இந்தப் பேருரைக்கான விஷயங்களை நான் என்னுடைய இருபத்தேழாவது வயதிலிருந்து பயின்று கொண்டிருக்கிறேன். இதுவரை இது பற்றி நான் ஒரு வார்த்தை எழுதியதில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாக மாதம் ஒருமுறை என் நண்பர்களிடம் இவற்றை வழங்கிக்கொண்டிருக்கிறேன். இப்போது முதல் முதலாக ஒரு பேருரையாகத் தர இருக்கிறேன். இதையெல்லாம் ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் பாடமாக எடுத்தால் பல நூறு யூரோக்கள் கிடைக்கும். பணம் எனக்கு வேண்டாம். ஒரு முறை கேட்டால் புரியாது என்பதால் ஒரு குறிப்பேடும் எழுதுகோலும் எடுத்து வாருங்கள் என்று மட்டுமே கேட்டுக் கொள்கிறேன். இப்படி ஒரு பேருரைக்கான முகாந்திரத்தை புருஷன் நாவல் வழங்கியிருப்பது எனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி. வசதி படைத்த யாராவது பேருரை முடிந்து ஒரு சீலே வைன் போத்தல் கொடுத்தால் நலம்.
பேருரை: சனிக்கிழமை மாலை ஆறு மணி. கோவாவில். இடம் போன்ற விவரங்களை அராத்துவிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.