நாட்டு நாட்டு

நாட்டு நாட்டு கேட்டேன். பார்த்தேன். குடிகாரன் எடுத்த வாந்தி போல் இருந்தது. இதற்கு ஆஸ்கர் கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால் வைரமுத்துவும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கலாம். ஆனால் பெருமாள் முருகன் ஏமாற்றமடைவார்.

சமீபத்தில் நிறைய போலிகளைப் பார்த்து படித்து மன உளைச்சலில் இருக்கிறேன். ஊரே கொண்டாடிய ஒரு சிறுகதை. போலி எழுத்தின் உச்சகட்டம். ஊரே கொண்டாடிய ஒரு சினிமா. மதிய நேரத்து மயக்கம். போலி சினிமாவின் எடுத்துக்காட்டு. இதற்கிடையில் இளையராஜாவின் பாட்டு வேறு. அதை போலி என்று சொல்லக் கூடாது. நான் பாடினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. அது பற்றி றியாஸ் குரானா விரிவாக எழுதி விட்டார். இனி எழுத எதுவும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று எல வீழ பூஞ்ச்சிரா பார்த்தேன். நேசமித்ரன் சிபாரிசு என்பதால் தைரியமாகப் பார்த்தேன். அருமையான படம். ஒரு வாரமாக அனுபவித்த மன உளைச்சல் தீர்ந்தது. மதிய நேரத்து மயக்கம் ஏன் போலியான படம் என்பதை எல வீழ பூஞ்ச்சிரா பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

ஆமாம், எனக்கு ஒரு சந்தேகம். லாபி பண்ணி ஆஸ்கர் வாங்கலாம் என்கிற போது அதே பாணியில் வேலை செய்து நோபலும் வாங்க முடியுமா? தெரிந்தவர்கள் எழுதலாம். முயற்சி பண்ணலாம் என்று யோசிக்கிறேன்.