அமுதும் நஞ்சும்

ஒரே ஆசாமி எழுதும் எழுத்து ஒரு மனிதருக்கு அமிர்தமாகவும் இன்னொருவருக்கு நஞ்சாகவும் இருப்பது எப்படி என்பதுதான் எனக்குப் புரியாத புதிராக உள்ளது.  எனக்கு வரும் வசை கடிதங்களைப் பற்றி நான் அவ்வப்போது புலம்புவது உங்களுக்குத் தெரியும்.  ஆனால் அதே எண்ணிக்கையில் பாராட்டுக் கடிதங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.  இரண்டையும் ஒரே மாதிரிதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறது புத்தி.  ஆனால் சில சமயங்களில் – இடைவிடாமல், ஓய்வு எடுக்காமல் எழுதும் சமயங்களில் – வசை கடிதங்கள் புத்தியையும் மீறி மனதை பாதித்து விடுகிறது.  இது ஒரு பயிற்சிதான்.  இன்று கூட நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஒரு மணி நேரம் காங்கிரஸ் கட்சியின் அருமை பெருமைகளை விளக்கிப் பேசிக் கொண்டு வந்தார்.  என்னிடம் அல்ல; ராகவனிடம்.  ராகவனும் எவ்வளவோ அவரிடம் மல்லுக்கு நின்று பார்த்தார்.  ஒரு மணி நேரமும் அமைதி காத்தேன்.  அவர்களை விட்டு விட்டு வேறு பாதையில் சென்றிருக்கலாம்.  ஆனால் அமைதியாக கவனிப்பது எப்படி அல்லது அமைதியாக இருப்பது எப்படி என்ற பயிற்சியை அந்த ஒரு மணி நேரமும் நான் மேற்கொண்டேன்.  ஆக, வசை கடிதங்களையும் பாராட்டுக் கடிதங்களையும் எதிர்கொள்வதும் ஒரு பயிற்சிதான்.

charu,

u replied my email.thanks..
tears coming out of my eyes as I write this…u made my day…

I feel like I should call u as dad…thanks…I don’t know why I m crying now..thanks for ur post to my question…..

sriram

Comments are closed.