க்ராஸ்வேர்ட் விருது – கருந்தேள் ராஜேஷ்

நமது சாருவின் நான் தான் ஔரங்ஸேப் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Conversations with Aurangzeb: A Novel, க்ராஸ்வேர்ட்ஸ் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அட்டகாசமான நாவல். முகலாயர்களைப் பற்றி எத்தனையோ விரிவான தகவல்களை செம்ம ஜாலியான நேரேஷனில் விவரித்திருப்பார் சாரு.

இந்த விருது, வாசகர்களே ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே அனைவரும் Conversations with Aurangzeb: A Novel புத்தகத்துக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஓட்டு அளிக்கும் ப்ராசஸ் சிம்பிள்தான்.

  1. இந்த லிங்க்குக்குள் சென்றால், உங்கள் பெயர், மொபைல் மற்றும் மெயில் ஐடியைக் கேட்கும்.
  2. https://www.crossword.in/pages/crossword-book-awards
  3. பெயர் மற்றும் மொபைல் எண்ணைக் கொடுத்துவிட்டு, அங்கிருக்கும் புத்தகப் பட்டியலில் Translations என்ற பிரிவில் இருக்கும் Conversations with Aurangzeb: A Novel புத்தகத்தை செலக்ட் செய்யவேண்டும்.
  4. உடனேயே அது உங்களுக்கு ஒரு OTP அனுப்பும். அந்த ஓடிபியை எண்டர் செய்தால் உங்கள் ஓட்டு பதிவாகிவிடும்.

இவ்வளவுதான். அனைத்து நண்பர்களும் Conversations with Aurangzeb: A Novel புத்தகத்துக்கு ஓட்டுப் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

– கருந்தேள் ராஜேஷ்