கொழும்பு பயணம்

இங்கே பாசிக்குடாவில் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிகிறது. இங்கே இருந்து கொண்டு எழுதுவது சாத்தியம் இல்லை. ஏனென்றால், இவர்களின் அவதூறுகளுக்கு நான் பதில் எழுதவில்லை. எழுதினால் தலை என்னிடம் இருக்காது. அதனால் கொழும்பு கிளம்புகிறேன். என்னை நேரில் வந்து பார்த்து ஆதரவு தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி. ஒரு பெண் கூட வந்து ஆதரவு தருவதாகச் சொன்னார். துரதிருஷ்டவசமாக அவர் பெயரை மறந்து போனேன். கொழும்புவில் மூன்று நாள் இருப்பேன்.

என்னை அழைத்த நண்பர்களுக்குப் பலவிதமான நெருக்கடிகள் தருவதாக அறிந்தேன். போலீஸ் வரைக்கும் விஷயம் போயிருக்கிறது. தெருவிலும் சாலையிலும் நூற்றுக்கணக்கில் நாய்கள் அலைகின்றன, காரில் அடிபட்டுச் சாகின்றன, கை கால் உடைந்து நகர்வதைப் பார்க்க ரத்தக் கண்ணீர் வருகிறது என்று எழுதினால் எங்களை ஏன் நாய் என்று சொன்னாய் என்று என்னிடம் போலீஸை அனுப்புகிறீர்களே, உங்கள் மண்டையில் என்னதான் இருக்கிறது? எவனாவது ஒரு தேசத்துக்கு வந்து அந்த தேச மக்களை நாய் என்று சொல்வானா? அந்த அளவுக்கு மூளை கெட்டவனா நான்? இன்று கூட என்னைப் பார்த்து என்னோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு போனது ஒரு முஸ்லிம் பெண் தான். பலரும் என்னிடம் கண்ணீருடன் மன்னிப்புக் கேட்டார்கள், தங்கள் சமூகத்தவர் என்னை அவமதித்ததற்காக. அவர்களுக்கு என் நன்றி.

இறைவன் எல்லோருக்கும் நல்ல புத்தியைத் தர வேண்டும்.