ஸ்வான் லேக்…

டாக்டர் ஸ்ரீராம் அந்திமழை கேள்வி பதில் பற்றி இப்படி எழுதியிருந்தார்:

ஹாய் சாரு,

அந்திமழையில் இதைப் படித்ததும் தானாக கண்ணீர் வந்து விட்டது.
“ஒருநாள் அவர் ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது ராகவன் அவரிடம் சென்று இது ட்சைக்காவ்ஸ்கியின் ஸ்வான் லேக் தானே என்று கேட்டதும் அவர் நெகிழ்ந்து விட்டார்.  அந்த மனிதர் எதற்காக இதையெல்லாம் வாசிக்கிறார்?  அந்தப் பூங்காவில் உள்ள அத்தனை விருட்சங்களுக்காகவும்தான்.  அந்த விருட்சங்கள் அவருடைய சங்கீதத்தை ரசிப்பதை நான் உணர்கிறேன்.  அவரும் அந்த விருட்சங்களும் நானும் ராகவனும் ஒன்றாக இணையும் அற்புதத் தருணம் அந்தக் காலை நேரம்.”
ஸ்ரீராம்.
நான் தில்லியில் 1978-90 காலகட்டத்தில் இருந்த போது ஸ்வான் லேக்கை பாலே நடன நாடகமாக நேரடியாகவே பார்த்திருக்கிறேன்.  அப்போது ரஷ்யாவில் பிரபலமாக இருந்த பாலே குழுக்கள் தில்லிக்கு வரும்.  அப்படிப்பட்ட ஒரு ஸ்வான்லேக் பாலே நடன நாடகம் இது. தயவுசெய்து உங்கள் வாழ்வில் இரண்டு மணி நேரத்தைச் செலவு செய்து இந்த பாலேயைப் பாருங்கள்.  இன்னமும் ரஷ்யாவில் அவர்களுடைய கலையை எப்படியெல்லாம் போஷித்து வளர்க்கிறார்கள் என்று பாருங்கள்.  நம்முடைய கலைகள் அனைத்தும் அழிந்து போய் அது எல்லாவற்றின் இடத்தையும் ஆபாச சினிமா பிடித்துக் கொண்டிருக்கிறது.

http://www.youtube.com/watch?v=9rJoB7y6Ncs

பின்வருவது ஸ்வான் லேக் ஹார்மோனிகாவிலும் கிதாரிலும்.  முழுவதும் அல்ல, ஒரு சின்ன பீஸ்.

 

 

Comments are closed.