அரிய வாய்ப்பு

என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டும், க்ராஸ்வேர்ட் புத்தக விருது நான் தான் ஔரங்ஸேபின் ஆங்கில மொழிபெயர்ப்பான Conversations with Aurangzeb நாவலுக்குக் கிடைத்திருப்பதைக் கொண்டாடும் விதமாகவும் ஸீரோ டிகிரி பதிப்பகம் என் நூல்களுக்கு முப்பது சதம் தள்ளுபடி அறிவித்திருக்கிறது.

பொதுவாக தற்போது புத்தக விலை அதிகரித்திருக்கிறது என்பது ஒரு குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அது உண்மையும்தான். இரண்டு காரணங்கள்: காகித விலை இரட்டிப்பாகி இருக்கிறது. பல தினசரிகள் குறைந்த பட்சம் நாலு பக்கம் குறைத்து விலையையும் அதிகரித்துள்ளன. இரண்டாவது காரணம், இலக்கிய நூல்களை யாரும் வாங்குவதில்லை. அதிக எண்ணிக்கையில் புத்தகம் விற்றால்தான் விலையைக் குறைக்க முடியும்.

இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையிலும் ஸீரோ டிகிரி பதிப்பகம் என் நூல்களுக்கு முப்பது சதம் தள்ளுபடி அறிவித்திருக்கிறது. இந்த அரிய வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் சுமாராக எண்பது நூல்கள் எழுதியிருக்கிறேன். ராஸ லீலா, எக்ஸைல், நான்தான் ஔரங்ஸேப் ஆகிய நாவல்கள் ஆயிரம் பக்கங்கள். சுமார் 900 ரூபாய் விலையுள்ள நூல்கள் இப்போது 600 ரூ. என் நூல் பட்டியலைப் பார்த்தால் உங்கள் முன் ஒரு தங்கச் சுரங்கமே தென்படும்.

இந்தச் சலுகை டிசம்பர் 23 வரை மட்டுமே.

விவரங்கள் கீழே: