கொண்டாட்டம்

வாழ்வின் மிகக் கொண்டாட்டமான, குதூகலமான மனநிலையில் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருப்பது இப்போதுதான். பெட்டியோ… அப்படியாகச் சென்று கொண்டிருக்கிறது. இன்றும் நயநதினியிடமிருந்து ஒரு நீண்ட மெஸேஜ். ஒரு நாவலின் அத்தியாயம்தான் அது. அதை மொழிபெயர்த்து அப்படியே ப்ளாகில் போட்டு விட மனம் துடிக்கிறது. குறைந்த பட்சம் அதில் கொடுக்கப்பட்டிருந்த ஒரு மேற்கத்திய இசைக் கோர்வையையாவது போடலாம் என்று ஆர்வமுறுகிறது மனம். ஆனால் நாவலிலிருந்து எதுவுமே வெளியில் வரலாகாது எனபது என்.எஃப்.டி.யின் எழுதப்படாத விதிகளில் ஒன்று. வெளியே பிரபலம் ஆகி விட்ட ஒன்றை என்.எஃப்.டி.யில் விற்பது அங்கே சரியல்ல.

அதனாலேயே சீக்கிரம் நாவலை முடித்து விட வேண்டும் என்று துடிப்புடன் இருக்கிறேன்.

இத்தனை உற்சாகமான மனநிலையில் வாழ்க்கையில் இருந்தது சொற்பம்தான். ஆனால் இதைக் கொண்டாட ஒரு வைன் கூட அருந்த இயலாது. வெளியே செல்ல பரோல் கிடைக்காது. இரண்டு நாள் பெங்களூர் செல்லலாம். அதற்குப் பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டும். பார்க்கலாம்.

பெட்டியோ… நாவல் என்னுடைய மற்ற புனைவுகளிலிருந்து வித்தியாசமாக இருக்கும்.