அடுத்த வாசகர் வட்ட சந்திப்பில் பின் வரும் இணைப்பில் உள்ள பாடல்களைக் கேட்கலாம் என்று நினைக்கிறேன். ருமானிய இசை. பட்டையைக் கிளப்பும். கேட்பவர்கள் ஆடாமல் இருக்க முடியாது. நாடி நரம்புகளைத் துள்ள வைக்கும் இசை. இதைக் கொஞ்சம் அதிக டெசிபலில் வைத்துக் கேட்பதே நலம். இங்கே சென்னையில் பாஷா, டப்ளின் போன்ற புனித இடங்களில் இந்த இசையைக் கேட்கலாம். ரொம்ப காலம் கழித்து போன வாரம் பாஷாவுக்குப் போயிருந்த போது இந்த இசையைக் கேட்டேன். இரண்டு மணி நேரம் போகக் கூடிய இணைப்பு இது. முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த இசையைக் கேட்டால் பதற்றம், நடுக்கம், வெறுப்பு, கோபம், அசூயை, மயக்கம், மரண பயம், வாந்தி போன்ற உபாதைகள் நேரலாம். அத்தகையவர்கள் இந்த இசையைக் கேட்க வேண்டாம் என்றும், நேராக உ.த.எ. எழுத்தைப் படிக்குமாறும் கோரப்படுகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=WoGh5dhPKWs
இன்னொரு க்ளப் இசை:
https://www.youtube.com/watch?v=KQYdL_XOrKE
Comments are closed.