கௌஹர் ஜான்

1902 நவம்பர் 14-ஆம் தேதி.  கல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் இரண்டு அடுத்தடுத்த அறைகளில் ஒரு ரெடிமேட் ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைக்கப்பட்டது.  இந்தியாவின் முதல் ரெக்கார்டிங் அன்றுதான் நடக்கப் போகிறது.  அதுவரை எந்தப் பாடலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டதில்லை.  சினிமாப் பாட்டு அல்ல.  அந்தக் காலத்து சாஸ்த்ரீய சங்கீதம்.   தென்னிந்தியாவின் கர்னாடக சங்கீதம் மாதிரி வடக்கில் ஹிந்துஸ்தானி. அதில் அப்போது உலகப் புகழ் பெற்று விளங்கியவர் கௌஹர் ஜான்.  இந்தியாவில் வேலை செய்த வில்லியம் என்ற ஆர்மீனிய … Read more

ஆ. மாதவன்

December 20, 2015 தினமணி இணைய இதழில் இந்த ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி ஆ. மாதவன் பற்றி எழுதியிருந்தேன்.  பிறகு உடனேயே அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் பலரிடமும் அவரது தொலைபேசி எண்ணைக் கேட்டேன்.  ஜெயமோகனைக் கூட தொடர்பு கொண்டு கேட்டேன்.  ஆனால் அவர் அப்போது கனடாவில் இருந்தார்.  அதற்குப் பிறகு பழுப்பு நிறப் பக்கங்களின் மற்ற எழுத்தாளர்களில் மூழ்கி விட்டேன்.  இருந்தாலும் அவ்வப்போது அவரைத் தொடர்பு கொள்வது சம்பந்தமாக முயற்சி செய்து கொண்டே … Read more

2. சிவப்புக் கலர் பால் பாய்ண்ட் பேனா

இன்று ஒரு பிரபல பில்டர் போன் செய்து உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் சார் என்றார். ரொம்ப நாளாக எனக்கு சிவப்பு நிற பால் பாய்ண்ட் பேனா தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் நோட்டுப் புத்தகத்தில்தான் எழுதுகிறேன். ஒரு நண்பர் நோட்டுப் புத்தகமும் வாங்கிக் கொடுத்து விட்டார். நாலு நோட்டு ஆர்டர் பண்ணி ஒண்ணுதான் வந்தது. மூணுக்கு புகார் செய்திருக்கிறார். அமேஸான். ஆக, இன்றைய தேவை சிவப்புக் கலர் பால் பாய்ண்ட் பேனா. அதைக் கேட்டேன். நாளை … Read more

நாகார்ஜுனர் – அபிலாஷ்

தமிழ்நாட்டில் செக்ஸ் ஸ்டார்வேஷன் பற்றித்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஃபிலாசஃபி ஸ்டார்வேஷனும் இந்த அளவுக்கு இருந்திருக்கிறதா என்கிற அளவில் பிய்த்துக் கொண்டு போகிறது அபிலாஷின் நாகார்ஜுனா தத்துவ விவாதம். அபிலாஷ் நாகார்ஜுனரின் Mulamadyamakakarika என்ற நூலைப் பற்றி தினமும் அரை மணி நேரம் உரையாற்றப் போகிறேன் என்று சொன்னதும் புத்தாண்டு தினத்தில் ஏன் இந்த சோகச் செய்தி என்றே முதலில் நினைத்தேன். முதலில் அந்த நூலின் பெயரையே சரியா உச்சரிக்க வராதே? சம்ஸ்கிருதத்தில் பிரித்துப் பிரித்துப் போட … Read more

ஒரு அற்புதமான இலக்கிய அனுபவம்

கடந்த ஒரு ஆண்டாக பிரபலமாகப் பேசப்பட்டு வரும் ஒரு நாவலைப் படிக்க எடுத்தேன். பின்னட்டையிலேயே தப்பு. முருகண் என்று வருகிறது. ஒரு எழுத்தாளரின் பெயரை இப்படி முருகண் என்று போட்டிருக்கிறார்கள். அந்த நாவலை எழுதியவர் முருகண் அல்ல. அவர் வேறு. அவர் பெயரில் தப்பு செய்யவில்லை. என்ன ஆகிறது என்றால், இப்படி அட்டையிலேயே தப்பு இருந்தால் உள்ளே எப்படி இருக்கும் என்று பயம் உண்டாகி விடுகிறது. இருந்தாலும் நாவலைப் படித்து விடுவேன். வலுவான சிபாரிசு. எதையும் சுலபத்தில் … Read more

1.

எதையெல்லாம் நீ துறக்கிறாயோ… புத்தாண்டில் எழுதும் முதல் கட்டுரை.  கிருமி முற்றாகப் போகவில்லை என்றாலும் நாம் பூச்சியை முடித்து விடுவோம்.  இதற்கு வேறு ஏதாவது ஒரு தலைப்பு வைக்க  வேண்டும்.  அதுவரை எண்கள். சென்ற ஆண்டு நிறைய எழுதியவர்களில் என்னையும் சேர்த்திருந்தார் பா. ராகவன்.  சந்தோஷமாக இருந்தது.  ஆனால் வேறொரு விஷயத்தை நான் உங்களுக்கு இதுவரை சொல்லவில்லையே என நினைத்து சற்று என் மீதே வருத்தமாகவும் இருந்தது.  நான் எழுதிய பூச்சி அனைத்தும் நான் ஈடுபட்ட வேலையிலிருந்து … Read more