அழுகல் முட்டை தொடர்பாக

கோவிட் ஊரடங்கு காலகட்டத்தில் அராத்துவை முகநூலில் இயங்கும் குழுமம் ஒன்று நேரலை நிகழ்விற்கு அழைத்திருந்தார்கள். அது ஒரு இளையராஜா பஜனை மடம். அராத்து வழக்கம் போல பேச ஆரம்பிக்க, குழுமத்தின் மகளிரும் தடிமாடுகளும் கமெண்ட் பெட்டியில் கொதித்தெழுந்து உருண்டுகிடந்ததை பார்த்துப்பார்த்து சிரித்து வயிற்று வலியே வந்துவிட்டது.

அராத்து அப்படித்தான் பழகினவன் பழகாதவன் என்று பார்க்கக்கூடிய ஆளில்லை. தன் கருத்துக்களை நறுக்குத்தெறித்தாற்போல் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிற ஆள். சாரு அப்படியில்லை, அதனால்தான் அழுகல் முட்டை நேர்காணலில் அந்த புரட்சிப்புயலாள் கேட்ட கேள்விக்கு சிரித்துக்கொண்டு ஆரம்பித்திருக்கிறார்.

ஹா , முதல் கேள்வியிலேயே சாருவை வீழ்த்திவிட்டார் பாரென்று பலர் கலிங்கத்துப்பரணி அப்பெண் மீது பாடிவைத்திருப்பதைப் பார்த்தேன். பாவம் அந்தப் பெண். அந்தக் கேள்வி, அந்தக் குழுமம், அதன் தலைவர் ,கேள்வி கேட்ட பெண் , எல்லாவற்றையும் மேம்போக்காக பார்வையிட்டதில் அது ஒரு உப்புமா குழுமம் என்று தெரிந்து கொண்டேன்.

கவிஞர் சாம்ராஜுடன் அந்தக் குழுமம் நடத்தியிருந்த நேர்காணலும் இப்படித்தானிருந்தது. சமீப நாட்களில் இப்படி ஒரு குழுமம் மீதுகூட ஒரு புகார் வந்தது, கிழக்கு பத்ரி வெளியிட்ட புத்தகங்களின் மீது சிலர் எழுதிய எதிர் விமர்சனங்களை வெளியிட மறுக்கிறார்கள் என்று.

வாசிப்பின் ஆரம்ப நிலையிலுள்ள அன்பர்களுக்கு வரும் வியாதி, தலைக்கனம். அதை உற்சாகப்படுத்த ஒளி மாதிரி ஒருத்தன் இருந்தால் சர்வ நாசம்.

அன்புள்ள பெண்களே ஒரு அட்வைஸ்

தடிமாடுகள் நீங்கள் எழுதும் கவிதை உலகத்தரமானது என்பான், இதை ஹிப்ரு மொழியில் மொழிபெயர்த்து உலகம் முழுக்க பரப்ப வேண்டுமென்பான், நம்பாதீர்கள்.

உங்கள் சிறுகதைக்கு ஈடு வைக்க வேண்டுமானால் புதுமைப்பித்தனை சொல்லலாம் என்பார்கள், நம்பாதீர்கள். நான் எடுக்கப்போகும் குறும்படத்தில் வருகிற Powerful பெண் கதாபாத்திரத்திற்கு உங்கள் உடல்மொழிதான் பொருந்திப்போகும், நடித்துத்தர முடியுமா என்பார்கள் நம்பாதீர்கள்.முடிந்த வரை தப்பித்துக்கொண்டு வாசிப்பை மேம்படுத்திக்கொண்டு உய்யுங்கள்.

பிரபு கங்காதரன், ஃபேஸ்புக்கில்