க்ராஸ்வேர்ட் விருது – சில விளக்கங்கள்

இந்த விருது பற்றி கருத்து சொல்லும் என் சக எழுத்தாளர்கள் சிலர் புத்தகத்தைப் படிக்காமல் வாக்கு அளிப்பது சரியல்லவே என்ற அறக் கேள்வியை எழுப்பியிருக்கின்றனர். இப்படி எழுப்பி எழுப்பித்தான் ஞானபீட விருது மலையாளத்துக்கு ஏழெட்டு, கன்னடத்துக்கு ஏழெட்டு, ஹிந்திக்கு ஒன்பது, வங்காளத்துக்கு ஏழெட்டு என்று கொடுக்கப்பட்டது. தமிழுக்கு மட்டும் ரெண்டு. அதுவும் அகிலனுக்கும் ஜெயகாந்தனுக்கும். காரணம் என்ன என்றால், இம்மாதிரி அறக் கேள்விகள்தான். ஏழெட்டு என்று உத்தேசமாக எழுதியிருக்கிறேன். அதற்கும் மேலேயே இருக்கும். நிச்சயம் பாருங்கள், இந்தியாவுக்கு நோபல் கொடுக்கப்பட்டால் அது மலையாளத்துக்கோ வங்கத்துக்கோதான் இருக்கும். தமிழுக்கு இருக்கவே இருக்காது. காரணம், தமிழர்கள் யாவருமே தமிழ் நண்டுகள். அறக் கேள்வி கேட்டு காலைப் பிடித்து இழுத்து விடுவார்கள். ஒருமுறை சாஹித்ய அகாதமியில் என் பெயரை ஒரு சக எழுத்தாளர் சொல்ல, அங்கே பெரிய கலவரமே உருவாகி விட்டதாகச் சொன்னார்.

இப்படியே பிலுக்கிக்கொண்டிருந்தால் எல்லா விருதுகளையும் போல இந்த முறையும் மலையாளத்துக்கே போய்ச் சேரும். ஜேசிபி என்று ஒரு விருது. இருபத்தைந்து லட்சம் பரிசு. முதல் முறையே மலையாளத்துக்குத்தான் போனது. என்னைப் பற்றி பல பொய்களைச் சொல்லி அங்கே என் பெயரை தட்டிக் கொன்றவர் தமிழ்நாட்டின் ஒரு பிரபலம்.

இந்த விருது பற்றியும், வாக்களிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அராத்து எழுதியதை இங்கே பகிர்கிறேன்.

crossword – சாரு நிவேதிதா – ஒரு விளக்கம் : அராத்து

குறும்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஐந்து நூல்களில் இருந்து ஒன்றை ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதைப்பற்றிய பதிவுகளைப் பார்த்து சிலர் சந்தேகம் எழுப்பி இருந்தார்கள்.

குறிப்பாக அமிர்தம் சூர்யா பதிவில் நண்பர்கள் சிலர் கேட்டிருந்தார்கள். சரவண கார்த்திகேயனும் இதைப்பற்றி பதிவொன்று இட்டிருந்தார்.

இந்தப் புத்தகத்தை படிக்காமல் எப்படி ஓட்டுப் போடுவது ?

1) இந்த விருதே மொழிபெயர்ப்புக்கானது. நான் தான் ஔரங்கசீப்பை இங்கே தமிழில் வாசித்தவர்களே அதிகம். இங்கிலீஷில் தமிழ்நாட்டில் ஒரு சிலர் வாசித்திருக்கக் கூடும். பெருமாள் முருகனின் புத்தகத்துக்கும் இதுதான் நிலைமை. அப்படிப் பார்த்தால் யாருமே ஓட்டுப்போட முடியாது.

இன்னொன்று கறாரான அறத்துடன் (!) அணுக வேண்டும் என்றால் தமிழ் + இங்கிலீஷ் இரண்டிலும் வாசித்துப் பார்த்து விட்டு , அதிலும் இடம்பெற்றுள்ள ஐந்தையும் , இரண்டு மொழிகளிலும் வாசித்துப் பார்த்து விட்டுத்தான் (5 + 5) அதில் சிறந்தது எது என ஓட்டுப் போட வேண்டும். ஏனெனில் இது மொழிபெயர்ப்புக்கான விருதல்லவா ? இப்படிப் பார்த்தால் மொத்தமாக 10 ஓட்டுக்கள் கூடத் தேறாது.

2) அரசியல் கட்சிகள் , சினிமா நடிகர்கள் , டாப் டென் படங்கள் , டாப் டென் பாட்டுக்கள் என பல ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இவற்றில் எல்லாம் எல்லோரும் அனைத்தையும் அலசிப்பார்த்து , சீர் தூக்கிப்பார்த்து இதுதான் சிறந்ததென்று முடிவுக்கு வந்து ஓட்டுப்போடுவதில்லை. பின் எப்படி ஓட்டுப்போடுகிறார்கள் ?சிம்பிள். தங்களுக்குப் பிடித்தது அல்லது தங்களுக்குப் பிடித்தவர் என்பதால் ஓட்டுப்போடுகிறார்கள்.

3) இலக்கியம் , வாசிப்பு ஏற்கனவே நாறிப்போய் கிடக்கிறது. எந்த வழியிலேனும் அதற்கொரு வெளிச்சம் கிடைத்தால் கூட நல்லதுதான் என நான் நினைக்கிறேன். அதிகாரத்துக்கு வந்து 5 வருடம் போட்டுத்தள்ளும் ஆபத்து இருக்கும் முதல்வர் , பிரதமர் போன்ற விஷயங்களிலேயே பிடித்தவர் என்ற ஒரே காரணத்துக்காக ஓட்டுப்போடும் பலர் இருக்கையில் , இந்த ஆபத்தில்லாத விருது விஷயத்தில் இவ்வளவு கறாராக எல்லாம் பார்க்கத் தேவையில்லை என்பது என் பார்வை.

4) வெளிப்படையாகச் சொன்னால் இது ஒரு ஸ்மார்ட் மார்கெட்டிங்க். க்ராஸ்வேர்ட் என்னும் நிறுவனம் தன்னை ப்ரொமோட் செய்துகொள்கிறது. இதன் மூலம் சில பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கும் சிறு வெளிச்சம் கிடைக்கிறது. தனக்குப் பிடித்த எழுத்தாளருக்கு ஓட்டுப் போடுவதன் மூலம் வாசகனுக்கு ஒரு சின்ன கனக்டிவிட்டியும் , திருப்தியும் கிடைக்கிறது, அவ்வளவுதான்.

5) இந்த விருதை வென்றால் , அது செய்தியாகும். சில செய்தித் தாள்கள் , பத்திரிகைகள் மற்றும் சில டிஜிட்டல் தளங்களில் இதன் தகவல் வெளிவரும். மேலும் சில நூறு பிரதிகள் விற்கும், அவ்வளவுதான். கவனிக்க சில ஆயிரம் பிரதிகள் கூட விற்காது.

6) என்ன சிறு பயன் எனில் , தமிழ் நாட்டில் இப்படி சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என அவர்களது பெயர்கள் இந்திய அளவிலும் ,உலக அளவிலும் ஒரு சில வாசகர்கள், பதிப்பகங்கள் மற்றும் இண்டெலிஜென்ஷியாவுக்கு போய்ச் சேரும். கவனிக்க , இதுவும் மிகக் குறைந்த அளவிலேதான் போய்ச் சேரும்.

7) கடைசியாக , அனைத்துக் கட்சிக் கொள்கைகளையும் கரைத்துக் குடித்து , அனைத்துக் கட்சி தேர்தல் அறிக்கைகளையும் படித்து சீர் தூக்கிப் பார்த்தா ஓட்டுப் போடுகிறோம்? அப்படியும் தேர்தலில் ஓட்டுப்போடுவது கடமை என்று ஆக்கி வைத்திருக்கிறோம் அல்லவா ? ஓட்டுப்போடவில்லை எனில் குற்றவுணர்ச்சிக்கே ஆளாக்குகிறோம். அதுபோல இதைப்போன்ற விருது விஷயங்களில் , படிக்கவில்லை எனினும் , ஒரு வாசகனாக ஓட்டுப்போடுவதை ஒரு கடமை எனச் சொல்லுவோம். முடிஞ்சா படிச்சிப் பாத்து ஓட்டுப் போடுங்க . யார் படிக்க வேண்டாம் எனச் சொன்னது ? ஓட்டுப் போடுவதும் , போடாததும் அவரவர் விருப்பம். ஆனா , படிக்கல , அதனால ஓட்டுப்போடல என்று வறட்டுக் காமடி செய்துகொண்டிருக்கக் கூடாது.

வாக்கு அளிப்பதற்கான லிங்க்: https://www.crossword.in/pages/crossword-book-awards

எப்படி வாக்களிப்பது?

  1. இந்த லிங்க்குக்குள் சென்றால், உங்கள் பெயர், மொபைல் மற்றும் மெயில் ஐடியைக் கேட்கும்.
  2. https://www.crossword.in/pages/crossword-book-awards
  3. பெயர் மற்றும் மொபைல் எண்ணைக் கொடுத்துவிட்டு, அங்கிருக்கும் புத்தகப் பட்டியலில் Translations என்ற பிரிவில் இருக்கும் Conversations with Aurangzeb: A Novel புத்தகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  4. உடனேயே அது உங்களுக்கு ஒரு OTP அனுப்பும். அந்த ஓடிபியை அதற்கான இடத்தில் நிரப்பினால் உங்கள் ஓட்டு பதிவாகிவிடும்.