taemil!

11.4.2017 தமிழில் படிப்பதையே நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன்.  அதிலும் தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதப்படும் தமிழைப் பார்க்கும் போது தமிழை வன்கலவி செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது. சமீபத்தில் என் நண்பர் ஒருவர் எழுதியிருந்த கட்டுரையில் சுமாராக 150 சந்திப் பிழைகள் இருந்தன.  பேசாமல் ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவிலும் ஒற்றெழுத்துக்களைப் போட்டு விடுங்கள் என்று சொன்னேன்.  சுத்தமாக யாரும் ஒற்றெழுத்தே போடுவதில்லை.  சந்திப் பிழை என்றால் சந்தி பிழை.  750 வார்த்தைகள் கொண்ட கட்டுரையில் 150 சந்திப் பிழைகள்.  … Read more

கடல் கன்னி

கடல் கன்னி ரொஹேலியோ சினான் (Rogelio Sinan) ஆங்கிலத்திலிருந்து தமிழில்: சாரு நிவேதிதா “இதோ பாருங்கள் டாக்டர் பால் எக்கர், இந்த வழக்கில் உங்கள் மீது நாங்கள் காட்டியிருக்கும் பொறுமைக்கு நீங்கள் இப்போது சாதிக்கும் மௌனம் எந்த விதத்திலும் நியாயமாக இல்லை. நீதிக்குத் தேவை அழுத்தமான ஆதாரங்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் ஏன் இப்படி மௌனம் சாதிக்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.” பால் எக்கர் தன் பச்சை நிறக் கண்களால் சூனியத்தை … Read more

அசோகமித்திரனின் தத்துவம்

அசோகமித்திரன் குறித்து சாரு உரை – 24.10.2015 24.10.2015 அன்று பனுவல் அரங்கில் அசோகமித்திரன் குறித்து நான் பேசிய இந்த உரையைத் தட்டச்சு செய்து உதவிய நண்பர் அருள் வில்லியம்ஸுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.  மேலும், இதையெல்லாம் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் டாக்டர் ஸ்ரீராம் இல்லாவிட்டால் இது எதுவுமே நடக்க சாத்தியமில்லை.  வாசகர் வட்ட நண்பர்கள் மாதம் ஒருமுறை சந்தித்துப் பேசாவிட்டாலும் இது போன்ற ஆக்கபூர்வமான பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ***  பொதுவாக கூட்டங்களுக்கு முதல் ஆளாகப் … Read more