ஜப்பான் – 2

சென்ற ஆண்டு தோக்யோவில் ரொப்பங்கியில் ஒரு பப்பில் நான் சந்தித்த பெண்ணை மீண்டும் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. அவளுடைய தொலைபேசி எண் என் தோக்யோ நண்பரிடம் இருக்கிறது. சந்தித்தால் எனக்கு ஒரே ஒரு ஆசைதான். இந்தப் பாடலுக்கு அவளுடன் ஒரு டான்ஸ் ஆட வேண்டும். சம்போகத்தை விட இன்பமானது நமக்குப் பிடித்த பெண்ணோடு ஆடுவது. என்னவோ தெரியவில்லை, நம்முடைய நெருங்கிய தோழிகளோடு ஆட வாய்ப்பதில்லை. எல்லோரும் தம்முடைய பாடி கார்டோடு வருகிறார்கள். எங்கே ஆடுவது? சம்போகத்தை விட ஆடல்தான் தேகத்துக்கும் மனதுக்கும் பேரின்பதைத் தரக் கூடிய என்பதை இந்தியர்கள் உணர மாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்தது இருட்டில் புணர்ந்து ஜனத்தொகையைப் பெருக்குவது மட்டும்தான்.

நடனத்தில் ஒரு பெண்ணை அணைத்தபடி அவள் கழுத்தில் உதடு ஸ்பர்சிப்பதன் இன்பம் அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

(70) Phil Collins – Another Day in Paradise (live 1990) – Phil Cam – YouTube

முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது இந்தப் பாடல் வந்து. எத்தனையோ ஆயிரம் முறை கேட்டாயிற்று. இன்றும் புதிதாகக் கேட்பது போல் இருக்கிறது. ஃபில் காலின்ஸ் என் உயிர்.