க.நா.சு.வை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்த கதை

நான் படித்த இரண்டாவது கதை புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம். அதுதான் என்னை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்தது. அதைப் போன்ற கதை உலகத்துச் சிறுகதைகளிலேயே வெகுசிலதான் தேடினாலும் கிடைக்கும். க.நா.சு. புதுமையும் பித்தமும் என்ற நூலில் சிற்பியின் நரகம் : புதுமைப்பித்தன் 1. சூரியாஸ்தமன சமயம். காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் என்றையும்விட அதிக நெருக்கடி. கறுத்து ஒடுங்கிய மிசிர தேசவாசிகளும், வெளுத்து ஒடுங்கிய கடாரவாசிகளும், தசை வலிமையின் இலட்சியம் போன்ற கறுத்த காப்பிரிகளும், வெளுத்த யவனர்களும், தென்னாட்டுத் தமிழும், … Read more

இன்னொரு உலகச் சிறுகதை

சாப விமோசனம்: புதுமைப்பித்தன் ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை. சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடிந்துபோன தசைக் கூட்டத்திலும் வீரியத்தைத் துள்ளவைக்கும் மோகன வடிவம்; ஓர் அபூர்வ சிற்பி பூலோகத்தில் இதற்காகவென்றே பிறந்து தன் கனவையெல்லாம் கல்லில் வடித்துவைத்தானோ என்று தோன்றும் அவ்வளவு லாகிரியை ஊட்டுவது. ஆனால் அந்தப் பதுமையின் கண்களிலே ஒரு சோகம் – சொல்லில் அடைபடாத சோகம் – மிதந்து, பார்க்கிறவர்களின் வெறும் தசை … Read more

உலகின் மிகச் சிறந்த நூறு கதைகளில் ஒன்று

செல்லம்மாள் : புதுமைப்பித்தன் 1 செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள். நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட வைத்துவிட்டு, செல்லம்மாளாக இருந்த அந்த உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று அரைக்கண் போட்டபடி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக வசமிழந்து … Read more

என்னுடைய நாவல்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில்…

சமீப காலமாக என்னை வாசிக்க ஆரம்பித்திருக்கும் பலருக்கும் என் நாவல்களில் பரிச்சயம் இருப்பதில்லை. அவர்கள் என் கட்டுரைத் தொகுப்புகளையே படித்திருக்கிறார்கள். இப்போது ஸீரோ டிகிரியின் எழுத்து பிரசுரத்தில் என்னுடைய எல்லா நாவல்களும் சேர்த்து 1499 ரூ. விலையில் கிடைக்கிறது. 34 சதவிகிதத் தள்ளுபடியில். இதை யாவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

162. இந்தியா பற்றி சில நல்ல வார்த்தைகள்…

வரும் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை (நவம்பர் 1, இந்திய நேரம் காலை ஆறு மணி) புதுமைப்பித்தன் பற்றிய என் உரைக்குத் தயாராகுங்கள்.  புதுமைப்பித்தனின் கதைகள் இணையத்திலும் கிடைக்கும்.  ஐந்து கதையாவது படித்திருந்தால் நல்லது.  *** என் எழுத்துக்கு யாரிடமிருந்து எதிர்வினை வருகிறதோ இல்லையோ என் நண்பர் பாலசுப்ரமணியனிடமிருந்து குறைந்த பட்சம் ஐந்து கடிதங்களாவது வந்து விடும்.  பாராட்டும் கடிதங்கள் அல்ல, எதிர்வினைகள்.  பல சமயங்களில் அவர் கொடுக்கும் விவரங்கள் எனக்குப் பெரிதும் உதவி செய்திருக்கின்றன.  கடுமையான … Read more

161. பிறவிப் பிணியும் பிறவிப் பேறும்…

இதுவரை பார்த்த வெப்சீரீஸில் (வெப்சீரீஸ் என்பதற்குத் தமிழ் என்ன?) என்னை ஆகக் கவர்ந்தது லூசிஃபர்.  (GOT பற்றிப் பேசவே கூடாது.  அது எல்லாவற்றையும் கடந்த ஒரு தனி ராஜ்ஜியம்.  அது வெப்சீரீஸே இல்லை.  அது ஒரு காவியம்.) அதில் வரும் நடிகர் டாம் எல்லிஸ் கிரேட் பிரிட்டனின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மட்டும் பிரிட்டிஷ் உச்சரிப்போடு பேச, மற்ற அனைவரும் அமெரிக்க உச்சரிப்பில் பேச படு ஜாலியாக இருந்தது.  என்னைப் போன்ற அவ்வளவு ஆங்கிலப் … Read more