அட்டைக்கத்தியுடன் போர்க்களத்தில் இறங்கியவன்

க்ராஸ்வேர்ட் விருது குறும்பட்டியல் வெளிவந்துள்ளது. அதில் என்னுடைய நான் தான் ஔரங்ஸேப் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Conversations with Aurangzeb: A Novelஉம் இடம் பெற்றுள்ளது. கூடவே கேரள எழுத்தாளர் ஏ.ஜே. தாமஸின் நூலும் உள்ளது. இந்நேரம் கேரளத்தில் மாத்ருபூமியிலும், மலையாள மனோரமாவிலும் இது பற்றிய விரிவான செய்தி அவரது புகைப்படத்துடன் முதல் பக்கத்தில் வந்திருக்கும். ஒவ்வொரு தினசரிக்கும் லட்சக்கணக்கில் வாசகர்கள் உண்டு. ஒவ்வொன்றுக்குமாக முப்பதாயிரம் என்றாலும் இந்நேரம் அறுபதாயிரம் பேர் தாமஸின் நூலுக்கு வாக்களித்திருப்பார்கள். எனக்கு முந்நூறு பேர் வாக்களித்திருப்பார்கள். இதுதான் அட்டைக்கத்தியுடன் களம் இறங்கியிருக்கும் தமிழ் எழுத்தாளனின் கதை.

இதுவே ஒரு சினிமாவுக்கு நடந்திருந்தால் தமிழ்நாடே இரண்டு பட்டிருக்கும். இது இலக்கியம். என்ன செய்ய? ஊடக நண்பர்கள்தான் இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இத்தனைக்கும் ஔரங்ஸேப் நாவல் வெகுவாகக் கொண்டாடப்பட்ட ஒன்று. பிஞ்ஜ் செயலியில் அது வாரம் ஒருமுறை என்று தொடங்கப்பட்ட போது, எங்களால் காத்திருக்க முடியாது என்று சொன்ன வாசகர்கள் வாரம் மூன்று முறை என்று என்னை எழுத வைத்தார்கள். பேய் போல் எழுதினேன் அந்த நாவலை. பிஞ்ஜில் அந்த நாவலை ஏதோ கல்கியின் நாவலைப் போல் வாசித்த ஒருவருக்குக் கூட அது க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது என்ற செய்தி தெரியாது. ஏனென்றால், இங்கே பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் இலக்கியம் சம்பந்தப்பட்ட செய்திகளே வருவது இல்லை.

மேற்படி காரணங்களால்தான் அறுபதாயிரத்தோடு முந்நூறு போட்டி போட வேண்டியிருக்கிறது. இதை மாற்ற வேண்டியது உங்கள் கையில்தான் இருக்கிறது.

இந்த விருது, வாசகர்களே ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே அனைவரும் Conversations with Aurangzeb: A Novel புத்தகத்துக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஓட்டு அளிக்கும் முறை எளிதானதுதான்.

  1. இந்த லிங்க்குக்குள் சென்றால், உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியைக் கேட்கும்.
  2. https://www.crossword.in/pages/crossword-book-awards
  3. பெயர் மற்றும் மொபைல் எண்ணைக் கொடுத்துவிட்டு, அங்கிருக்கும் புத்தகப் பட்டியலில் Translations என்ற பிரிவில் இருக்கும் Conversations with Aurangzeb: A Novel புத்தகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  4. உடனேயே அது உங்களுக்கு ஒரு OTP அனுப்பும். அந்த ஓடிபியை எண்டர் செய்தால் உங்கள் ஓட்டு பதிவாகிவிடும்.

https://www.crossword.in/pages/crossword-book-awards