.  தஸ்லீமாவை எப்படி அணுகுவது என்பதற்கு அவரே … Read more

தொந்தரவு செய்யாதீர்கள்…

மதிப்புமிக்க சாரு அண்ணாவுக்கு, வணக்கம். மாதொருபாகன் குறித்து உங்கள் கருத்தை நான் அறிவேன். ஆனால் என் வாசிப்பனுபவத்தில் அந்த நாவல் என்னை ஈர்த்தது அது குறித்து ஒரு மதிப்புரை எழுதியுள்ளேன். உங்களுக்கு நேரமும் சூழலும் வாய்க்குமெனில் படியுங்கள். ஒரு நாவலை நான் அனுகியவிதத்தில் ஏதெனும் தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள். எனக்கு உதவும். மற்றபடி எக்ஸைல் 2  இன்னும் வாசிக்க வில்லை. வாசித்துவிட்டு உங்களுக்கு எழுதுகிறேன். அதன் வெளியீட்டு விழாவுக்கு என்னால் வரமுடியாமல் போனது எனக்குத் தான் இழப்பு. … Read more