எழுத்தாளனின் நிலை

தமிழ்நாட்டில் எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மரியாதை பற்றி நான் பல ஆண்டுகளாக எழுதியும் புலம்பியும் வருகிறேன்.  பின்வரும் சுட்டி ஜெயமோகன் எழுதியது.  அதில் ஜெயமோகன் என்ற பெயரை நீக்கி விட்டு சாரு நிவேதிதா என்றும் நீங்கள் போட்டுக் கொள்ளலாம்.  வெண் முரசுவுக்கு பதில் என்னுடைய நாவல் ஒன்றின் பெயரையும்.  நிலைமை அதேதான்.  அதனால்தான் அதற்கு இங்கே இணைப்பு தருகிறேன். ஜெயமோகனின் சக எழுத்தாளர் வட்டத்திலோ, நட்பு வட்டத்திலோ நான் இல்லாவிட்டாலும் ஒரு எழுத்தாளனுக்குத் தமிழில் கிடைக்கும் மரியாதை என்ற வகையில்… சரி விடுங்கள்… சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பது அலுப்பாக இருக்கிறது.  ஆனால் ஒரு விஷயம். இதற்கே இப்படி என்றால் புதிய எக்ஸைல் வெளியீட்டுக்கு நான் யோசித்து வைத்திருக்கும் திட்டங்களைக் கேட்டால் அன்பர்கள் என்ன செய்வார்கள் என்றே யூகிக்க முடியவில்லை.  உதாரணமாக, புதிய எக்ஸைலில் என் கையெழுத்து வேண்டுமானால் அதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.  எவ்வளவு வைக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறேன்.  130 ரூ விலை உள்ள தன் நாவலில் தன் கையெழுத்தைப் போட்டுக் கொடுக்க வேண்டுமானால் அதன் விலை 600 என்று சொல்கிறார் சேட்டன் பகத்.  அவருடைய பக்கங்களைப் பார்க்கவும்.  எனவே, இனிமேல் என் கையெழுத்து இலவசமாகக் கிடைக்காது.

http://www.jeyamohan.in/?p=64754&utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+jeyamohan+%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%29

Comments are closed.