சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவிலும் ஹாலிவுட் சினிமாவிலும் எனக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால் நான் உடனே அழைக்கும் நண்பர், கருந்தேள் என்று அறியப்படும் ராஜேஷ் தான்.  நல்ல சினிமா விமர்சகராகத் தெரிய வந்து விட்டார்.  தினகரனில் தொடர்ந்து பல மாதங்களாக திரைக்கதை பற்றித் தொடர் எழுதி வருகிறார்.  ஆங்கிலம் நன்றாக எழுதத் தெரிந்தவர் என்பதால் ஆங்கிலத்தில் எழுதுங்கள், தமிழில் வேண்டாம் என்றேன்.  ஆனால் புத்திரர்கள் என்றாலே தகப்பன் பேச்சைக் கேட்கக் கூடாது என்ற விதிக்கு இணங்க அவர் தமிழிலேயே எழுதுகிறார்.  … Read more

எதிர் நீச்சல்

தமிழில் எழுத்தாளனாக வாழ்வது பற்றிய சுயபுலம்பல் கட்டுரைகள் பலவற்றை நான் எழுதியிருக்கிறேன்.  ஆனால் இந்திய ஆங்கில எழுத்துச் சூழல் இன்னொரு வகையில் பயங்கரமானது.  அதில் உள்ள ஒரே ஆறுதல் 30 லடசம், 50 லட்சம் என்று ஏதாவது ஒரு பரிசைத் தூக்கிக் கொடுத்து விடுவார்கள்.  இப்படி கிழக்கு ஆசியாவிலேயே ஒரு 50 பரிசுகள் உள்ளன.  இதில் ஏதாவது ஒரு பரிசை வாங்காத இந்திய ஆங்கில எழுத்தாளரே இல்லை எனலாம். நான் சமீபத்தில் எழுதிய முன் மன்னிப்பு என்ற … Read more

காதலன் படத்தில் வரும் பெண் போலீஸ்

காதலன் படம் பார்த்திருப்பீர்கள்.  அந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் வெகு சிலர்.  அதில் ஒரு பெண் போலீஸ் போதை புகையிலையை வாயில் குதப்பிக் கொண்டு பிரபு தேவாவின் குதத்திலேயே லத்தியால் குத்துவார்.  ஞாபகம் இருக்கிறதா?  அந்தக் காட்சி தான் முந்தா நாள் தி இந்துவில் அம்பையின் கட்டுரையைப் படித்ததும் ஞாபகம் வந்தது.  பெண்களின் மீதான வன்முறை இந்தியாவில் மிக அதிகம்.  மிக மிக அதிகம்.  ஆனால் படித்த, மேல்தட்டு வர்க்கத்தில் உள்ள பெண்கள் பலர் ஆண்கள் மீது செலுத்தும் … Read more

முரண்பாடு

அன்புள்ள சாரு, முன்குறிப்பு: ஒரு வாசகனாக தங்கள் இருவரின் எழுத்தையும் வாசிப்பதிலோ/ ரசிப்பதிலோ எனக்கு இதுவரை எந்தவொரு பிரச்சனையும் இருந்ததில்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன். தங்கள் இருவருக்கும் இடையே உள்ள கேலி, கிண்டலை இலக்கியத்தின் ஒரு விளையாட்டாகவே ரசித்து வந்துள்ளேன். இருவருமே அவரவர் அடிப்படையில் எனக்கு பிடித்த எழுத்தாளர்களே. இலக்கியத்தில் நடக்கும் சில்லறை சண்டைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் இந்த ஜெயமொகன் vs பெண் எழுத்தாளர்கள் பிரச்சனையில் தங்கள் நிலைப்பாடு குறித்து ஒரு பெரும் சந்தேகம் … Read more

பணமும் குடும்பமும் எழுத்தாளனும்…

இதுவரை சைரனில் 28 கட்டுரைகள் எழுதியிருப்பேனா?  முதல் நான்கு கட்டுரைகளுக்கு மட்டும், பத்துப் பதினைந்து முறை ஃபோன் செய்து கேட்ட பிறகு ஒரு கட்டுரைக்கு ரூ.750/- வீதம் 3000 ரூ அனுப்பினார்கள்.  அதற்குப் பிறகு பணம் வரவில்லை.  நானும் பணத்தை எதிர்பார்த்து எழுதுவதில்லை.  ஆனால் வீட்டில் இது ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து எனக்கும் அவந்திகாவுக்கும் அடிக்கடி வாக்குவாதமும் மன உளைச்சலுமாக (எனக்கு) இருந்து வந்தது.  பொதுவாக பெரும் பத்திரிகைகள் தவிர வேறு நிறுவனங்கள் பணம் … Read more

ஓர் முன் மன்னிப்பு…

”அவர் பெயரை என் வாழ்நாள் முழுதும் உச்சரிக்க மாட்டேன்” என்று சொன்னவர் ஜெயமோகன்.  “அவர்” என்று அந்த வாக்கியத்தில் குறிக்கப்படுபவர், அடியேன்.  ஜெயமோகனுக்கும் எனக்குமான ‘நட்பு’ தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறிந்ததே. எனக்கு ஜெயமோகன் மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.  எங்களுக்குள் மட்டும் அல்ல, எல்லா இலக்கியவாதிகளுக்குள்ளும் இடையிலான முரண்பாடுகள், சண்டைகள், கோபதாபங்கள் அனைத்துமே இலக்கியம், தத்துவம், அழகியல் பற்றிய ஒவ்வொருவருக்கும் இருக்கும் மதிப்பீடுகளின் மோதல் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் ஜெயமோகனுக்கும் எனக்கும் … Read more